ரம்யா
திவ்யா ஸ்பந்தனா(29 நவம்பர் 1982),[1] மக்களால் அறியப்படும் ரம்யா, இவர் வொக்கலிகர் இனத்தில் பிறந்தவர், இவர் தென்னிந்தியத் திரைப்பட நடிகையும் கர்நாடக மாநிலத்திலுள்ள மாண்டியா தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். அவரின் தங்கை கீர்த்தனா தேவி என்றழைக்கப்படும் சஹானா இப்போது திரைத் துறையில் கால் பதித்துள்ளார்.[3]. கன்னடத் திரையுலகில் அறிமுகமான இவர், தமிழ் மற்றும் தெலுங்கு முதலிய மொழிகளிலும் நடித்துள்ளார். திவ்யா தனது பள்ளிப்படிப்பை ஜெயின்ட் ஹில்டா(ஊட்டி), மற்றும் சேக்ர்ட் ஹர்ட் பள்ளி (சர்ச் பார்க்) (சென்னை)யிலும் முடித்தார். பட்டப்படிப்பை பெங்களுரூவில் உள்ள செயின்ட் ஜோசப் கல்லூரியில் துவங்கி பாதியில் கைவிட்டார்.
ரம்யா, மாண்டியா தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் | |
---|---|
![]() | |
பிறப்பு | திவ்யா ஸ்பந்தனா நவம்பர் 29, 1982[1] பெங்களூர், கர்நாடகா, இந்தியா[2] |
தேசியம் | இந்தியன் |
மற்ற பெயர்கள் | அதிர்ஷ்ட நட்சத்திரம்[1] குத்து ரம்யா |
பணி | நடிகை, அரசியல்வாதி |
தமிழ்ப் படங்கள்தொகு
ஆண்டு | திரைப்படத்தின் பெயர் | கதாப்பாத்திரம் | மொழி | குறிப்பு |
---|---|---|---|---|
2004 | குத்து | அஞ்சலி | தமிழ் | |
2004 | கிரி | தமிழ் | ||
2007 | பொல்லாதவன் | ஹேமா | தமிழ் | திவ்யா ஸ்பந்தனா |
2008 | தூண்டில் (திரைப்படம்) | திவ்யா | தமிழ் | |
2008 | வாரணம் ஆயிரம் | பிரியா | தமிழ் | |
2011 | சிங்கம் புலி | ஸ்வேதா | தமிழ் | |
2013 | காதல் 2 கல்யாணம் | அனிதா | தமிழ் | தாமதமாகிறது |
குறிப்புகள்தொகு
- ↑ 1.0 1.1 1.2 Shyam Prasad, S. (2009-07-23). "No filmy husband for me". Bangalore Mirror.com. 2012-03-17 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2010-07-14 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Suresh, Sunayana (2010-11-29). "Yes, I'm seeing someone, says Ramya". DNA. http://www.dnaindia.com/entertainment/report_yes-i-m-seeing-someone-says-ramya_1473782. பார்த்த நாள்: 2013-06-24.
- ↑ Suresh, Sunayana, S. (2013-08-24). "தேர்தல் முடிவுகள்". ibnlive.in.com. 2013-08-27 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2013-08-24 அன்று பார்க்கப்பட்டது.