கணேஷ் வெங்கட்ராமன்

தமிழ்த் திரைப்பட நடிகர்

கணேஷ் வெங்கட்ராமன் இவர் ஒரு மாடல் மற்றும் தென்னிந்தியத் திரைப்பட நடிகர் ஆவார். இவர் அபியும் நானும் மற்றும் உன்னைப்போல் ஒருவன்' போன்ற திரைப்படங்களின் மூலம் தமிழ் சினிமாவுக்கு பரிச்சயமானார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற தென்னிந்திய மொழி திரைப்படங்களில் நடித்தார். இவர் கமலஹாசன், அமிதாப் பச்சன், மோகன்லால், போன்ற முன்னணி நடிகர்களுடன் பணியாற்றியுள்ளார். இவருக்கும் நிஷா கிருஷ்ணன் என்ற நடிகையுடன் 22 நவம்பர் 2015 அன்று திருமணம் நடைபெற்றது.

கணேஷ் வெங்கட்ராமன்
2015
பிறப்புகணேஷ் வெங்கட்ராமன்
20 மார்ச்சு 1980 (1980-03-20) (அகவை 43)
மும்பை, இந்தியா
பணிமாடல், திரைப்பட நடிகர்
உயரம்6 அடி 1 அங்குலம்
வாழ்க்கைத்
துணை
நிஷா கிருஷ்ணன்

ஆரம்ப வாழ்க்கை தொகு

கணேஷ் மும்பையில் பிறந்து வளர்ந்தார். இவரின் அப்பா அம்மா தமிழ்நாட்டில் உள்ள சிதம்பரத்தைச் சேர்ந்தவர்கள். இவர் 2003ம் ஆண்டு நடந்த "மிஸ்டர் இந்தியா 2003" வெற்றியாளர் ஆவார். அதே ஆண்டில் துருக்கி நாட்டின் தலைநகர் இஸ்தான்புல்லில் நடைபெற்ற சூப்பர் மாடல் போட்டியில் முதல் ஐந்து போட்டியாளர்களில் ஒருவராக வந்தார்.

இவருடைய கல்லூரி நாட்களில், இவருக்கு மாடலிங் மற்றும் நடிப்பு நோக்கி கவனம் இருந்தது. தனது கல்லூரியில் கைப்பந்து அணியின் தலைவராகவும் இருந்தார். முறையான கல்வியை முடித்த பின்னர், மென்பொருள் வல்லுநராக ஒரு புகழ்பெற்ற நிறுவனத்தில் இவர் இரண்டு ஆண்டுகள் பணிபுரிந்தார். இவர் பல விளம்பரப் படங்களிலும் நடித்தார். இயக்குனர் முருகதாஸ் ஒரு விளம்பரத்துக்காக கணேஷ் வெங்கட்ராமனை தேர்வு செய்தார்.

மாடல் தொகு

இவர் இதுவரைக்கும் 200 விளம்பரப் படங்களில் நடித்துள்ளார்.

சின்னத்திரை தொகு

இவர் ஜெயா டிவியில் ஒளிபரப்பான மாயாவி 3டி தொடர் முலம் சின்னத்திரையில் அறிமுகம் ஆனார். உலகில் முதல் முதலில் தயாரிக்கப்பட்ட 3டி தொடர் இதுவாகும்.

திரைப்படங்கள் தொகு

ஆண்டு படம் பங்கு மொழி குறிப்புகள்
2006 தி அஞ்ச்ஸ் Rochak ஹைதராபாத் உருது
2008 அபியும் நானும் ஜோகிந்தர் சிங் தமிழ்
2009 உன்னைப்போல் ஒருவன் அரிப் கான் தமிழ்
ஈநாடு தெலுங்கு
2010 காந்தகார் சூர்யா நாத் சர்மா மலையாளம்
2011 கோ அவராகவே தமிழ் சிறப்பு தோற்றம்
2012 பனித்துளி சிவா தமிழ்
தமருகம் ராகுல் தெலுங்கு
2013 தீயா வேலை செய்யனும் குமாரு ஜார்ஜ் தமிழ்
சம்திங் சம்திங் தெலுங்கு
சந்திரா ஆர்யா கன்னடம்
தமிழ்
இவன் வேற மாதிரி அரவிந்தன் ஐபிஎஸ் தமிழ்
பள்ளிக்கூடம் போகாமலே தமிழ் படப்பிடிப்பில்
2014 தும் ஹோ யாரா சிவா ஹிந்தி
2015 கன்ஸ் ஆஃப் பெனாரஸ் ஹிந்தி படப்பிடிப்பில்
தனி ஒருவன் சக்தி தமிழ்
அச்ஹர்ரம் தமிழ் படப்பிடிப்பில்
2016 முறியடி விஜய் தமிழ் தாமதம்

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கணேஷ்_வெங்கட்ராமன்&oldid=3176217" இருந்து மீள்விக்கப்பட்டது