நிஷா கிருஷ்ணன்
இந்திய நடிகை
நிஷா கிருஷ்ணன் என்பவர் தமிழ்த் திரைப்பட, மற்றும் தொலைக்காட்சி நடிகை ஆவார். இவர் சன் தொலைக்காட்சியின் மகாபாரதத் தொடரில் திரெளபதி வேடத்தில் நடித்ததன் மூலம் அறியப்படுகிறார். இவர் சன் டிவியின் சூரிய வணக்கம் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்.
நிஷா கிருஷ்ணன் | |
---|---|
பிறப்பு | நிஷா கிருஷ்ணன் சென்னை, இந்தியா |
பணி | மாடல், திரைப்பட நடிகர் |
உயரம் | 6 அடி 1 அங்குலம் |
வாழ்க்கைத் துணை | கணேஷ் வெங்கட்ராமன் |
தொழில் வாழ்கை
தொகுஇவர் சன் தொலைக்காட்சியில் கிச்சன் கலாட்டா என்ற நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கினார். இவர் சில தமிழ்த் திரைப்படங்களில் துணை நடிகையாகவும் நடித்துள்ளார்.
சொந்த வாழ்கை
தொகுசென்னையில் பிறந்தவரான இவர், கணேஷ் வெங்கட்ராமன் என்ற நடிகரை நவம்பர் 22, 2015 அன்று மணந்தார். [1]