கோ (திரைப்படம்)
கே. வி. ஆனந்த் இயக்கத்தில் 2011 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
கோ என்பது கே. வி. ஆனந்த் இயக்கத்தில் 2011 இல் வெளிவந்த ஒரு தமிழ் திரைப்படம் ஆகும். இதில் ஜீவா, அஜ்மல் அமீர், கார்திகா நாயர் மற்றும் பியா பாஜ்பாய் போன்ற நடிகர்கள் நடித்திருந்தனர். இத் திரைப்படத்தின் நாயகனான ஜீவா ஒரு புகைப்பட கலைஞர் மற்றும் ஊடகவியலாளராகத் தோன்றுகின்றார். இந்தக் கதாபாத்திரம் தனது நிஜ வாழ்க்கையை சிறிதளவு ஒத்திருப்பதாக திரைப்பட இயக்குனர் கே.வி. ஆனந்த் தெரிவித்தார்[1].
படத்தின் காட்சிகள் சென்னை, சீனா, நோர்வேயில்[2] படமாக்கப்பட்டுள்ளது. நோர்வேயில் படமாக்கப்பட்ட முதல் தமிழ்ப் படமாக இப்படம் உள்ளது. பேர்கன் நகரத்தில் ஒரு பாடல் படமாக்கப்பட்டது. மேலும் மேற்கு நோர்வேயில் துரொல்துங்கா, ஸ்தோல்ஹெய்ம், பிரெய்க்கஸ்தூலன் என்ற இடங்களிலும் படக்காட்சிகள் எடுக்கப்பட்டன.
கோ | |
---|---|
இயக்கம் | கே. வி. ஆனந்த் |
தயாரிப்பு | குமார் ஜெயராமன் |
கதை | கே. வி. ஆனந்த் சுபா |
இசை | ஹாரிஸ் ஜயராஜ் |
நடிப்பு | ஜீவா அஜ்மால் அமீர் கார்த்திகா நாயர் பியா பாஜ்பாய்i |
ஒளிப்பதிவு | ரிச்சார்ட் எம்.நாதன் |
படத்தொகுப்பு | அந்தோனி |
கலையகம் | ஆர். எஸ். இன்போடெயின்மென்ட் |
விநியோகம் | ரெட் ஜெயண்ட் மூவீஸ் |
வெளியீடு | ஏப்ரல் 22, 2011 |
ஓட்டம் | 166 நிமிடங்கள் |
நாடு | இந்தியா{{{}}} |
மொழி | தமிழ் |
மொத்த வருவாய் | ₹50 கோடி |
உசாத்துணைகள்
தொகு- ↑ "Ko Movie Review". Archived from the original on 2012-01-28. பார்க்கப்பட்ட நாள் 2011-05-06.
- ↑ "Ko at Western Norway Film Commission". Western Norway Film Commission. 2010-10-23. Archived from the original on 2011-07-28. பார்க்கப்பட்ட நாள் 2011-04-25.