கே. வி. ஆனந்த்

தமிழ்த் திரைப்பட ஒளிப்பதிவாளர்

கே. வி. ஆனந்த் (K. V. Anand, 30 அக்டோபர் 1966 – 30 ஏப்ரல் 2021) ஒரு தென்னிந்தியத் திரைப்பட ஒளிப்பதிவாளரும், இயக்குநரும் ஆவார். இவர் கனா கண்டேன் (2005), அயன் (2009) திரைப்படங்கள் மூலம் மக்களிடையே சிறந்த இயக்குநராகப் பெயர் பெற்றார். அதற்கு முன்னரே, பல இந்தி, தமிழ், மலையாளம், தெலுங்குத் திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவாளராகப் பணியாற்றி உள்ளார். 1995-ஆம் ஆண்டு அவர் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய முதல் திரைப்படம் தென்மாவின் கொம்பத்து என்ற மலையாளத் திரைப்படத்திற்காக சிறந்த ஒளிப்பதிவிற்கான தேசிய விருது பெற்றுள்ளார். 1999ஆம் ஆண்டு சங்கரின் இயக்கத்தில் வெளிவந்த முதல்வன் திரைப்படத்தில் பணியாற்றினார். அப்போது தனது நுட்பமான ஒளிப்பதிவு திறமைக்காகவும், பிரம்மாண்டத்திற்காகவும் பாராட்டப்பட்டார்.[3]

கே. வி. ஆனந்த்
பிறப்பு(1966-10-30)30 அக்டோபர் 1966
பூங்கா நகர், சென்னை, தமிழ்நாடு, இந்தியா
இறப்பு30 ஏப்ரல் 2021(2021-04-30) (அகவை 54)[1]
சென்னை,தமிழ்நாடு, இந்தியா
தேசியம்இந்தியர்
பணிஒளிப்பதிவாளர்
திரைப்பட இயக்குனர்
செயற்பாட்டுக்
காலம்
1994–2021
பெற்றோர்வெங்கடேசன்
அனசூய வெங்கடேசன்
பிள்ளைகள்சினேகா
சாதனா[2]

இளமைக் காலம்

தொகு

ஆனந்த் 1966 அக்டோபர் 30 அன்று இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள சென்னையில் கரிமனல் முணுசாமி வெங்கடேசன் மற்றும் அனசூயா வெங்கடேசன் ஆகியோருக்கு பிறந்தார். இவர் குழந்தை பருவத்தில் பழவேற்காட்டில் வளர்ந்தார். பின்னர் ஜூன் 1986 இல் துவாரகதாஸ் கோவர்தன்தாஸ் வைஷ்ணவ கல்லூரியில் இயற்பியலில் இளங்கலை பட்டம் பெற்றார். பின்னர் சென்னை இலயோலாக் கல்லூரியில், முதுகலை பட்டம் பெற்றார். ஆனந்த் கல்லூரியின் வருடாந்திர இறுதி நாட்களில் இமயமலையில் மலையேற்றப் பயணங்களில் பங்கேற்றார். இந்தியாவின் பல்வேறு தொலைதூர இடங்களுக்கு, அவரது ஆய்வுப் பயணங்கள் புகைப்படம் எடுப்பதில் அவருக்கு ஆர்வத்தைத் தூண்டின. ஆனந்த், கல்லூரியில் மாநில மற்றும் தேசிய அளவிலான புகைப்பட போட்டிகளில் பங்கேற்றார். அவரது காட்சி படங்கள் அவருக்கு ஏராளமான புகைப்பட விருதுகளைப் பெற்றன.

இறப்பு

தொகு

கொரோனா தொற்று பாதிப்புக்கு உள்ளாகி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கே. வி. ஆனந்த் வேறு எந்த நோய் அறிகுறிகளும் இல்லாத நிலையில், ஏப்ரல் 30, 2021 அன்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டு அதிகாலை 3 மணியளவில் காலமானார்.[4][5]

திரைப்படங்கள்

தொகு

ஒளிப்பதிவாளராக

தொகு

மூலம்:[6]

ஆண்டு திரைப்படம் மொழி
1994 தென்மாவின் கொம்பத்து மலையாளம்
மின்னரம் மலையாளம்
1995 புண்யா பூமி நா தேசம் தெலுங்கு
1996 காதல் தேசம் தமிழ்
1997 சந்திரலேகா மலையாளம்
1997 நேருக்கு நேர் தமிழ்
1998 டோலி சஜா கே ரக்னா இந்தி
1999 முதல்வன் தமிழ்
2000 ஜோஷ் இந்தி
2001 நாயக் இந்தி
2002 விரும்புகிறேன் தமிழ்
த லெஜன்ட் ஆஃப் பகத்சிங் இந்தி
2003 பாய்ஸ் தமிழ்
2004 செல்லமே தமிழ்
2004 காக்கி இந்தி
2007 சிவாஜி: தி பாஸ் தமிழ்
2007 ஹீரோவா? சீரோவா? தமிழ்

இயக்குனராக

தொகு

மூலம்:[6]

ஆண்டு திரைப்படம் மொழி குறிப்புகள்
2005 கனா கண்டேன் தமிழ்
2009 அயன் தமிழ்
2010 கோ தமிழ்
2012 மாற்றான் தமிழ்
2015 அனேகன் தமிழ்
2017 கவண் தமிழ்
2019 காப்பான் தமிழ்

நடிகராக

தொகு

மூலம்:[6]

மேற்கோள்கள்

தொகு
  1. Director and cinematographer K.V. Anand no more. The Hindu. 30 April 2021.
  2. What happened to director K. V. Anand? Everything that you need to know about him. Republic World. 30 April 2021.
  3. http://silverscreen.in/features/man-moment-kv-anand-interview/
  4. அபிரபல திரைப்பட இயக்குநர் கே.வி. ஆனந்த் காலமானார். தினமணி இதழ். 30 ஏப்ரல் 2021. {{cite book}}: Check date values in: |year= (help)
  5. பிரபல இயக்குநரும், ஒளிப்பதிவாளருமான கே.வி.ஆனந்த் காலமானார்: திரையுலகினர் அதிர்ச்சி. தி ஹிந்து தமிழ் இதழ். 30 ஏப்ரல் 2021. {{cite book}}: Check date values in: |year= (help)
  6. 6.0 6.1 6.2 "K.V. Anand - Movies, Biography, News, Age & Photos". BookMyShow. பார்க்கப்பட்ட நாள் 2021-04-30.

வெளிப்புற இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கே._வி._ஆனந்த்&oldid=3954113" இலிருந்து மீள்விக்கப்பட்டது