முதன்மை பட்டியைத் திறக்கவும்

அனேகன் இந்திய திரையுலகில், இயக்குனர் கே. வி. ஆனந்த் இயக்கிய தமிழ்த் திரைப்படமாகும். ஏ.ஜி.எஸ் நிறுவனத்தின் தயாரிப்பிலும், ஹாரிஸ் ஜெயராஜின் இசையிலும், தனுஷ், அமைரா தாஸ்தூர், கார்த்திக், அதுல் குல்கர்னி மற்றும் பலரது நடிப்பிலும் உருவானது. மேலும் ஓம்பிரகாஷ் ஒளிப்பதிவாளராகவும், ஆன்டனி படத் தொகுப்பாளராகவும் இருந்தனர். இப்படத்தின் படப்பிடிப்பு ஆவணி மாதம் 17ம் நாள் (2 செப்டம்பர் 2013) புதுச்சேரியில் துவங்கியது.[1]

அனேகன்
அனேகன் படச்சித்திரம்
இயக்குனர்கே. வி. ஆனந்த்
தயாரிப்பாளர்கல்பாத்தி S அகோரம்
கல்பாத்தி S கணேஷ்
கல்பாத்தி S சுரேஷ்
கதைசுபா
இசையமைப்புஹாரிஸ் ஜயராஜ்
நடிப்புதனுஷ்
அமைரா தாஸ்தூர்
கார்த்திக்
ஒளிப்பதிவுஓம் பிரகாஷ்
படத்தொகுப்புஆன்டனி
கலையகம்AGS நிறுவனம்
வெளியீடு13 பிப்ரவரி 2015
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள்தொகு

இசைதொகு

Untitled

ஹாரிஸ் ஜயராஜ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இவர் இயக்குனர் கே. வி. ஆனந்துடன் தொடர்ந்து 4வது முறையாக இணைந்து பணியாற்றியுள்ளார்.

இப்படத்தில் மொத்தம் 6 பாடல்கள். சோனி நிறுவனத்தின் மூலம் 2014ம் ஆண்டு நவம்பர் 9ம் நாள் படத்தின் இசை வெளியிடப்பட்டது. சங்கர் மகாதேவன், C.S.அமுதன், திப்பு ஆகியோர் நீண்ட இடைவெளிக்குப் பின் ஹாரிஸ் ஜயராஜுடன் இப்படத்தில் இணைந்து பணியாற்றியுள்ளனர்.

எண் தலைப்புபாடகர்(கள்) நீளம்
1. "டங்கா மாரி ஊதாரி"  தனுஷ், மரண கானா விஜி, நவீன் மாதவ் 05:42
2. "ரோஜா கடலே"  சங்கர் மகாதேவன், சுனிதி சௌஹான், சின்மயி 05:20
3. "ஆத்தாடி ஆத்தாடி"  பவதாரிணி, திப்பு, தனுஷ், அபய் ஜோத்புர்கர் 05:52
4. "யோலோ (YOLO - You Only Live Once)"  ஷாயில் ஹடா, ரம்யா என்.எஸ்.கே., ரிச்சார்ட், மெக் விக்கி, ஈடன் 04:38
5. "தொடுவானம்"  ஹரிஹரன், சக்திஸ்ரீ கோபாலன் 05:15
6. "தெய்வங்கள் இங்கே"  ஸ்ரீராம் பார்த்தசாரதி 03:30
மொத்த நீளம்:
30:17

சந்தைப்படுத்துதல்தொகு

இப்பட முன்னோட்டத்தின் முதற்கட்டமாக, படத்தின் முதல் விளம்பரச் சித்திரம் ஆவணி மாதம் 16ம் நாள் (2013ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 1ஆம் நாள்) வெளியிடப்பட்டது.[2] இதன் சிறப்பம்சம், படத்தின் பெயர் இலட்சனை, விளையாட்டுப் பலகையைப் (Gamepad) போல் வடிவமைக்கப்பட்டிருந்ததாகும்[3]. படத்தின் சில புகைப்படங்கள், விளம்பர சுவரொட்டிகள், 2013ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 24ம் நாள் வெளியிடப்பட்டது[4]. மேலும் திரைப்படத்தின் ஒரு நிமிட டீசர் 2014ம் ஆண்டு அக்டோபர் 21ம் நாள் தீபாவளியன்று சோனி நிறுவனம் தனது யூட்யூப் பக்கத்தில் வெளியிட்டது[5]. டீசர் வெளியிட்ட ஒரு வாரத்தில் 750,000பேர் பார்த்தனர்[6].

வெளியீடுதொகு

இப்படம் பிப்ரவரி 13ஆம் நாள் திரையிடப்பட்டது.

குறிப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=அனேகன்_(திரைப்படம்)&oldid=2124798" இருந்து மீள்விக்கப்பட்டது