ஸ்ரீராம் பார்த்தசாரதி
ஸ்ரீராம் பார்த்தசாரதி (Sriram Parthasarathy) ஓர் கருநாடக இசைப் பாடகரும் மற்றும் பின்னணிப் பாடகரும் ஆவார். இவர் முக்கியமாக தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளத் திரைப்படங்களில் பணியாற்றுகிறார். பாரம்பரிய இசைக்கலைஞர்களின் குடும்பத்தைச் சேர்ந்த ஸ்ரீராம் பார்த்தசாரதி நெய்வேலி சந்தானகோபாலனின் சீடரும் ஆவார்.[1]
ஸ்ரீராம் பார்த்தசாரதி Sriram Parthasarathy | |
---|---|
இயற்பெயர் | ஸ்ரீராம் |
பிறப்பு | 9 மே 1981 |
தொழில்(கள்) | பின்னணிப் பாடகர் |
இசைத்துறையில் | 2001–தற்போது வரை |
தொழில் வாழ்க்கை
தொகுஸ்ரீராம் பல தனிப்பாடல்களைப் பதிவு செய்து அவற்றை பாரம்பரிய பாணியில் வெளியிட்டுள்ளார். இளையராஜா மற்றும் ஹாரிஸ் ஜயராஜ் போன்ற மூத்த இசை இசை இயக்குனர்களுடனும் தொடர்ந்து பணியாற்றியுள்ளார். அதே நேரத்தில் ஏ. ஆர். ரகுமான், யுவன் சங்கர் ராஜா மற்றும் வித்தியாசாகர் போன்ற பிற இசை இயக்குனர்களுடனும் பணியாற்றியுள்ளார்.[2] தனது இசைக்காக பல விருதுகளையும் வென்றுள்ளார்.
பிதாமகன் படத்தில் இடம்பெற்ற “இளங்காற்று வீசுதே” (2003), கஜினி படத்தில் இடம்பெற்ற “சுட்டும் விழி சுடரே” மற்றும் தங்க மீன்கள் (2013) படத்தில் இடம்பெற்ற “ஆனந்த யாழை மீட்டுகிறாய்” ஆகிய பாடல்கள் ஸ்ரீராமின் மிகவும் பிரபலமான பாடல்களில் அடங்கும்.[2][1] “சுட்டும் விழி சுடரே ” பாடலுக்காக தமிழ்நாடு பிலிம்பேர் விருதையும், “ஆனந்த யாழை மீட்டுகிறாய்” படத்திற்காக தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருது மற்றும் பிலிம்பேர் பரிசுகளையும் வென்றுள்ளார்.
கமல்ஹாசன், சைந்தவி, இராஜன் சோமசுந்தரம் ஆகியோருடன் இணைந்து ஷேட்ஸ் ஆஃப் ப்ளூஃ ஏ மியூசிக்கல் டிரிபுயூட் டு வெண்முரசு என்ற பாடலை பாடியதற்காக ஸ்ரீராம் பாராட்டுக்களைப் பெற்றார். மேலும் இப்பாடல் இவரது தொழில் வாழ்க்கையின் சிறந்த பாடல்களில் ஒன்றாக கருதப்படுகிறது.[3]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "Classical – Vocal – Sriram Parthasarathy_AIR – Sriram Parthasarathy Is From A Renowned Musical Lineage". Musicplug.in. 2007-05-30. பார்க்கப்பட்ட நாள் 2012-03-05.
- ↑ 2.0 2.1 "Sriram is a relaxed person". The Times of India. 11 January 2011. பார்க்கப்பட்ட நாள் 2 November 2016.
- ↑ "Director Mani Ratnam Releases Musical Tribute to Jeyamohan's Epic Venmurasu". www.marketwatch.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-10-20.