இராஜன் சோமசுந்தரம்
இராலீ ராஜன் என்று நன்கு அறியப்பட்ட இராஜன் சோமசுந்தரம் (Rajan Somasundaram) , ராலீயை தளமாகக் கொண்ட இசையமைப்பாளரும், முரசுக் கலைஞரும், வயலின் கலைஞரும் மற்றும் இசைத் தயாரிப்பாளரும் ஆவார்.[1]தர்ஹாம் சிம்பொனி மற்றும் முக்கிய சர்வதேச இசைக்கலைஞர்களுடன் இணைந்து தமிழ்ச் சங்க காலக் கவிதைகள் குறித்த முதல் இசைத் தொகுப்பை உருவாக்கியதற்காக இவர் அறியப்படுகிறார். இந்த இசைத் தொகுப்பு ஜூலை 2020 இல் ‘சர்வதேச இசைத் தொகுப்புகள்’ பிரிவின் கீழ் அமேசானின் Top#10 சிறந்த விற்பனையாளராக மாறியது. இது தி இந்து மியூசிக் மதிப்பாய்“வால் இசை உலகில் ஒரு முக்கிய நிகழ்வு” என்று அழைக்கப்பட்டது.[2] சங்கக் காலக் கவிஞர் கணியன் பூங்குன்றனாருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் பல சர்வதேச இசைக்கலைஞர்களுடன் 10 வது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டின் கருப்பொருளைப் பாடினார்.[3]
இராஜன் சோமசுந்தரம் | |
---|---|
பிறப்பு | திருவாரூர், இந்தியா |
தொழில்(கள்) | இசையமைப்பாள வயலின் கலைஞர் & முரசுக் கலைஞர் இசைத் தயாரிப்பாளார் பாடலாசிரியர் |
இணைந்த செயற்பாடுகள் |
|
வாழ்க்கை
தொகுதமிழ்நாட்டின் திருவாரூரில் பிறந்த ராஜன், சியாமா சாஸ்திரிகள் பிறந்த இடத்தில் தனது 9 வயதில் இருந்து கருநாடக இசையைக் கற்றுக்கொள்ளத் தொடங்கினார். மேலும் இவர் பொறியியலில் முதுகலைப் பட்டம் பெற்றவர்.[4]
மேற்கோள்கள்
தொகு- ↑ "4 Seasons Movie Launch". MalayalamNewsDaily.com. 2022-12-13. பார்க்கப்பட்ட நாள் 2023-11-07.
- ↑ "A Major event in the world of Music". The Hindu Music Review. The Hindu Tamil. 28 February 2020. பார்க்கப்பட்ட நாள் 2020-03-02.
- ↑ ""யாதும் ஊரே யாவரும் கேளிர்" - உலகத் தமிழாராய்ச்சி மற்றும் பேரவை - சிகாகோ மாநாட்டு பாடல் அமெரிக்காவில் சிறப்பாக வெளியிடப்பட்டது". Valaitamil.com. 2019-06-02. பார்க்கப்பட்ட நாள் 2019-10-06.
- ↑ "இணையத்தைக் கலக்கும் 'யாதும் ஊரே' கீதம்". July 2019. பார்க்கப்பட்ட நாள் 2019-10-06.