திருவாரூர்

திருவாரூர், இந்தியாவின் தமிழ்நாட்டில், 'ஆசிய மிகப் பெரிய தேர்' உள்ள மாவட்டம் மற்றும் நகராட்சி.

திருவாரூர் (ஆங்கில மொழி: Tiruvarur) இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருவாரூர் மாவட்டம் திருவாரூர் வட்டம் மற்றும் திருவாரூர் ஊராட்சி ஒன்றியம் ஆகியவற்றின் நிர்வாகத் தலைமையிடமும் மற்றும் நகராட்சியும் ஆகும்.

திருவாரூர்
ஆரூர்
திருவாரூர் ஆழித்தேர்
திருவாரூர் ஆழித்தேர்
அடைபெயர்(கள்): தேரழகு நகரம்
திருவாரூர் is located in தமிழ் நாடு
திருவாரூர்
திருவாரூர்
இந்திய வரைபடத்தில் உள்ள இடம்.
திருவாரூர் is located in இந்தியா
திருவாரூர்
திருவாரூர்
திருவாரூர் (இந்தியா)
ஆள்கூறுகள்: 10°46′23″N 79°38′13″E / 10.773°N 79.637°E / 10.773; 79.637
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்திருவாரூர்
தோற்றுவித்தவர்முற்கால சோழர்கள்
பெயர்ச்சூட்டுஆத்தி(ஆர்)மரங்களடர்ந்த ஊர்
பகுதிசோழ நாடு
அரசு
 • வகைதேர்வு நிலை நகராட்சி
 • நிர்வாகம்திருவாரூர் நகராட்சி
 • மக்களவை உறுப்பினர்ம. செல்வராசு
 • சட்டமன்ற உறுப்பினர்பூண்டி கே. கலைவாணன்
 • மாவட்ட ஆட்சியர்சாருஸ்ரீ, இ.ஆ.ப
 • நகராட்சித் தலைவர்புவனபிரியா செந்தில்
பரப்பளவு
 • மொத்தம்10.47 km2 (4.04 sq mi)
ஏற்றம்
3 m (10 ft)
மக்கள்தொகை
 (2011)[1]
 • மொத்தம்58,301
 • அடர்த்தி5,600/km2 (14,000/sq mi)
மொழிகள்
 • அலுவல்மொழிதமிழ்
நேர வலயம்ஒசநே+5:30 (இசீநே)
அஞ்சல் குறியீடு
610 xxx
தொலைபேசி குறியீடு914366
வாகனப் பதிவுTN:50
சென்னையிலிருந்து தொலைவு300 கி.மீ (187 மைல்)
தஞ்சாவூரிலிருந்து தொலைவு61 கி.மீ (37 மைல்)
திருச்சியிலிருந்து தொலைவு116 கி.மீ (72 மைல்)
கும்பகோணத்திலிருந்து தொலைவு41 கி.மீ (26 மைல்)
இணையதளம்tiruvarur

இவ்வூர் முற்காலச் சோழர்களின் ஐந்து தலைநகரங்களனுள் ஒன்றாக விளங்கியது. இவ்வூரில் உள்ள பாடல் பெற்ற திருவாரூர் தியாகராஜர் கோயில் தேர் ஆசியாவிலேயே மிகப்பெரிய தேர் ஆகும். இவ்வூரில்தான் மனுநீதி சோழன் தன் மகனை தேரில் இட்டு கொன்று பசுவிற்கு நீதி வழங்கினார். திருவாரூர் நகரம் முந்தைய தஞ்சாவூர் மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது.

பெயர் காரணம்

தொகு
 
திருவாரூர் கமலாலய குளம்

ஆரூர் = ஆர்+ஊர், ஆர்-ஆத்தி ஆத்திமரங்கள் நிறைந்த ஊராக இருந்ததால் ஆரூர் என்ற பெயர் சூட்டப்பட்டதுபெற்றது. இவ்வூர் தேவார பதிகங்களில் ஆரூர் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது.பாடல்பெற்ற தலமாதலால் 'திரு' சேர்க்கப்பட்டு திரு+ ஆரூர் என்றாகி திருவாரூர் என மருவியது.

சோழநாட்டில் வழங்கிவரும் வேதாரண்யம் விளக்கழகு, திருவாரூர் தேரழகு, நீடாமங்கலம் நீரழகு, திருவிடைமருதூர் தெருவழகு, மன்னார்குடி மதிலழகு என்ற முதுமொழி மூலமாக இவ்வூரின் பெருமையை உணரமுடியும்.

வரலாறு

தொகு

திருவாரூர் முற்கால சோழர்களின் ஐந்து பாரம்பரிய தலைநகரங்களுள் (ஆரூர்,ஆவூர்,கருவூர், புகார்,உறந்தை) ஒன்றாகவும்,அதன் பின் வந்த மன்னர்கள் முடிசூட்டிக்கொள்ளும் இடமாகவும் விளங்கியது.திருவாரூரைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட மனுநீதி சோழன், பசுவிற்கு நீதி வழங்க தன் சொந்த மகனையே தேரை ஏற்றி கொன்றது வரலாற்றில் நீதிக்கு சிறந்த எடுத்துக்காட்டாக அறியப்படுகிறது. இந்த நிகழ்வை பிற்கால சோழர்கள் கல்தேராக வடித்தனர். திருவாரூர் கோவிலுக்கு வடகிழக்கே இந்தக் கல்தேர் அமைந்துள்ளது. திருவாரூர் நகரம் முந்தைய தஞ்சாவூர் மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது.

மக்கள்தொகை பரம்பல்

தொகு
மக்கள்தொகை வளர்ச்சி
ஆண்டும.தொ.±%
197135,858—    
198143,654+21.7%
199149,194+12.7%
200156,341+14.5%
201158,301+3.5%
சான்றுகள்:
  • 1971 – 2011:[2]
மதவாரியான கணக்கீடு
மதம் சதவீதம்(%)
இந்துக்கள்
84.38%
முஸ்லிம்கள்
14.13%
கிறிஸ்தவர்கள்
1.39%
சீக்கியர்கள்
0.02%
பௌத்தர்கள்
0.01%
சைனர்கள்
0.02%
மற்றவை
0.05%
சமயமில்லாதவர்கள்
0.01%

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 30 நகராட்சி மன்ற உறுப்பினர்களையும், 14,997 குடும்பங்களையம் கொண்ட இந்நகரத்தின் மக்கள்தொகை 58,301 ஆகும். அதில் 28,397 ஆண்களும், 29,904 பெண்களும் உள்ளனர். இந்நகரத்தின் எழுத்தறிவு 91% மற்றும் பாலின விகிதம் ஆண்களுக்கு, 1,053 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 5779 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 1,001 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 8,368 மற்றும் 383 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 84.38%, முஸ்லிம்கள் 14.13%, கிறிஸ்தவர்கள் 1.39%, சீக்கியர்கள் 0.02%, பௌத்தர்கள் 0.01%, சைனர்கள் 0.2%, 0.05% பிற மதங்களைப் பின்பற்றுபவர்கள் மற்றும் சமயமில்லாதவர்கள் 0.01% பேர்களும் உள்ளனர்.[3]

நகராட்சி நிர்வாகம் மற்றும் அரசியல்

தொகு
நகராட்சி அதிகாரிகள்
தலைவர் புவனபிரியா செந்தில்
ஆணையர் பிரபாகரன்
தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள்
சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கே. கலைவாணன்
மக்களவை உறுப்பினர் ம. செல்வராசு

திருவாரூர் நகராட்சி தமிழகத்தின் நூற்றாண்டு கண்ட பழமைவாய்ந்த நகராட்சிகளுள் ஒன்று.இது 1914-ல் தோற்றுவிக்கப்பட்டது.பின் 01.04.1978-ல் முதல்நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது.02.05.2023 முதல் தேர்வுநிலை நகராட்சியாக செயல்பட்டு வருகிறது.2014 ம் ஆண்டு இந்நகராட்சி தன் நூற்றாண்டு விழாவினைக் கொண்டாடியது.

30 வார்டுகளையும் 2011 மக்கட்தொகை கணக்கின்படி சுமார் 60,000 மக்கட்தொகையையும் கொண்டுள்ளது. திருவாரூர் நகராட்சியானது திருவாரூர் சட்டமன்றத் தொகுதிக்கும் மற்றும் நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டதாகும்.

2019 ஆம் ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில், இம்மக்களவைத் தொகுதியை இந்தியப் பொதுவுடைமைக் கட்சியைச் சேர்ந்த மு. செல்வராசு வென்றார்.

2021 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில், இச்சட்டமன்றத் தொகுதியை திராவிட முன்னேற்றக் கழகத்தைச் (திமுக) சேர்ந்த பூண்டி கே. கலைவாணன் வென்றார்.

போக்குவரத்து

தொகு

சாலை போக்குவரத்து

தொகு

திருவாரூர் நகரின் வழியே தேசிய நெடுஞ்சாலை NH83 செல்கிறது. மாநில நெடுஞ்சாலை 23 மயிலாடுதுறை முதல் திருத்துறைப்பூண்டி வரை, மாநில நெடுஞ்சாலை 65 திருவாரூரிலிருந்து - கும்பகோணம் வரை செல்கிறது. இங்கிருந்து பல்வேறு நகரங்களுக்கு செல்ல தினமும் 175 அரசு பேருந்துகள் இயக்கப்படுகிறது. பெரும்பாலான பேருந்துகள் திருவாரூர் வழியாக திருச்சிராப்பள்ளி முதல் வேளாங்கண்ணி வரை இயக்கப்படுகிறது. திருவாரூர் மற்றும் அருகிலுள்ள கிராமங்களுக்கு தினமும் 25க்கு மேற்பட்ட பேருந்துகள் உள்ளூர் போக்குவரத்து தேவைகளை பூர்த்தி செய்ய இயக்கப்படுகிறது. பெங்களூர், திருவனந்தபுரம், சென்னை போன்ற நீண்ட தூர பயணத்திற்கு அரசு விரைவுப் பேருந்துகள் இயக்கப்படுகிறது.

இந்நகரில் புதிய மற்றும் பழைய பேருந்துநிலையம் என இரண்டு பேருந்துநிலையங்கள் அமைந்துள்ளன. பழைய பேருந்துநிலையம் நகரின் மத்தியில் அமைந்துள்ளது. இங்கிருந்து திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, நன்னிலம், நாகூர், லக்ஷ்மாங்குடி ஆகிய சுற்றுவட்டார பகுதிகளுக்கு நகர பேருந்துகள் மற்றும் தனியார் மினிபஸ்கள் இயக்கப்படுகின்றன.

திருவாரூர் புதிய பேருந்துநிலையம் விளமல் அருகே உள்ள திருவாரூர் நகராட்சிக்குட்பட்ட தியாகப்பெருமாநல்லூரில் சுமார் 12 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இங்கிருந்து திருச்சி, தஞ்சாவூர், நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, கும்பகோணம், மயிலாடுதுறை, காரைக்கால், சிதம்பரம், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, பட்டுக்கோட்டை ஆகிய ஊர்களுக்கு தினசரி பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

தொடருந்து போக்குவரத்து

தொகு

திருவாரூர் சந்திப்பு தொடருந்து நிலையமானது தமிழ்நாட்டின் மிகப்பழமை வாய்ந்த தொடருந்து நிலையங்களுள் ஒன்றாகும்.1861ஆம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த தொடருந்து நிலையம் சுமார் 160 ஆண்டுகள் பழமையானது. வருவாயின் அடிப்படையில் காவிரி வடிநிலப் பகுதியின் ஐந்தாவது பெரிய தொடருந்து நிலையம் இது. இந்த தொடருந்து நிலையமானது மேற்கில் நீடாமங்கலம் மற்றும் தஞ்சாவூர், வடக்கில் மயிலாடுதுறை, கிழக்கில் நாகப்பட்டினம் மற்றும் தெற்கில் திருத்துறைப்பூண்டி ஆகியவற்றை இணைக்கும் ஒரு முக்கிய தொடருந்து சந்திப்பாக உள்ளது. திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், மயிலாடுதுறை, காரைக்கால், மன்னார்குடி மற்றும் திருத்துறைப்பூண்டி ஆகிய இடங்களுக்கு செல்ல பயணிகள் தொடருந்து இயக்கப்படுகிறது. மன்னார்குடியிலிருந்து திருப்பதி வரை மற்றும் வேளாங்கண்ணியிலிருந்து கோவா வரை இரண்டு தொடருந்துகள் இயக்கப்படுகின்றன. இவை வாரத்தில் மூன்று நாட்கள் திருவாரூர் வழியாக இயக்கப்படுகிறது.

வானூர்தி நிலையம்

தொகு

திருவாரூக்கு அருகிலுள்ள வானூர்தி நிலையம், 116 கி. மீ. தொலைவிலுள்ள திருச்சிராப்பள்ளி பன்னாட்டு வானூர்தி நிலையம் ஆகும்.

கலாச்சாரம்

தொகு

திருவாரூர் தியாகராஜர் கோயில்

தொகு
 
தியாகராஜர் கோயிலில் உள்ள சிவபெருமான், முருகன் மற்றும் உமையவள் ஆகியோரின் சிலையை அலங்கரிக்கப்பட்ட புகைப்படம்

திருவாரூர் தியாகராஜர் கோயில், மிகவும் புகழ்பெற்ற பழமையானதும், பிரம்மாண்டமானதும் ஆன பெரிய கோயில் ஆகும். இக்கோயில் நாயன்மார்களால் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகவும், பஞ்சபூதத் தலங்களில் பிருதிவித் தலமாகவும் உள்ளது. தேவாரப் பாடல் பெற்ற தலங்களில், சோழ நாடு காவிரி தென்கரைத் தலங்களில் அமைந்துள்ள 87ஆவது சிவத்தலமாகும். திருவாரூர் சப்தவிடங்க ஸ்தலங்களில் தலைமை இடமாகும். திருவாசகத் திருத்தலங்களில் ஒன்றாகும். சோழ கல்வெட்டுகளில், தியாகராஜாவை விதிவிதாங்கர் என்றும் "தியாகராஜா" என்ற பெயர் பொ.ஊ. 15-16 ஆம் நூற்றாண்டில் தோன்றியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை
ஆண்டும.தொ.
20012,60,750
20022,75,900
20033,01,100
20043,21,400
சான்றுகள்:
  • 2001 – 04:[4]

தேர் திருவிழா

தொகு
 
திருவாரூர் கோயில் தேர் திருவிழா

திருவாரூர் தேரானது, ஆசியாவிலேயே மிகப் பெரிய தேராகும். ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம்பிடித்து இழுக்கின்றனர். அலங்கரிக்கப்பட்ட ஆழித்தேரின் உயரம் 96 அடியும், 300 டன் எடையும் ஆகும். இந்நிகழ்ச்சியில் தமிழகம் முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொள்கின்றனர்.

புவியியல்

தொகு

இவ்வூரின் அமைவிடம் 10°46′23″N 79°38′13″E / 10.773°N 79.637°E / 10.773; 79.637 ஆகும். கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 3 மீட்டர் (9.8 அடி) உயரத்தில் இருக்கின்றது.

தட்பவெப்ப நிலைத் தகவல், திருவாரூர், இந்தியா
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
உயர் சராசரி °C (°F) 28.4
(83.1)
29.4
(84.9)
31.3
(88.3)
33.3
(91.9)
36.1
(97)
36.8
(98.2)
35.9
(96.6)
35.1
(95.2)
33.9
(93)
31.7
(89.1)
29.7
(85.5)
28.6
(83.5)
32.5
(90.5)
தாழ் சராசரி °C (°F) 22.5
(72.5)
23.3
(73.9)
24.7
(76.5)
26.9
(80.4)
27.5
(81.5)
27.1
(80.8)
26.4
(79.5)
26.0
(78.8)
25.6
(78.1)
25.1
(77.2)
24.1
(75.4)
23.0
(73.4)
25.2
(77.4)
பொழிவு mm (inches) 29.9
(1.177)
16.4
(0.646)
20.1
(0.791)
23.1
(0.909)
41.9
(1.65)
49.3
(1.941)
63.1
(2.484)
79.7
(3.138)
96.5
(3.799)
249.2
(9.811)
419.5
(16.516)
285.3
(11.232)
1,403.9
(55.272)
ஆதாரம்: [5]

புகழ்பெற்றவர்கள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Census India 2011". Government of India. பார்க்கப்பட்ட நாள் 5 March 2016.
  2. Thiruvarur population 2011.
  3. திருவாரூர் நகரத்தின் மக்கள்தொகை பரம்பல்
  4. Tamil Nadu Urban Infrastructure Financial Services Limited 2008, ப. 35–36.
  5. Climatology of Nagapattinam 2011.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=திருவாரூர்&oldid=4168642" இலிருந்து மீள்விக்கப்பட்டது