நீடாமங்கலம்
நீடாமங்கலம் (Needamangalam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நீடாமங்கலம் வட்டம் மற்றும் நீடாமங்கலம் ஊராட்சி ஒன்றியம் ஆகியவற்றின் தலைமையிடமும், பேரூராட்சியும் ஆகும். “ இப்பகுதி சோழர்கள் ஆட்சி காலத்தில் நீராடுமங்கலம் என்ற பெயருடன் விளங்கியுள்ளது. ” நீடாமங்கலம் நகரம் முந்தைய நாகை மாவட்டம்த்தில் ஒரு பகுதியாக இருந்தது.
நீடாமங்கலம் | |||||||
ஆள்கூறு | |||||||
நாடு | இந்தியா | ||||||
பகுதி | சோழ நாடு | ||||||
மாநிலம் | தமிழ்நாடு | ||||||
மாவட்டம் | திருவாரூர் | ||||||
ஆளுநர் | ஆர். என். ரவி[1] | ||||||
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] | ||||||
மாவட்ட ஆட்சியர் | தி. சாருஸ்ரீ, இ. ஆ. ப [3] | ||||||
மக்கள் தொகை • அடர்த்தி |
9,336 (2011[update]) • 3,563/km2 (9,228/sq mi) | ||||||
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||||
பரப்பளவு | 2.62 சதுர கிலோமீட்டர்கள் (1.01 sq mi) | ||||||
குறியீடுகள்
| |||||||
இணையதளம் | www.townpanchayat.in/needamangalam |
அமைவிடம்
தொகுநீடாமங்கலம் பேரூராட்சி, திருவாரூருக்கு 27 கிமீ தொலைவில் உள்ளது. நீடாமங்கலத்தில் தொடருந்து நிலையம் உள்ளது. இதனருகே அமைந்த நகரங்கள் தஞ்சாவூர் 32 கிமீ; வலங்கைமான் 15கிமீ; மன்னார்குடி 12 கிமீ தொலைவில் உள்ளது. இப்பகுதி முற்காலத்தில் சோழநாட்டின் முக்கிய நகரங்களில் ஒன்றாக விளங்கியுள்ளது.
பேரூராட்சியின் அமைப்பு
தொகு2.62 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 58 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி மன்னார்குடி (சட்டமன்றத் தொகுதி)க்கும், தஞ்சாவூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[4]
மக்கள் தொகை பரம்பல்
தொகு2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 2392 வீடுகளும், 9336 மக்கள்தொகையும் கொண்டது. [5] [6]
சங்ககாலம்
தொகுசங்ககாலத்தில் இந்த ஊர் நீடூர் என்னும் பெயருடன் விளங்கியது. அக்காலத்தில் இது மிழலை நாட்டின் தலைநகர். எவ்வி என்னும் வள்ளல் சங்ககாலத்தில் இதனை ஆண்டுவந்தான்.
சோழர்கள் காலம்
தொகுசோழர்கள் காலகட்டத்தில் இந்த நகரம் நீராடுமங்கலம் என்ற பெயருடன் விளங்கி வந்துள்ளது. சோழர்கள் காலத்தில் தஞ்சையை ஆண்ட மன்னர்கள் மற்றும் இளவரசிகள் இந்த ஊரில் புனித நீராடுவதனால் இவ்வூருக்கு நீராடுமங்கலம் என்ற பெயர் பெற்றுள்ளது.[சான்று தேவை]
கோயில்கள்
தொகு- நீடாமங்கலம் சந்தான ராமசாமி கோயில் "500 Years old"
புகழ்பெற்றவர்கள்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "நீடாமங்கலம் பேரூராட்சியின் இணையதளம்". Archived from the original on 2019-03-30. பார்க்கப்பட்ட நாள் 2019-03-30.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2019-03-30. பார்க்கப்பட்ட நாள் 2019-03-30.
- ↑ Needamangalam Population Census 2011
வெளி இணைப்புகள்
தொகு- நீடாமங்கலம் பேரூராட்சியின் தொடர்புக்கு பரணிடப்பட்டது 2019-03-30 at the வந்தவழி இயந்திரம்