கோவில்வெண்ணி
கோவில்வெண்ணி (Kovilvenni) நகரம் தமிழ்நாட்டின் திருவாரூர் மாவட்டத்தில் நீடாமங்கலம் அருகே தஞ்சாவூரிலிருந்து 24 கிமீ தொலைவில் அமைந்துள்ளது.[1] [2]இது 925 குடும்பங்களைக் கொண்ட ஒரு பெரிய கிராமம் ஆகும். 2011 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி கோயில்வெண்ணி கிராமத்தில் 3744 பேர் வசித்தனர். இதில் 1746 பேர் ஆண்கள் மற்றும் 1998 பேர் பெண்கள் ஆவர்.[3]
கோவில்வெண்ணி கிராமத்தில் 0-6 வயதுடைய குழந்தைகளின் எண்ணிக்கை 344 ஆகும். இது கிராமத்தின் மொத்த மக்கள் தொகையில் 9.19% ஆகும். கோவில்வெண்ணி கிராமத்தின் சராசரி பாலின விகிதம் 1144 ஆகும். இது தமிழ்நாட்டின் மாநில சராசரியான 996 என்பதை விட அதிகம். மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி கோவில்வெண்ணியின் குழந்தை பாலின விகிதம் 820 ஆகும். தமிழ்நாட்டின் சராசரியான 943 என்பதை விட இது குறைவாகும்.
வரலாறு
தொகுகோவில்வெண்ணி பழங்காலத்தில் சோழப் பேரரசின் கீழ் இருந்தது. இங்கு சோழர்களுக்கும் சேரர்களுக்கும் இடையில் பெரும் வெண்ணிப் போர் நடந்தது.
வெண்ணிப் போர்
தொகுவெண்ணிப் போர் என்பது முற்காலச் சோழப் பேரரசர் கரிகாலச் சோழன் பாண்டிய மற்றும் சேர மன்னர்களின் கூட்டமைப்புடன் நடத்திய போர் ஆகும். இந்தப் போரில் கரிகாலனுக்கு முழு வெற்றி கிடைத்தது. இவரது வெற்றியைத் தொடர்ந்து, சேர வம்ச மன்னன் உதியன் சேரலாதன் பட்டினி கிடந்து இறந்தான். இந்தப் போர் வரலாற்றுச் சிறப்புமிக்கதாகக் கருதப்படுகிறது மற்றும் தோராயமாக கி.பி. 190 ஆம் ஆண்டில் நடைபெற்றது.
கல்வி நிறுவனங்கள்
தொகுதிருவாரூர் மாவட்டத்தில் உள்ள சிறந்த பொறியியல் கல்லூரிகளில் ஒன்றான அஞ்சலை அம்மாள் மகாலிங்கம் பொறியியல் கல்லூரி கோவில்வெண்ணியில் உள்ளது. புனித மார்சினாசு மேல்நிலைப் பள்ளி என்ற ஒரு பள்ளியும் கோவில்வெண்ணியில் உள்ளது.
மேற்கோள்கள்
தொகு- ↑ "கோவில்வெண்ணி பொறியியல் கல்லூரியில் 3 பேரூராட்சிகளின் வாக்குப் பெட்டிகள்". தினமணி. https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/thiruvarur/2022/feb/20/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-3-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-3795430.html. பார்த்த நாள்: 6 December 2022.
- ↑ மலர், மாலை (2018-05-05). "கோவில்வெண்ணி அருகே விபத்து -கல்லூரி விரிவுரையாளர் உள்பட 2 பேர் பலி". www.maalaimalar.com. பார்க்கப்பட்ட நாள் 2022-12-06.
- ↑ "Koilvenni Village Population - Needamangalam - Thiruvarur, Tamil Nadu". www.census2011.co.in. பார்க்கப்பட்ட நாள் 2022-12-06.