நீடாமங்கலம் வட்டம்

நீடாமங்கலம் வட்டம் , தமிழ்நாட்டின் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள 8 வட்டங்களில் ஒன்றாகும்.[1] இந்த வட்டத்தின் தலைமையகமாக நீடாமங்கலம் நகரம் உள்ளது.

2016ல் நீடாமங்கலம் வட்டத்தின் 55 வருவாய் கிராமங்களைக் கொண்டு கூத்தாநல்லூர் வட்டம் நிறுவப்பட்டது.[2]

தற்போது நீடாமங்கலம் வட்டத்தின் கீழ் 51 வருவாய் கிராமங்கள் உள்ளன.[3]

இவ்வட்டத்தில் நீடாமங்கலம் ஊராட்சி ஒன்றியம், நீடாமங்கலம் கோகமுகேஷ்வரர் கோயில் மற்றும் நீடாமங்கலம் லெட்சுமி நாராயணபெருமாள் கோயில் உள்ளது.

மக்கள்தொகை பரம்பல்

தொகு

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இவ்வட்டம் 147,440 மக்கள்தொகை கொண்டது. மக்கள்தொகையில் 72,770 ஆண்களும், 74,670 பெண்களும் உள்ளனர். 37,256 குடும்பங்கள் கொண்ட இவ்வட்ட மக்கள்தொகையில் 76.4% கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். இவ்வட்டத்தின் எழுத்தறிவு 82.29% மற்றும்பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு, 1,026 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் 14631 எண்ணிக்கை ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 959 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 59,552 மற்றும் 352 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 78.82%, இசுலாமியர்கள் 18.03%, கிறித்தவர்கள் 2.92% மற்றும் பிறர் 0.23% ஆகவுள்ளனர்.[4][5]

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=நீடாமங்கலம்_வட்டம்&oldid=2725794" இலிருந்து மீள்விக்கப்பட்டது