திருத்துறைப்பூண்டி

திருத்துறைப்பூண்டி (ஆங்கிலம்:Thiruthuraipoondi), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருத்துறைப்பூண்டி வட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமும், நகராட்சியும் ஆகும்.இவ்வூருக்கு வில்வாரண்யம் ஷேத்திரம் என்னும் பெயர் உண்டு.[4]

திருத்துறைப்பூண்டி
திருத்துறைப்பூண்டி
இருப்பிடம்: திருத்துறைப்பூண்டி
, தமிழ்நாடு , இந்தியா
அமைவிடம் 10°32′25″N 79°38′07″E / 10.54030195°N 79.63523624999999°E / 10.54030195; 79.63523624999999ஆள்கூறுகள்: 10°32′25″N 79°38′07″E / 10.54030195°N 79.63523624999999°E / 10.54030195; 79.63523624999999
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் திருவாரூர்
வட்டம் திருத்துறைப்பூண்டி வட்டம்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் ப. காயத்ரி கிருஷ்ணன், இ. ஆ. ப [3]
நகராட்சி தலைவர் கவிதா பாண்டியன்
மக்கள் தொகை 24,404 (2011)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)

மக்கள்தொகை பரம்பல்தொகு

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 24 நகராட்சி மன்ற உறுப்பினர்களையும், 6,263 குடும்பங்களையம் கொண்ட இந்நகரத்தின் மக்கள்தொகை 24,404 ஆகும். அதில் 11,985 ஆண்களும், 12,419 பெண்களும் உள்ளனர். இந்நகரத்தின் எழுத்தறிவு 88.6% மற்றும் பாலின விகிதம் ஆண்களுக்கு, 1,036 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 2324 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 969பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 7,248 மற்றும் 450 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 90.41%, இசுலாமியர்கள் 6.36%, கிறித்தவர்கள் 3.09% மற்றும் பிறர் 0.14% ஆகவுள்ளனர்.[5]

கோவில்கள்தொகு

இங்கு பிறந்து புகழ்பூத்தவர்கள்தொகு

 • வி. கே. சசிகலா - இந்திய பெண் தொழிலதிபர் மற்றும் அரசியல்வாதி
 • ஆர். வெங்கட்ராமன் - எழுத்தாளர் ஆர்வி
 • பா‌லு மலர்‌வண்‌ணன் - எழுத்தாளர் பா‌லு மலர்‌வண்‌ணன்‌
 • ஆனந்த விகடன் ஆசிரியர் திரு வாசன்
 • எழுத்தாளர் திரு.உத்தமசோழன் (எழுத்தாளர், கிழக்கு வாசல் உதயம் மாத இதழின் ஆசிரியர்)
 • மருத்துவப் பேராசிரியர் திரு இரவீந்திரன்
 • T.R.பாப்பா (சினிமா -இசையமைப்பாளர்)
 • லியோ முத்து (நிறுவனர் -சாய் ராம் கல்வி நிறுவனங்கள் )
 • கமலா கந்தசாமி (எழுத்தாளர் )
 • திரு வீரபாண்டியன் (ஊடகவியளாலா்)

ஆதாரங்கள்தொகு

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Thiruthuraipoondi
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
 1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. நவம்பர் 3, 2015 அன்று பார்க்கப்பட்டது.
 2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. நவம்பர் 3, 2015 அன்று பார்க்கப்பட்டது.
 3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. நவம்பர் 3, 2015 அன்று பார்க்கப்பட்டது.
 4. பிறவி மருந்தீசர் ஆலயம். தினமணி. 26 செப்டம்பர் 2012. https://www.dinamani.com/religion/2009/aug/28/பிறவி-மருந்தீசர்-ஆலயம்-65618.html. 
 5. திருத்துறைப்பூண்டியின் மக்கள்தொகை பரம்பல்
"https://ta.wikipedia.org/w/index.php?title=திருத்துறைப்பூண்டி&oldid=3494163" இருந்து மீள்விக்கப்பட்டது