கஜினி (திரைப்படம்)

ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

கஜினி (Ghajini) திரைப்படம் 2005 ஆம் ஆண்டு தமிழில் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1] ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சூர்யா,அசின், நயன்தாரா மற்றும் பலர் நடித்துள்ளனர்.[1] இதே பெயரில் 2008 ஆம் ஆண்டில் ஆமிர் கான் நடிப்பில் இந்தியில் வெளியானது.[2] இதனையும் ஏ. ஆர். முருகதாஸ் இயக்கினார்.

கஜினி
இயக்கம்ஏ. ஆர். முருகதாஸ்
தயாரிப்புசேலம் A சந்திரசேகர்
கதைஏ. ஆர். முருகதாஸ்
இசைஹாரிஸ் ஜயராஜ்
நடிப்புசூர்யா
அசின்
நயந்தாரா
வெளியீடுசெப்டெம்பர் 29, 2005
நாடு இந்தியா
மொழிதமிழ்
ஆக்கச்செலவு90 மில்லியன் (US$1.1 மில்லியன்)
மொத்த வருவாய்1.02 பில்லியன் (US$13 மில்லியன்)

மசாலாப்படம்

திரைக்கதை

தொகு

சஞ்சேய் இராமசாமி (சூர்யா) இலட்சாதிபதி இவரது நண்பி கல்பனா (அசின்) ஓர் விளம்பர மாடல். கல்பனா அவரது தயாரிப்பாளரிடம் சென்று தான் சஞ்சேய் இராமசாமியின் காதலி சந்திக்க முன்னரே கூறுவதோடு ஓர் முக்கியமான சஞ்சிகையில் பேட்டியும் கொடுக்கின்றார். இது பற்றி அறிந்த சஞ்சேய் இப்பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க முடிவுசெய்து சந்திமுயன்றவேளை ஓர் பெண்ணொருவர் கையாலாகாத குழந்தைக்கு உதவுவதைக் காண்கின்றார். இதைக் கண்ட சஞ்சேய்க்குக் காதல் அரும்புகின்றது பின்னர கல்பனாவைச் சந்திக்கின்றார். எனினும் தான்தான் சஞ்சேய் இராமசாமி என்பதைத் தெரிவிப்பதில்லை. பின்னர் கல்பனாவிற்கும் காதல் அரும்புகின்றது. மும்பாய் ஆட்கடத்தில் ஈடுபட்டவர்களில் இருந்து இளம் பிள்ளைகளைக் காப்பாற்றுகின்றார் கல்பனா. இதனால் ஆத்திரமைடைந்த ஆட்கடத்தற் குழு கல்பனாவைக் கொலைசெய்யவருகின்றது. பின்னர் சஞ்சேய் அவ்விடத்திற்கு வந்து சண்டையிலீடுபடுகின்றார். இச்சண்டையில் கல்பனா கொலை செய்யபடுவதோடு சஞ்சேய் இரும்புக் குண்டாந்தடியால் தாக்கப் படுவதால் 15 நிமிடங்களில் ஞாபக சக்தியை இழக்கும் பிரச்சினையைப் பெறுகின்றார். இக் குறுகிய நேர ஞாப இழப்பிலும் தனது காதலியைக் கொலைசெய்தவர்களை நயன்தாராவின் உதவியுடன் பல்வேறு முயற்சிக்குப் பின்னர் பழிவாங்குவதுடன் கதை நிறைவு பெறுகின்றது.

துணுக்குகள்

தொகு
  • இத்திரைப்படம் ஆங்கிலத் திரைப்படமான மெமென்டோ (Memento) திரைப்படத்தின் தழுவல் என்பதும் குறிப்பிடத்தக்கது.
  • இந்த திரைப்படத்தின் காதல் காட்சிகள் (ஹாப்பி கோ லவ்லி 1951) என்ற ஆங்கில படத்தின் தழுவல் ஆகும்.
  • இத்திரைப்படம் ஹிந்தியில் மீள் உருவாக்கப்பட்டது.

சான்றுகள்

தொகு
  1. 1.0 1.1 Murugadoss, A. R. (2005-09-29), Ghajini, Suriya, Asin, Nayanthara, பார்க்கப்பட்ட நாள் 2018-06-26
  2. "Aamir Khan rewrote Ghajini climax". இந்துஸ்தான் டைம்ஸ். 31 December 2008. http://www.hindustantimes.com/india/aamir-khan-rewrote-ghajini-climax/story-gZqQPykgNOR4dPy7kdRg6H.html. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கஜினி_(திரைப்படம்)&oldid=3710209" இலிருந்து மீள்விக்கப்பட்டது