என்னை அறிந்தால் (திரைப்படம்)
என்னை அறிந்தால் (Yennai Arindhaal) என்பது, நடிகர் அஜித் குமார்,அனுஷ்கா நடிப்பில் 2015ஆம் ஆண்டு பிப்ரவரியில் வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். ஹாரிஸ் ஜயராஜ் இசையமைக்க, டான் மெக்கார்த்தர் ஒளிப்பதிவு செய்ய, இப்படத்தை கௌதம் மேனன் இயக்கியுள்ளார்.
என்னை அறிந்தால் | |
---|---|
இயக்கம் | கெளதம் வாசுதேவ் மேனன் |
தயாரிப்பு | ஏ.எம். இரத்தினம் ஐசுவர்யா |
கதை | கௌதம் மேனன் ஸ்ரீதர் இராகவன் |
இசை | ஹாரிஸ் ஜயராஜ் |
நடிப்பு | அஜித்குமார் அனுஷ்கா திரிஷா அருண் விஜய் |
ஒளிப்பதிவு | டான் மெக்கார்த்தர் |
படத்தொகுப்பு | ஆன்டனி |
கலையகம் | ஸ்ரீ சாய்ராம் கிரியேசன் |
விநியோகம் | ஈராஸ் இன்டர்நேஷனல் |
வெளியீடு | 5 பிப்ரவரி 2015 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
ஆக்கச்செலவு | ₹ 65 கோடி[1] |
மொத்த வருவாய் | ₹ 100 கோடி |
நடிகர்கள்
தொகு- அஜித் குமார் - சத்தியதேவ்
- அனுசுகா செட்டி - தேன்மொழி
- அருண் விஜய் - விக்டர் மனோ
- திரிஷா - ஹேமானிகா
- பார்வதி நாயர் - எலிசபெத் (லிசா)
- பார்வதி நாயர் - எலிசபெத் (லிசா)
- விவேக் - ரிவால்வர்" ரிச்சர்
- அமித் பார்கவ் - தேன்மொழியின் வருங்கால கணவன்
- சுமன் - முருகானந்தம்
- நாசர் (சிறப்புத் தோற்றம்)
- ஆசிசு வித்யார்த்தி - கோல்டன் ராஜ்
வெளியீடு
தொகுஇத்திரைப்படம் 2015 சனவரி தைப்பொங்கல் அன்று வெளிவரும் என்று அறிவிக்கப்பட்டு பின்னர் படப்பிடிப்பு வேலைகள் நிறைவடையாத காரணத்தால் இத்திரைப்படம் பிப்ரவரி 5 அன்று வெளியாகுமென இப்படத்தின் தயாரிப்பாளரால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.[2]
இசை
தொகுஎன்னை அறிந்தால் | ||||
---|---|---|---|---|
ஒலிப்பதிவு
| ||||
வெளியீடு | 1 சனவரி 2015 | |||
ஒலிப்பதிவு | 2014 | |||
இசைப் பாணி | திரையிசைப் பாடல்கள் | |||
நீளம் | 32:22 | |||
மொழி | தமிழ் | |||
இசைத்தட்டு நிறுவனம் | சோனி இந்தியா | |||
இசைத் தயாரிப்பாளர் | ஹாரிஸ் ஜயராஜ் | |||
ஹாரிஸ் ஜயராஜ் காலவரிசை | ||||
|
இப்படத்திற்கு ஹாரிஸ் ஜயராஜ் இசையமைத்துள்ளார். படத்தின் பாடல் ஒன்றிற்கு, இங்கிலாந்திலிருந்து ஒருவரை பாட வைத்ததாக ஹாரிஸ் தெரிவித்தார்.[3]. மேலும் படத்தின் பாடல்கள், நவம்பர் மாதத்தில் வெளியிடப்படுமென படக்குழுவினர் தெரிவித்தனர்[4]. இப்படத்தில் இடம்பெற்ற "அதாரு அதாரு" பாடல் மட்டும் 2014 திசம்பர் 11 அன்று வெளியானது. இதர பாடல்கள் 2015 இல் புத்தாண்டு அன்று நள்ளிரவில் வெளியாயின.
பாடல்கள் | ||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
# | பாடல் | வரிகள் | பாடகர்(கள்) | நீளம் | ||||||
1. | "ஏன் என்னை" | தாமரை | சுனிதா சாரதி, கரீஷ்மா ரவிச்சந்திரன் | 04:08 | ||||||
2. | "மழை வரப்போகுதே" | தாமரை | கார்த்திக், எம்சி ஜெஸ் | 05:40 | ||||||
3. | "உனக்கென்ன வேணும் சொல்லு" | தாமரை | பென்னி தயாள், மஹதி | 05:07 | ||||||
4. | "என்னை அறிந்தால்" | தாமரை | தேவன் ஏகாம்பரம், மார்க் தாமஸ், அபிஷேக் | 05:43 | ||||||
5. | "அதாரு அதாரு" | விக்னேஷ் சிவன் | விஜய் பிரகாஷ், கானா பாலா | 04:55 | ||||||
6. | "மாயா பஜார்" | தாமரை | ஆளப் ராஜூ, பிரியா சுப்பிரமணியன், வேல்முருகன், கிருஷ்ணா ஐயர் | 04:14 | ||||||
7. | "இதயத்தில் ஏதோ ஒன்று" | தாமரை | சின்மயி | 03:55 | ||||||
மொத்த நீளம்: |
32.22 |
மேற்கோள்கள்
தொகு- ↑ "தல55 படத்தின் ஆக்கச்செலவு: 65கோடி". தினமலர். 28 அக்டோபர் 2014. பார்க்கப்பட்ட நாள் 2 நவம்பர் 2014.
- ↑ "என்னை அறிந்தால் வெளியீடு". Tamilulagam. 17 சனவரி 2015. Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 18 சனவரி 2015.
- ↑ "தல55 படத்திற்காக புதுக்குரல்". Behindwoods. 13 ஆகத்து 2014. Archived from the original on 2014-09-14. பார்க்கப்பட்ட நாள் 2 நவம்பர் 2014.
- ↑ "தல55 படத்தின் நிலவரம்". தினமலர். 6 அக்டோபர் 2014. பார்க்கப்பட்ட நாள் 2 நவம்பர் 2014.