தாமரை (கவிஞர்)

தாமரை, தமிழ்ப் பெண் கவிஞரும் திரைப்படப் பாடலாசிரியரும் ஆவார்.

தாமரை
பிறப்புதாமரை
10 நவம்பர் 1975 (1975-11-10) (அகவை 48)
இந்தியா கோயம்புத்தூர், தமிழ்நாடு, இந்தியா
தொழில்கவிஞர், பாடலாசிரியர், எழுத்தாளர், ஊடகவியலாளர்
காலம்1997—தற்போதுவரை
துணைவர்தியாகு

கோவையில் பிறந்த தாமரை, இயந்திரப் பொறியியல் பட்டதாரி. இவரின் தந்தை, கவிஞராகவும் நாடகாசிரியராகவும் விளங்கியுள்ளார். "ஒரு கதவும் கொஞ்சம் கள்ளிப்பாலும்" என்ற கவிதைத் தொகுப்பை அளித்துள்ள தாமரை, சிறுகதைகளும் எழுதக் கூடியவர். "சந்திரக் கற்கள்", "என் நாட்குறிப்பின் நடுவிலிருந்து சில பக்கங்கள்" ஆகிய சிறுகதைத் தொகுப்புகளைப் படைத்துள்ளார். இலக்கியப் படைப்புகளுக்காகத் திருப்பூர் தமிழ்ச்சங்க விருது, சிற்பி விருது ஆகிய விருதுகளையும் பல்வேறு பரிசுகளையும் பெற்றுள்ளார்.

"வசீகரா, அழகிய அசுரா, தவமின்றிக் கிடைத்த வரமே, இஞ்சேருங்கோ...” எனப் புகழ்மிக்க பாடல்கள் உட்பட நூற்றுக்கும் மேலான பாடல்களை இயற்றியுள்ளார். இலங்கை, சிங்கப்பூர் நாடுகளுக்குப் பயணித்துள்ளார். ஆங்கிலச் சொற்களைக் கலந்து பாடல்கள் எழுதுவதில்லை என இவர் உறுதி கொண்டுள்ளார்[1]. திரையிசைத் துறையில் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜயராஜ், இயக்குநர் கௌதம் மேனன் ஆகியோர் படங்களில் தாமரை அதிக பாடல்களை எழுதியுள்ளார். இம்மூவர் கூட்டணி வெற்றிப் பாடல்களை தந்துள்ளது.

பணிவாழ்வு

தொகு

தாமரை கோவை அரசினர் தொழில்நுட்பக் கல்லூரியில் உற்பத்திப் பொறியியலில் பட்டம் பெற்று ஆறு ஆண்டுகள் கோவையில் பணி புரிந்தார். கவிதையில் ஏற்பட்ட நாட்டத்தால் சென்னைக்கு குடிபெயர்ந்த தாமரை, அங்கு கட்டற்ற எழுத்தாளராக கட்டுரைகள், கவிதைகள்,கதைகள் எழுதி வந்தார். அவரது இலக்கிய ஆக்கங்களால் கவனிக்கப்பட்டு திரைப்படத்துறையில் அறிமுகமானார். இயக்குனர் சீமானின் "இனியவளே" திரைப்படத்திற்காக தென்றல் எந்தன் நடையைக் கேட்டது என்ற பாடல் மூலம் தமிழ்த் திரையுலகில் முதல் பெண் பாடலாசிரியராக[2] தாமரை அறிமுகமானார்.[3] தொடர்ந்து, உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் ("மல்லிகைப் பூவே"), தெனாலி ("இஞ்சேருங்கோ இஞ்சேருங்கோ") போன்ற திரைப்படங்களில் பாடல்கள் எழுதினார். ஹாரிஸ் ஜயராஜ் இசையில் மின்னலே திரைபட்டத்தில் இவரது பாடல் "வசீகரா" மிகவும் புகழ் பெற்று அவரது வாழ்வில் ஓர் திருப்புமுனையாக அமைந்தது.

மின்னலேக்குப் பிறகு இயக்குனர் கௌதம் மேனன் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜயராஜ், தாமரையின் மூவர் கூட்டணி (காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, பச்சைக்கிளி முத்துச்சரம் & வாரணம் ஆயிரம்) போன்ற படங்களில் வெற்றிக் கூட்டணியாக அமைந்தது. ஜெயராஜ் கௌதமை விட்டு விலகிய நேரத்தில் தாமரை இசையமைப்பாளர் ரகுமானுடன் கூட்டு சேர்ந்தார். சூலை 2014இல் மீண்டும் கௌதம் மேனன் , ஹாரிஸ் ஜயராஜ் தாமரை கூட்டணியாக இணைந்து அஜித் குமார் நடித்த 'என்னை அறிந்தால்..' திரைப்படத்தில் பங்காற்றினர். சனவரி 1, 2015இல் வெளியான இதன் இசைத்தொகுப்பு மிகுந்த பாராட்டுக்களைப் பெற்றுள்ளது.[4][5][6][7] தாமரை ரகுமான், ஜெயராஜ், கௌதம் தவிர யுவன் சங்கர் ராஜா (நந்தா, புதுக்கோட்டையிலிருந்து சரவணன், போஸ், பேரழகன், கண்ட நாள் முதல் & கண்ணாமூச்சி ஏனடா), ஜேம்ஸ் வசந்தன் (சுப்பிரமணியபுரம் & பசங்க) போன்ற இசையமைப்பாளர்களுடனும் பாலா, ஏ. ஆர். முருகதாஸ், வி. பிரியா, சசிகுமார் போன்ற இயக்குநர்களுடனும் பணியாற்றி உள்ளார்.

தனிவாழ்வு

தொகு

தாமரை மனித உரிமைப் போராளியும் தமிழ் தேசியவாதியுமான தியாகுவை திருமணம் புரிந்துள்ளார். இருவருக்கும் சமரன் என்ற மகன் உள்ளார்.[8] 2015 பெப்ரவரியில் தனது கணவர் 2014, நவம்பரிலிருந்து தன்னை நிராதரவாக விட்டுப் பிரிந்ததாக அறிக்கை விடுத்து தன்னைக் கணவருடன் சேர்த்து வைக்கக் கோரி உண்ணாநோன்பு போராட்டம் தொடங்கினார்.[9] முதலிரண்டு நாட்கள் சென்னையில் தியாகுவின் கட்சி அலுவலகத்தின் முன்னர் போராடிய தாமரை பின்னர் அடுத்த இரண்டு நாட்கள் வேளச்சேரியில் உள்ள தியாகுவின் மகளின் இல்லத்தின் முன் போராட்டத்தைத் தொடர்ந்தார். அடுத்து கோடம்பாக்கத்திலுள்ள பூங்கா ஒன்றில் தனது போராட்டத்தைத் தொடர்கிறார்.[10] இந்தச் சர்ச்சையில் இருதரப்பினருக்கும் பலர் ஆதரவான கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். தோழர் தியாகு தாமரையுடன் இணைந்து வாழ்வதற்கு இனி வாய்ப்பிலை என்றும் மகனிடம் மன்னிப்புக் கேட்டும் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

தாமரை நனிசைவ வாழ்வுமுறையை கடைபிடிப்பவரும் விலங்குரிமை ஆர்வலரும் ஆவார்.[11]

பாடல்கள் எழுதியுள்ள திரைப்படங்கள்

தொகு

திரைப்படங்களில் எழுதிய பாடல்களின் தொகுப்பு.[12]

வருடம் படம் பாடல்கள் குறிப்புகள்
1998 இனியவளே "தென்றல் எந்தன்" முதல் திரைப்பாடல்
உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் "மல்லிகை பூவே"
புதுமைப்பித்தன் "ஒன்னு ரெண்டு"
1999 கள்ளழகர் (திரைப்படம்) "தூண்டா தூண்டா"
விரலுக்கேத்த வீக்கம் "விரலுக்கேத்த வீக்கம்"
கண்ணோடு காண்பதெல்லாம் "ஏய் குருவி"
புதுக்குடித்தனம் "நிலவாக்கு என்னடி"
உன்னருகே நானிருந்தால் "எந்தன் உயிரே"
2000 ஜேம்ஸ் பாண்டு "வெண்ணிலா எதுவும்"
வீரநடை "சிங்கநடை "&" உசுரவேச்சன் மாமா"
தெனாலி "இஞ்சிருங்கோ இஞ்சிருங்கோ" உ
2001 மின்னலே "வசீகரா என் நெஞ்சினிக்க", "இரு விழி உன்னோடு",
"பூப்போல் பூப்போல்", "நெஞ்சைப் பூப்போல்" & "இவன் யாரோ"
"மாமா மாமா, ஏஏ அழகிய தீயே"
பாடல்கள் வாலி எழுதியது
மாயன் "அல்லி குளத்து "&" ஓரு நாடு"
நந்தா "கள்ளி அடி கள்ளி"
லவ் மேரேஜ் "ரோசா மலரே"
மஜ்னு "கரி கோரி"
காதலே சுவாசம் "காதலே காதலே சுவாசம்", "மனம் வலிக்குதே" & "சும்மா இரு"
2002 தமிழ் "கண்ணுக்குள்ளே கதாலா"
123 "ஏப்ரல் மழை"
ஏழுமலை (திரைப்படம்) "உன் புன்னகை"
ரன் "பானிக்காற்றே"
நம்ம வீட்டு கல்யாணம் "மின்னுத்து மின்னுத்து"
ஏப்ரல் மாதத்தில் "ஏய் நெஞ்சே"
வெற்றி அனைத்து பாடல்கள்
2003 சொக்கத்தங்கம் (திரைப்படம்) "வெள்ளை மனம்"
அன்பு "தவமின்றி கிடைத்த"
சாமி "இது தானா"
ஐசு "நெஞ்சில் நெஞ்சில் உன் பேர்" & "ஒரே ஒரே கானம்"
விசில் "அழகிய அசுரா"
காக்க காக்க அனைத்து பாடல்கள்
அலை "என் ரசிகையே"
2004 எங்கள் அண்ணா (திரைப்படம்) "முதல் முதலாக"
ஜெய் "மெது மெதுவாய்"
புதுக்கோட்டையிலிருந்து சரவணன் "மலர்களே மலர்களே"
தென்றல் "அடி தோழி" & "யேய் பொண்ணே"
வர்ணஜாலம் "நீ வேண்டும்"
காதல் டாட் காம் "இமைகாதா விழிகள்"
குத்து "என் நிலவு", "எனைத் தீண்டி விட்டாய்"
பேரழகன் (திரைப்படம்) "ஒரு அழகான"
அரசாட்சி "அரகோணத்தில் அரம்பம்" & "ஓ மொகல்லா மொகல்லா"
ஒரு முறை சொல்லிவிடு "எப்படி சொல்வது"
போஸ் "டோலி டோலி"
படம் வருடம் அனைத்துப் பாடல்களையும் எழுதியுள்ளாரா பிற குறிப்புகள்
கஜினி 2005 இல்லை x-மச்சி y-மச்சி பாடல் - கவிஞர் வாலி
கண்ட நாள் முதல் 2005 ஆம் -
வேட்டையாடு விளையாடு 2006 ஆம்
பீமா 2008
வாரணம் ஆயிரம் 2008 இல்லை ஏத்தி ஏத்தி பாடல் - நா.முத்துக்குமார்
காதலில் விழுந்தேன் 2008 இல்லை நாக்கமுக்க நாக்கமுக்க பாடலை படத்தின் இயக்குநரே எழுதியுள்ளார்
ஆதவன் 2008 இல்லை
யாவரும் நலம் 2009
நாணயம் 2010 இல்லை நான் போகிறேன் மேலே மேலே பாடல் மட்டும்
அய்யனார் 2010
விண்ணைத்தாண்டி வருவாயா 2010
தூங்கா நகரம் 2011
சென்னையில் ஒரு மழைக்காலம்
ஹெய் நீ ரொம்ப அழகா இருக்கே
கண்ணோடு காண்பதெல்லாம்
கார்த்திக் அனிதா
லவ் மேரேஜ்
மாசி
மஞ்சு
நெல்லு
நெஞ்சில் ஜில் ஜில்
புதுமைப்பித்தன்
ராகவன்
சா பூ திரி
உத்தரவு
வேலூர் மாவட்டம் (திரைப்படம்)
விசுவாசம் 2019 இல்லை கண்ணான கண்ணே பாடல் மட்டும்

எழுதிய பாடல்கள்

தொகு
 • வசீகரா என் நெஞ்சினிக்க உன் பொன் மடியில் தூங்கினால் போதும்[13]
 • ஒன்றா இரண்டா ஆசைகள் எல்லாம் சொல்லவே ஓர் நாள் போதுமா..அன்பே இரவை கேட்கலாம் விடியல் தாண்டியும் இரவே நீளுமா..
 • தவமின்றி கிடைத்த வரமே..இனி வாழ்வில் எல்லாம் சுகமே..

எழுதியுள்ள புத்தகங்கள்

தொகு

ஒரு கதவும் கொஞ்சம் கள்ளிப்பாலும் - கவிதைத் தொகுப்பு

மேற்கோள்கள்

தொகு
 1. கவிதாயினி தாமரை - அண்ணாகண்ணன்
 2. "ஆறாம்திணை: தாமரையுடன் நேர்காணல்". Archived from the original on 2007-09-26. பார்க்கப்பட்ட நாள் 2007-01-24.
 3. "Kavignar Thaamarai". fetna.org. பார்க்கப்பட்ட நாள் 7 April 2009.
 4. "Radiopetti - Yennai Arindhaal Music Review". Archived from the original on 2015-01-06.
 5. "Behindwoods - Yennai Arindhaal Music Review".
 6. "Sify Review". Archived from the original on 2015-01-02.
 7. "Studioflicks Review".
 8. http://www.marunadanmalayali.com/cinema/stardust/famous-lyricist-protests-for-missing-husband-14659
 9. "நீதி கிடைக்குமா?- கவிஞர் தாமரையின் உருக்கமான முழு அறிக்கை..." விகடன். 27 பெப்ரவரி 2015. பார்க்கப்பட்ட நாள் 4 மார்ச் 2015. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
 10. "வேளச்சேரியிலிருந்து கோடம்பாக்கத்துக்கு போராட்டத்தை மாற்றினார் தாமரை!". ஒன் இந்தியா. 3 மார்ச் 2015. பார்க்கப்பட்ட நாள் 4 மார்ச் 2015. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
 11. "நன்மை பயக்கும் நனிசைவம் [Veganism results in good]" (in Tamil). Kumudam Reporter (Chennai: Kumudam Publications) 18 (67): 16–17. 23 November 2018. 
 12. "ஆறாம் திணை - கவிஞர் தாமரை வாழ்க்கை வரலாறு". Archived from the original on 2013-02-06. பார்க்கப்பட்ட நாள் 2013-03-24.
 13. [1][தொடர்பிழந்த இணைப்பு]

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=தாமரை_(கவிஞர்)&oldid=3930758" இலிருந்து மீள்விக்கப்பட்டது