மின்னலே (திரைப்படம்)

(மின்னலே இலிருந்து வழிமாற்றப்பட்டது)

மின்னலே திரைப்படம் 2001 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். மாதவன்,ரீமா சென் போன்ற பலரின் நடிப்பிலும் வெளிவந்த இத்திரைப்படத்தை கௌதம் மேனன் இயக்கினார்.

மின்னலே
இயக்கம்கௌதம் மேனன்
தயாரிப்புDr. முரளி மனோகர்
கதைகௌதம் மேனன்
இசைஹாரிஸ் ஜயராஜ்
நடிப்புமாதவன்,
ரீமா சென்,
அப்பாஸ்,
விவேக்,
நாகேஷ்
வெளியீடு2001
ஓட்டம்150 நிமிடங்கள்
மொழிதமிழ்
ஆக்கச்செலவுRs.7,30,00,000

வகைதொகு

காதல்படம்

கதைதொகு

கல்லூரியில் அடாவடித்தனம் செய்யும் மாணவனான ராஜேஷ் (மாதவன்) அங்கு பயிலும் மாணவனான சாமுவேல் (அப்பாஸ்) இருவரும் பரம எதிரிகள். பலமுறை மோதியும் உள்ளனர். இவர்களிருவரும் கல்லூரியிலிருந்து வேலைகள் தேடவும் ஆரம்பிக்கின்றனர். அச்சமயம் ராஜேஷ் பெங்களூரில் அழகிய பெண்ணொருவரைச் சந்திக்கின்றார். அவரைப் பார்த்த உடனே அவர் மீது காதல் கொள்ளும் ராஜேஷ் அவரைத் தேடியும் செல்கின்றார். ஆனால் அவரோ சென்னையிலேயே தங்கியுள்ளார் என்பதனை பின்னைய நாட்களில் அறிந்து கொள்ளும் ராஜேஷ் அவரைப் பலமுறை சந்திக்கவும் செய்கின்றார். அச்சமயம் அமெரிக்காவில் தங்கி வேலை பார்த்து வந்த சாமுவேல் ராஜேஷ் காதலித்த பெண்ணையே திருமணம் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது இதனை அறிந்து கொள்ளும் ராஜேஷ் தானே அமெரிக்காவிலிருந்து வந்திருக்கும் மாப்பிள்ளை என்ற பொய்யைக் கூறி அவர் வீட்டினுள் நுழையவும் செய்கின்றார். இச்செய்தியை பின்னர் உணர்ந்து கொள்ளும் அவர் காதலியும் அவரை ஏற்றாரா என்பதே கதையின் முடிவு.

நடிகர்கள்தொகு

துணுக்குகள்தொகு

  • 175 நாட்கள் தொடர்ந்து திரையில் காண்பிக்கப்பட்டது இத்திரைப்படம்.
  • திரையில் வெளியாகின முதல் வாரத்தில் 40 மில்லியன் இந்திய ரூபாய்க்களையும் மொத்தத்தொகையாக 375 மில்லியன் இந்திய ரூபாய்களையும் வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது.
  • இத்திரைப்படம் ஹிந்தி மொழியில் எடுக்கப்பட்டு வெளியிடப்பட்டது.
  • இத்திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக ஹாரிஸ் ஜெயராஜ் அறிமுகமானார்.

வசீகரா பாடல்தொகு

வசீகரா என் நெஞ்சினிக்க, மின்னலே திரைப்படத்தில் இடம்பெற்ற பாடலாகும். தாமரை என்ற பெண் கவிஞர் இந்தப் பாடலை எழுதினார். "பெண்களின் உணர்வுகளையும் ஆண்களின் வரிகளில் கேட்டே பழகிய நமக்கு, தாமரை எழுதிய ’வசீகரா’ பாடல் தமிழ் திரைப்படத்தில் முதன் முதலாக பெண் ஒருத்தியின் காதல் உணர்வு பெண் பார்வையில் எழுதப்பட்ட பாடலாக பதிவாகி இருக்கிறது" என்று இந்தப் பாடல் நல்ல வரவேற்பைப் பெற்றது[1].

பாடல்கள்தொகு

இத்திரைப்படத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசையை அமைத்தவர் ஹாரிஸ் ஜயராஜ் ஆவார். பாடல் வரிகளை வாலி மற்றும் தாமரை ஆகியோர் எழுதியுள்ளனர்.[2] இத்திரைப்படத்தின் வணிக ரீதியான மாபெரும் வெற்றிக்கு இப்படத்தின் சிறப்பான வரவேற்பு பெற்ற பாடல்கள் ஒரு முக்கிய காரணமாகும். படத்தின் பாடல்கள் பிப்ரவரி 2001, அன்று சென்னையில் நடந்த இசை வெளியீட்டு விழாவில் வெளியிடப்பட்டன.[3] ஹாரிஸ் ஜயராஜ் இப்படத்தின் சிறப்பான இசையமைப்பிற்காக தனது முதல் பிலிம்பேர் விருதைப் பெற்றார்.

எண் பாடல் பாடகர்கள்
1 "அழகிய தீயே" ஹரீஸ் ராகவேந்திரா, திம்மி
2 "ஒரே ஞாபகம்" தேவன் ஏகாம்பரம்
3 "மடி மடி" திம்மி, கார்த்திக்
4 "நெஞ்சைப் பூப்போல்" ஹரீஸ் ராகவேந்திரா
5 "ஓ மாமா மாமா" சங்கர் மகாதேவன், திப்பு
6 "பூப்போல் பூப்போல்" திப்பு, கார்த்திக்
7 "வேறென்ன வேறென்ன" உன்னிகிருஷ்ணன், ஹரிணி
8 "வசீகரா என் நெஞ்சினிக்க" பாம்பே ஜெயஸ்ரீ
9 "வெண்மதி வெண்மதியே" திப்பு, ரூப் குமார் ரத்தோடு

வெளியிணைப்புகள்தொகு

மேற்கோள்கள்தொகு

  1. தாமரை
  2. "Minnale songs lyrics". tamilsonglyrics. Archived from the original on 7 February 2015. http://web.archive.org/web/20150207052434/http://www.tamilsonglyrics.org/minnale_movie_songs_videos_lyrics_wiki/. 
  3. http://web.archive.org/web/20010204044200/http://www.chennaionline.com/eevents/minnale.asp
"https://ta.wikipedia.org/w/index.php?title=மின்னலே_(திரைப்படம்)&oldid=2938942" இருந்து மீள்விக்கப்பட்டது