விரலுக்கேத்த வீக்கம்

விரலுக்கேத்த வீக்கம் 1999 ஆம் ஆண்டு வெளியான தமிழ்த் திரைப்படம்.

விரலுக்கேத்த வீக்கம்
இயக்கம்வி.சேகர்
தயாரிப்புஎஸ்.எஸ்.துரை ராஜு
கே.பார்த்திபன்
கதைவி.சேகர்
இசைதேவா
நடிப்புநாசர்
ஊர்வசி
குஷ்பூ
லிவிங்க்ஸ்டன்
கனகா
விவேக்
வடிவேலு
கோவை சரளா
ஒளிப்பதிவுபி.எஸ்.செல்வம்
படத்தொகுப்புஏ.பி.மணிவண்ணன்
வெளியீடுசூலை 16, 1999
நாடுஇந்தியா
மொழிதமிழ்

வகை தொகு

குடும்பத் திரைப்படம்

கதை தொகு

கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.

ஒரே நிறுவனத்தில் வேலை செய்யும் மூன்று நண்பர்கள், ஆடம்பர விரும்பிகளாக , ஊதாரித்தனமாக செலவழிப்பவர்களாக இருக்கிறார்கள். கடன் வாங்கியும் , பொய் சொல்லியும் செலவு செய்கிறார்கள். கடன் தொல்லை பொறுக்க முடியாத அந்த நண்பர்களின் மனைவிமார் மூவரும் தங்கள் கணவர் பேச்சை மீறி வேலைக்குச் செல்கிறார்கள். நண்பர்களின் பணித்திறன் இன்மையால் நிறுவனத்திலும் வேலை போகிறது. தங்கள் மனைவிகளைத் தங்கள் கட்டுப்பாடில் கொண்டு வர என்ன முயற்சி செய்யலாம் என்று போராடுகிறார்கள் அந்த நண்பர்கள். ஆடம்பர ஆசைகளை உதறிவிட்டு இருக்கும் தகுதிக்கேற்ப சிக்கனமாய் இருந்தாலே வாழ்வு சிறக்கும் என்பதை நகைச்சுவையுடன் விளக்கும் குடும்பச்சித்திரம் இது.