ஊர்வசி (நடிகை)

இந்தியத் திரைப்பட நடிகை

ஊர்வசி (பிறப்பு: 25 சனவரி 1967) இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். இவருடைய இயற்பெயர் கவிதா ரஞ்சினி. ஊர்வசி என்ற மேடைப் பெயரின் மூலமாக பரவலாக அறியப்படும் இவர் கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் பிறந்தவர். மலையாளம், தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட மொழிப் படங்களில் நடித்துள்ளார். தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்குகொண்டு வருகிறார். மலையாள மொழிப் படங்களில் பிரதானமாக நடித்துள்ள இவர் கே.பாக்கியராஜ் இயக்கிய முந்தானை முடிச்சு என்ற படத்தின் மூலமாகத் தமிழ்த் திரைப்படத்தில் அறிமுகமானார்.

ஊர்வசி
Urvashi-3333.jpg
பிறப்புகவிதா இரஞ்சனி[1]
திருவனந்தபுரம், கேரளம், இந்தியா
வாழ்க்கைத்
துணை
பிள்ளைகள்2
உறவினர்கள்

குடும்பம்தொகு

இவர் முதலில் மலையாள நடிகர் மனோஜ் கே.ஜெயன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்தத் தம்பதியினருக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. முதல் கணவருடனான சச்சரவு காரணமாக திருமண முறிவு பெற்றார். பின்னர் இவர் 2014ஆம் ஆண்டு தனது 47ஆம் வயதில் சிவ பிரசாத் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார்.[2]

மேற்கோள்கள்தொகு

  1. "Kavitha Ranjini is the real name of actress Urvashi - Times of India".
  2. திருமணம் செய்தது ஏன்? ஊர்வசி விளக்கம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஊர்வசி_(நடிகை)&oldid=3429222" இருந்து மீள்விக்கப்பட்டது