குஷ்பு சுந்தர்

இந்திய அரசியல்வாதி, நடிகை, தயாரிப்பாளர் (பிறப்பு 1970)
(குஷ்பூ இலிருந்து வழிமாற்றப்பட்டது)

குஷ்பு சுந்தர் (இயற்பெயர்: நக்கர்த் கான், பிறப்பு: செப்டம்பர் 29, 1970) தமிழகத் திரைப்பட நடிகை மற்றும் அரசியல்வாதி ஆவார். இவர் தற்போது பாரதிய ஜனதா கட்சியில் உள்ளார்.

குஷ்பு சுந்தர்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
நக்கர்த் கான்[1]

(1970-09-29)29 செப்டம்பர் 1970
பம்பாய், மகாராட்டிரா, இந்தியா
(தற்போது மும்பை)
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
பிற அரசியல்
தொடர்புகள்
இந்திய தேசிய காங்கிரசு (2014-2020),
திராவிட முன்னேற்றக் கழகம் (2010-2014)
துணைவர்
பிள்ளைகள்அவந்திகா
ஆனந்திதா
வாழிடம்(s)சென்னை,
தமிழ்நாடு, இந்தியா
தொழில்

1980களில் குழந்தை நட்சத்திரமாக தன் திரைப்பட வாழ்க்கையைத் தொடங்கினார். 1989 ஆம் ஆண்டு வருஷம் 16 என்ற தமிழ்த் திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். 1990களில் தமிழ்த் திரைப்பட உலகின் முன்னணி கதாநாயகியாகத் திகழ்ந்தார். கன்னடம், மலையாளம் போன்ற பிற மொழிப் படங்களிலும் நடித்தார். பின்னர் திரைப்பட இயக்குனர் சுந்தர் சி.யை மணந்தார்.[2] தற்போது குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாகவும் நடுவராகவும் பணியாற்றி வருகிறார். தன் கணவர் சுந்தர். சி கதாநாயகனாக நடிக்கும் படங்களை “அவ்னி சினிமாக்ஸ்” என்ற படத்தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரித்து வருகிறார்.[3]

குறிப்பிடத்தக்க திரைப்படங்கள்

தொகு

நடித்த திரைப்படங்கள்

தொகு

தமிழ்த் திரைப்படங்கள்

தொகு
ஆண்டு திரைப்படம் கதாபாத்திரம் குறிப்புகள்
1988 தர்மத்தின் தலைவன் தேவி
1989 வருஷம் 16 ராதிகா
வெற்றி விழா ஜெயா
1990 கிழக்கு வாசல் செல்வி
நானும் இந்த ஊருதான்
தாலாட்டு பாடவா நர்மதா
ஆரத்தி எடுங்கடி
நடிகன் கீதா
மை டியர் மார்த்தாண்டன்
பாட்டுக்கு நான் அடிமை
மைக்கேல் மதன காமராஜன் சாலினி சிவராமன்
1991 நாட்டுக்கு ஒரு நல்லவன் ரேகா
விக்னேஷ்வர்
சின்ன தம்பி நந்தினி
கிழக்குக் கரை மகாலட்சுமி
பிரம்மா ஜெனீபர்
இரவு சூரியன்
1992 பாண்டியன்
அண்ணாமலை சுபு
மன்னன் மீனா
இது நம்ம பூமி நளினி
அம்மா வந்தாச்சு நந்தினி
பாண்டித்துரை முத்துலட்சுமி
சேவகன் அஞ்சலி
சிங்காரவேலன் சுமதி
நாளைய செய்தி
ரிக்சா மாமா
1993 மறவன் தங்கத்தாய்
புருச லட்சணம் அபிராமி (அம்மு)
உத்தம ராஜா
தர்ம சீலன் துர்கா
காத்திருக்க நேரமில்லை பவானி
பிரதாப்
ரோஜாவைக் கிள்ளாதே அனு
வேடன் உஷா
கேப்டன் மகள்
ஜாதிமல்லி ஸ்ரீ ரஞ்சினி
1994 மனசு ரெண்டும் புதுசு லட்சுமி
வனஜா கிரிஜா வனஜா
நாட்டாமை லட்சுமி
இந்து சிறப்புத் தோற்றம்
வா மகளே வா
1995 சின்ன வாத்தியார்
கருப்பு நிலா
முறை மாமன் இந்து
நாட்டுப்புற பாட்டு
வர்றார் சண்டியர்
என் பொண்டாட்டி நல்லவ
கோலங்கள்
முத்துக்குளிக்க வாரிகளா
தேடி வந்த ராசா
1996 எனக்கொரு மகன் பிறப்பான்
இரட்டை ரோஜா
கோபாலா கோபாலா
1997 கல்யாண வைபோகம்
தாலி புதுசு
பத்தினி
எட்டுப்பட்டி ராசா
1998 கலர் கனவுகள்
ஜாலி
துள்ளித் திரிந்த காலம் தேவி
கல்யாண கலாட்டா
குரு பார்வை
பொண்ணு விளையிற பூமி
வீரத்தாலாட்டு
சிம்மராசி
வீரம் விளஞ்ச மண்ணு
1999 மின்சார கண்ணா
உன்னைத் தேடி சிறப்புத் தோற்றம்
பொண்ணு வீட்டுக்காரன்
மனைவிக்கு மரியாதை
மலபார் போலிஸ்
சுயம்வரம்
குடும்பச் சங்கிலி
2000 அலைபாயுதே சிறப்புத் தோற்றம்
கூடி வாழ்ந்தால் கோடி நன்மை
மகளிர்க்காக
புரட்சிக்காரன்
உன்னை கண் தேடுதே
விரலுக்கேத்த வீக்கம்
சின்னச் சின்ன கண்ணிலே ரதி
குரோதம் 2
கரிசக்காட்டு பூவே
சிம்மாசனம்
வீரநடை
2001 விண்ணுக்கும் மண்ணுக்கும்
2002 ஸ்ரீ பண்ணாரி அம்மன் சிறப்புத் தோற்றம்
2004 காற்றுக்கென்ன வேலி
2005 ஜூன் ஆர்
வெற்றிவேல் சக்திவேல்
2007 வேகம்
பழனி
பெரியார்
2009 வில்லு சிறப்புத் தோற்றம்
2010 வாடா சிறப்புத் தோற்றம்
2011 பொன்னர் சங்கர்
இளைஞன்
2013 தீயா வேலை செய்யணும் குமாரு சிறப்புத் தோற்றம்

நடித்த தொலைக்காட்சி நாடகங்கள்

தொகு

அரசியல்

தொகு

தி.மு.க.

தொகு

2010 இல் தி.மு.க. கட்சியில் இணைந்து தேர்தல் பிரசாரம் செய்தார்.[4][5] 2014 இல் தி.மு.க. விலிருந்து விலகுவதாக அறிவித்தார்.[6][7]

இந்திய தேசிய காங்கிரசு

தொகு

பின்னர் 26 நவம்பர் 2014 அன்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியைச் சந்தித்த பின்னர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.[8]

பாரதிய ஜனதா கட்சி

தொகு

பின்னர் 12 அக்டோபர், 2020இல் குஷ்பு காங்கிரஸ்லிருந்து விலகி பாஜகவில் இணைந்தார்.[9]

மேற்கோள்கள்

தொகு
  1. "Actor-politician Khushbu Sundar silences trolls for 'discovering' she is Muslim – '47 yrs late'!".
  2. http://cinema.dinamalar.com/tamil-news/8487/cinema/Kollywood/Kushboo-gifts-Audi-car-to-sundar.c.htm
  3. "வாழ்க்கையில் நடந்த சோகத்தை, மறக்க முடியாமல் இன்றும் நினைத்து அழும் குஷ்பு!!".
  4. "Kushboo jumps on the DMK bandwagon". ON DECCAN HERALD. பார்க்கப்பட்ட நாள் 16 சூன் 2014.
  5. "Kushboo joins DMK". The Hindu. பார்க்கப்பட்ட நாள் 16 சூன் 2014.
  6. "Actor Kushboo quits DMK". The Hindu. பார்க்கப்பட்ட நாள் 16 சூன் 2014.
  7. "திமுகவில் இருந்து நடிகை குஷ்பூ விலகல்: உழைப்பிற்கு பலனில்லாததால் விலகல் என விளக்கம்". தினதந்தி. பார்க்கப்பட்ட நாள் 16 சூன் 2014.
  8. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2014-11-29. பார்க்கப்பட்ட நாள் 2014-11-26.
  9. "குஷ்பு பாஜகவில் இணைந்தார்; இழப்பில்லை என்கிறது காங்கிரஸ்". BBC தமிழ். பார்க்கப்பட்ட நாள் 12 அக்டோபர் 2020.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=குஷ்பு_சுந்தர்&oldid=3956355" இலிருந்து மீள்விக்கப்பட்டது