கல்யாண வைபோகம்

கல்யாண வைபோகம் 1997 ஆம் ஆண்டு ராம்கி, குஷ்பூ மற்றும் சங்கீதா நடிப்பில், என். ரத்னம் இயக்கத்தில், தேவா இசையில் வெளியான தமிழ் திரைப்படம்[1][2][3]. இப்படம் தெலுங்குப் படமான ஆயனாகி இட்டாரு மற்றும் இந்திப்படமான ஆய்நாவைத் தழுவி உருவாக்கப்பட்டது.

கல்யாண வைபோகம்
இயக்கம்என். ரத்னம்
தயாரிப்புகே. எஸ். கே. சங்கர சுப்ரமணியன்
கே. எஸ். கே. ஆறுமுகம்
கே. எஸ். கே. கார்த்திகேயன்
கே. எஸ். கே. குமரன்
கதைஎன். ரத்னம் (வசனம் )
திரைக்கதைஎன். ரத்னம்
இசைதேவா
நடிப்பு
ஒளிப்பதிவுபி. எஸ். நந்தலால்
படத்தொகுப்புராஜராஜன் — கிடோன்
கலையகம்கோமதி சங்கர் பிலிம்ஸ்
வெளியீடுசெப்டம்பர் 5, 1997 (1997-09-05)
ஓட்டம்145 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கதைச்சுருக்கம்தொகு

ரம்யா (குஷ்பூ) மற்றும் சாந்தி (சங்கீதா) இருவரும் சகோதரிகள். ரம்யா முரட்டு சுபாவமுள்ளவள். ஆனால் சாந்தி சாந்தமான குணமுடையவள். சக்தி (ராம்கி) சிறுகதை எழுத்தாளர். அநேக தமிழ் வார இதழ்களில் அவர் எழுதிய சிறுகதைகள் பிரசுரமாகி பிரபலமானவர். சாந்தி, சக்தியின் தீவிர ரசிகை. சக்தியின் சிறுகதைகளைப் பாராட்டி தன் பெயரைக் குறிப்பிடாமல் பல கடிதங்களை அவருக்கு எழுதுகிறாள். சக்தியைக் காதலிக்கிறாள். சக்தி, சாந்தியை சந்தித்துத் தன் காதலைச் சொல்ல விரும்புகிறான்.

எதிர்பாரா திருப்பமாக ரம்யாவை சாந்தி என்று நினைத்து அவளுடன் பழகுகிறான். சக்தியும் ரம்யாவும் காதலிக்கின்றனர். ரம்யா விளம்பரப் பட நடிகையாக பிரபலமடைகிறாள். மனமுடைந்த சாந்தி உண்மையை வெளிப்படுத்தாமல் அமைதி காக்கிறாள். சக்தி மற்றும் ரம்யா திருமணம் செய்ய முடிவெடுக்கின்றனர். திருமண நாளன்று, திரைப்படங்களில் கதாநாயகியாக நடிப்பதே தன் லட்சியம் என்றும், திருமணம் செய்துகொண்டால் தன் லட்சியம் நிறைவேறாது என்றும் கூறி, தான் திரைப்படத்துறையில் சாதிக்கும்வரை காத்திருக்குமாறு சக்தியைக் கேட்டுக்கொள்கிறாள். விரக்தியடையும் சக்தி, ரம்யாவின் சகோதரியான சாந்தியைத் திருமணம் செய்கிறான். இருவரும் மகிழ்ச்சியுடன் வாழ்கின்றனர். ரம்யா அவர்கள் குடும்பத்தில் மீண்டும் தலையிடுகிறாள். அதன்பின் நடப்பது மீதிக்கதை.

நடிகர்கள்தொகு

இசைதொகு

படத்தின் இசையமைப்பாளர் தேவா. பாடலாசிரியர்கள் புலமைப்பித்தன், பழனிபாரதி. நெல்லை அருள்மணி, ரவிபாரதி மற்றும் நாவேந்தன்.

வ.எண் பாடல் பாடகர்கள் காலநீளம்
1 விழியோட எஸ். பி. பாலசுப்ரமணியம், சித்ரா 2:16
2 ரோஜா பூவிலே மனோ, சுவர்ணலதா 3:30
3 ஹாலிவுட் சான்ஸ் மால்குடி சுபா 1:57
4 டாடா புடலா எஸ். ஜானகி 4;11

மேற்கோள்கள்தொகு

  1. "கல்யாண வைபோகம்". Archived from the original on 2010-12-25. 2019-03-09 அன்று பார்க்கப்பட்டது.CS1 maint: unfit url (link)
  2. "கல்யாண வைபோகம்". 2019-04-04 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2019-03-09 அன்று பார்க்கப்பட்டது.
  3. "கல்யாண வைபோகம்". 2013-09-27 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2019-03-09 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கல்யாண_வைபோகம்&oldid=3659740" இருந்து மீள்விக்கப்பட்டது