பழனிபாரதி

palani barathi

பழநிபாரதி (Pazhani Bharathi, பிறப்பு:14 சூலை) தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும் கவிஞரும் ஆவார்.[2][3] திரைப்படங்களில் இவர் பாடல்கள் தனித்தன்மை கொண்டதாக விளங்கின. கவிதை நூல்கள் பலவும் எழுதி வரும் இவர் தை என்னும் ஆண்டு இதழின் ஆசிரியர் குழுவிலும் ஒருவராக உள்ளார். இளையராஜா இலக்கிய விருது உட்பட பல விருதுகளை இவர் பெற்றிருக்கிறார்.

பழநி பாரதி
கவிஞர் பழநிபாரதி.JPG
கவிஞர் பழநிபாரதி
பிறப்புபாரதி
காரைக்குடி, தமிழ்நாடு
தேசியம்தமிழர்
பணிதிரைப்படப் பாடலாசிரியர்
அறியப்படுவதுகவிஞர், பாடலாசிரியர்
பெற்றோர்கவிஞர் சாமி பழனியப்பன், கமலா[1]

இவரை உவமைக் கவிஞர் சுரதா "இதோ ஒரு மகாகவி புறப்பட்டு விட்டான்" என்று பாராட்டியுள்ளார். பெரும்புள்ளி என்ற திரைப்படத்தில் பாடல் எழுதி தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகம் ஆனார். 1500 இற்கும் மேற்பட்ட திரைப்பாடல்களை எழுதியுள்ளார்.[4]

இவர் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் 60ஆவது பிறந்தநாளுக்குப் பிரபாகரன்... வழித்துணையல்ல.. வழி என்ற பாடலை எழுதி வெளியிட்டார்.

விருதுகள்தொகு

 • கவிக்கோ விருது - 2021[5]

கவிதை நூல்கள்தொகு

பழனி பாரதி எழுதியுள்ள கவிதை நூல்கள்.[6]

 • நெருப்புப் பார்வைகள்
 • வெளிநடப்பு
 • காதலின் பின்கதவு
 • மழைப்பெண்
 • முத்தங்களின் பழக்கூடை
 • புறாக்கள் மறைந்த இரவு
 • தனிமையில் விளையாடும் பொம்மை
 • தண்ணீரில் விழுந்த வெயில்
 • சூரியனுக்குக் கீழ் ஒரு வெள்ளைக் காகிதம்

பாடலாசிரியராகதொகு

 1. 1991 - பெரும்புள்ளி (அறிமுகம்)- பாடல் இடம்பெறவில்லை
 2. 1993 - கோகுலம்
 3. 1994 - புதிய மன்னர்கள்
 4. 1996 - மேட்டுக்குடி
 5. 1996 - செங்கோட்டை
 6. 1996 - பூவே உனக்காக
 7. 1997 - சூர்யவம்சம்
 8. 1997 - தேடினேன் வந்தது
 9. 1997 - ராசி
 10. 1997 - பூச்சூடவா
 11. 1997 - பெரிய இடத்து மாப்பிள்ளை
 12. 1997 - உல்லாசம்
 13. 1997 - பெரிய மனுஷன்
 14. 1997 - அருணாச்சலம்
 15. 1997 - நந்தினி
 16. 1997 - கல்யாண வைபோகம் ‎ 
 17. 1998 - ஆசைத் தம்பி ‎ 
 18. 1998 - அரிச்சந்திரா ‎ 
 19. 1998 - அவள் வருவாளா
 20. 1998 - என் உயிர் நீதானே
 21. 1998 - பொன்மனம்
 22. 1998 - கிழக்கும் மேற்கும் ‎ 
 23. 1998 - உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்
 24. 1999 - தொடரும்
 25. 1999 - என்றென்றும் காதல் ‎ 
 26. 1999 - புதுக்குடித்தனம்
 27. 2000 - பாரதி
 28. 2001 - காசி
 29. 2001 - தாலி காத்த காளியம்மன்
 30. 2001 - நந்தா
 31. 2002 - ஜெயம்
 32. 2002 - கார்மேகம்
 33. 2003 - அன்பே அன்பே
 34. 2003 - புன்னகை பூவே
 35. 2004 - குத்து
 36. 2005 - மாயாவி
 37. 2006 - வாத்தியார்
 38. 2007 - நான் அவன் இல்லை
 39. 2009 - குரு என் ஆளு
 40. 2010 - திருப்பூர் ‎ 
 41. 2018 - கேணி

தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்தொகு

மேற்கோள்கள்தொகு

 1. Correspondent, Vikatan. "நாங்கள் 'பாரதி' ஆனது இப்படித்தான்!". https://www.vikatan.com/. 2022-05-21 அன்று பார்க்கப்பட்டது. External link in |website= (உதவி)
 2. "நான்... பழநிபாரதி - Kungumam Tamil Weekly Magazine". www.kungumam.co.in. 2022-05-26 அன்று பார்க்கப்பட்டது.
 3. http://www.ntamil.com/451 பரணிடப்பட்டது 2015-02-24 at the வந்தவழி இயந்திரம் என் தமிழ் இணையம்
 4. "பழநிபாரதி - கரும்பாறை மனசில் மயில் தோகை விரித்தவர்". ETV Bharat News. 2022-05-26 அன்று பார்க்கப்பட்டது.
 5. "பாடலாசிரியர் பழனிபாரதிக்கு கவிக்கோ விருது: விஐடி வேந்தர் கோ.விசுவநாதன் வழங்கினார்". Hindu Tamil Thisai. 2022-05-24 அன்று பார்க்கப்பட்டது.
 6. "கவிதை அழியாது; சரித்திரத்தில் புனிதமாகப் போற்றப்டுவது ஒரு கவியின் பிறப்புதான்! -திரைப்படப் பாடலாசிரியர் பழநிபாரதி நேர்காணல்". 2011-03-14 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2015-03-16 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி)

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பழனிபாரதி&oldid=3436934" இருந்து மீள்விக்கப்பட்டது