கிழக்கும் மேற்கும்

மு. களஞ்சியம் இயக்கத்தில் 1998 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

கிழக்கும் மேற்கும் 1998 ஆம் ஆண்டு நெப்போலியன், நாசர், தேவயானி மற்றும் கீதா நடிப்பில், மு. களஞ்சியம் இயக்கத்தில், இளையராஜா இசையில் வெளியான தமிழ் திரைப்படம்[1][2].

கிழக்கும் மேற்கும்
இயக்கம்மு. களஞ்சியம்
தயாரிப்புஅமுதா துரைராஜ்
தெய்வானை துரைராஜ்
திவ்யா துரைராஜ்
கதைமு. களஞ்சியம்
இசைஇளையராஜா
நடிப்பு
ஒளிப்பதிவுகே. வி. மணி
படத்தொகுப்புபி. லெனின்
வி. டி. விஜயன்
கலையகம்தெய்வானை மூவி இன்டர்நேஷனல்
வெளியீடுசனவரி 14, 1998 (1998-01-14)
ஓட்டம்165 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கதைச்சுருக்கம்

தொகு

சூர்யமூர்த்தியின் (நெப்போலியன்) சகோதரி தில்லை (கீதா). அவர்களது தந்தையின் இரண்டாவது மனைவி சின்னம்மா (தேனி குஞ்சரம்மாள்) சிறுவயதிலேயே அவர்களை வீட்டைவிட்டு துரத்திவிடுகிறார். இருவரும் சிரமப்பட்டு முன்னேறுகின்றனர்.

கீதாவிற்கு மாப்பிள்ளை பார்க்கிறான் சூர்யமூர்த்தி. பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த காத்தலிங்கம் (நாசர்) என்பவனுக்குத் திருமணம் செய்ய விரும்பி அவனைப்பற்றி விசாரிக்கும்போது அனைவரும் அவனை நல்லவன் என்று பொய் சொல்கின்றனர். அதை நம்பி கீதாவைக் காத்தலிங்கத்திற்கே மணம் முடிக்கிறான் சூர்யமூர்த்தி. திருமணத்திற்கு பிறகு காத்தலிங்கம் மது அருந்துபவன் என்பதும், அக்கிராமத்திலுள்ள வள்ளி (விசித்திரா) என்ற பெண்ணுடன் அவனுக்குள்ள தொடர்பும் தெரிகிறது.

காத்தலிங்கத்தின் தங்கை மல்லிகாவும் (தேவயானி) சூர்யமூர்த்தியும் காதலிக்கின்றனர். தில்லை இதனால் பிரச்சனை உருவாகும் என்று சூர்யமூர்த்தியை எச்சரிக்கிறாள். ஒரு இக்கட்டான சூழலில் சூர்யமூர்த்தியைத் தவறாகப் புரிந்துகொள்ளும் மல்லிகா அவனை வெறுக்கிறாள். காத்தலிங்கம், மல்லிகாவிற்கு வேறொரு மாப்பிளையுடன் ஏற்பாடு செய்த திருமணம் நின்றுபோகிறது. அதற்கு மல்லிகா- சூர்யமூர்த்தியின் காதல்தான் காரணம் என்று மாப்பிள்ளைவீட்டார் குற்றம்சாட்டுகின்றனர். இதனால் ஆத்திரப்படும் காத்தலிங்கம், சூர்யமூர்த்தியின் முன் தில்லையை அடிக்கிறான். இதைத் தடுக்க முயலும் சூர்யமூர்த்தி ஒரு கட்டத்தில் காத்தலிங்கத்தை அடித்து விடுகிறான். காத்தலிங்கம் தில்லையை விட்டு வள்ளியுடன் வாழ முடிவுசெய்கிறான். அதன்பின் நடந்தது என்னவென்பது மீதிக்கதை.

நடிகர்கள்

தொகு

விருதுகள்

தொகு

1998 தமிழக அரசு திரைப்பட விருதுகள்[3]

படத்தின் இசையமைப்பாளர் இளையராஜா. பாடலாசிரியர்கள் அறிவுமதி, பழனிபாரதி மற்றும் வாசன்[4][5][6].

வ. எண் பாடல் பாடகர்கள் காலநீளம்
1 அக்கா நீ சிரிச்சா பவதாரிணி 5:03
2 கத்துங்குயிலே சாதனா சர்கம் 4:53
3 கூடப்பொறந்த இளையராஜா 5:05
4 ஒரு கத்திரிக்கா இளையராஜா 5:05
5 பூ நிலவொன்று எஸ். பி. பாலசுப்ரமணியன் 5:15
6 பூங்காற்றே பவதாரிணி 4:44
7 வயசுப்புள்ள சாதனா சர்கம் 5:25
8 என்னோட உலகம் இளையராஜா 5:08

மேற்கோள்கள்

தொகு
  1. "கிழக்கும் மேற்கும்". Archived from the original on 2007-08-15. பார்க்கப்பட்ட நாள் 2019-02-28.{{cite web}}: CS1 maint: unfit URL (link)
  2. "கிழக்கும் மேற்கும்".
  3. "தமிழக அரசின் விருது" இம் மூலத்தில் இருந்து 2013-12-30 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131230233423/http://www.hindu.com/2000/07/18/stories/04182237.htm. 
  4. "பாடல்கள்".
  5. "பாடல்கள்".
  6. "பாடல்கள்". Archived from the original on 2014-07-14. பார்க்கப்பட்ட நாள் 2019-02-28.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிழக்கும்_மேற்கும்&oldid=4119542" இலிருந்து மீள்விக்கப்பட்டது