மு. களஞ்சியம்

தமிழ் திரைப்பட இயக்குநர், நடிகர்

சோழன் மு.களஞ்சியம் என்பவர் ஒரு இந்திய திரைப்பட இயக்குநர் ஆவார். இவர் குறிப்பாக தமிழ் திரைப்படங்களில் இயக்கிவருகிறார். சிறந்த கதாசிரியருக்கான தமிழ்நாடு அரசு திரைப்பட விருதை பெற்ற சோழன் மு.களஞ்சியம் தனது படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

சோழன் மு.களஞ்சியம்
பிறப்பு24 அக்டோபர் 1974 (1974-10-24) (அகவை 49)
தமிழ்நாடு, தஞ்சாவூர்
பணிதிரைப்பட இயக்குநர்
செயற்பாட்டுக்
காலம்
1996–தற்போது வரை

தொழில்

தொகு

களஞ்சியத்தின் முதல்படம் முரளி, தேவயானி ஆகியோர் நடித்த பூமணி (1996) ஆகும். இப்படம் வணிக ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பாராட்டைபெற்றுத் தந்தது. மேலும் 1996 ஆம் ஆண்டிற்கான சிறந்த கதாசிரியருக்கான தமிழக அரசு திரைப்பட விருதையும் வென்றார். இவரது அடுத்த படமாக, கிராமப்புற நாடகப் படமான கிழக்கும் மேற்கும் ஆகும். இப்படத்தில் நெப்போலியன், தேவயானி ஆகியோர் நடித்தனர். படமானது நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது.[1] இசை அமைப்பாளர் இளையராஜா தயாரிப்பில் சங்கீத திருநாள் என்ற படம் இவரது இயக்கத்தில் எடுக்க திட்டமிடப்பட்டது, ஆனால் அது செயலாக்கம் பெறவில்லை.[2] தனது முதல் படத்தின் நடிகர்கர் குழுவுடன் பூந்தோட்டம் (1998) என்ற படத்தை உருவாக்கினார். ஆனால் அது வெளியான அதே காலகட்டத்தில் பெரும் பொருட்செலவில் தயாரிக்கபட்ட படங்கள் வெளியானதன் விளைவாக அப்படம் கவனிக்கப்படாமல் போனது.[3] பின்னர் இவர் கார்த்திக், தேவயானி ஆகியோர் நடித்த நிலவே முகம் காட்டு (1999) படத்தை உருவாக்கினார்.[4] பின்னர் களஞ்சியம் முரளி முக்கியப் பாத்திரத்தில் நடிக்க விகடன் என்ற படத்தின் பணிகளயும், சரத்குமார், ரம்பா ஆகியோர் நடிக்க கேசவன் என்ற படத்திற்கான பணிகளையும் மேற்கொண்டார். ஆனால் அவை இரண்டும் பின்னர் கைவிடப்பட்டன. அதன்பிறகு 2001 இல் பிரபு -நடித்த மிட்டா மிராசு என்ற படத்தை இயக்கினார.[5][6]

அறிமுக நாயகனான தேவயானியின் தம்பி மயூர், அஞ்சலி ஆகியோர் நடிக்க 2002 ஆம் ஆண்டில் சத்தமின்றி முத்தமிடு என்ற படத்தின் வழியாக இயக்குனர் மீண்டும் களத்துக்கு வந்தார் ஆனால் பின்னர் படத்தின் பணிகள் நடக்கவில்லை.[7][8][9] பின்னர் அஞ்சலி நடிக்க வாலிப தேசம், என் கனவுதானடி ஆகிய இரண்டு படங்களைத் தொடங்கினார், ஆனால் அவையும் வேலைக்கு ஆகவில்லை. 2010 ஆம் ஆண்டில், நடிகை அஞ்சலி புகழ் பெற்றதைத் தொடர்ந்து, களஞ்சியத்தின் எதிர்கால படங்களில் சிலவற்றில் நடிக்க ஒப்புக் கொண்டதன் மூலம் அவர் ஒரு நல்லெண்ண சம்க்ஞை செய்தார். அவர் களஞ்சியத்தை தனது வழிகாட்டியாகக் கருதினார். இயக்குனர் தனது அடுத்த படமான கருங்காலி படத்தின் வழியாக 2011 இல் மீண்டும் வந்தார் இதில் அஞ்சலி, சுனிதா வர்மா, அஸ்மிதா உள்ளிட்டோர் நடித்தனர். இந்த படம் ஏகமனதாக மோசமான விமர்சனங்களைப் பெற்றது.[10][11] இப்படம் பின்னர் தெலுங்கில் சதி லீலவதி என்ற பெயரில் வெளியிடப்பட்டது, இயக்குனர் பெயராக அதில் பிரபாகரன் என்று குறிப்பிட்டுக்கொண்டார்.[12]

2013ஆம் ஆண்டில், மீண்டும் அஞ்சலியைக் கொண்டு ஊர் சுற்றும் புராணம் என்ற மற்றொரு படத்தில் பணிபுரிந்து வருவதாக செய்தி வெளியானது, படப்பிடிப்பு தலத்தில் நடிகை ஒரு விபத்தில் சிக்கினார்.[13] நிகழ்வுகளின் ஒரு திருப்பத்தில், களஞ்சியத்துக்கு எதிராக அஞ்சலி குற்றச்சாட்டுகளைக் கூறினார். பல்வேறு விஷயங்களில் களஞ்சியம் தனது சித்திக்கு ஆலோசனை வழங்கியதாகக் குறிப்பிட்டார். மேலும் களஞ்சியம் தன்னைத் துன்புறுத்தியதாகவும் குறிப்பிட்டார்.[14] இதன் பின்னர் படத்தின் பணிகள் நின்றுவிட்டன. மேலும் படத்தை முடித்து தரத் தவறியதற்காக களஞ்சியம் நடிகைக்கு எதிராக தமிழ் திரைப்பட சங்கங்களில் புகார் அளித்தார்.[15] 2014 ஆம் ஆண்டில், கதிரவனின் கோடை மழை படத்தில் நடித்தபோது படப்பிடிப்பின் ஓத்திகையின்போது, நடிகை ஸ்ரீ பிரியங்காவை அறைந்ததற்காக சிக்கலில் சிக்கினார். இவர் அறைந்ததால் நடிகை மயக்கமடைந்தார். 2014 ஆகத்தில் இவர் பயணித்த மகிழுந்து ஆந்திராவில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது இவருடன் பயணித்தவர்கள் இறந்தனர் இவரும் பலத்த காயமுற்றார்.[16]

திரைப்படவியல்

தொகு
 • எல்லாமே தமிழ்ப் படங்களாகும்.
இயக்குநராக
ஆண்டு படம் குறிப்புகள்
1996 பூமணி சிறந்த கதாசிரியருக்கான தமிழக அரசு திரைப்பட விருது
1998 கிழக்கும் மேற்கும் பெண்களை சிறப்பாக சித்தரிக்கும் திரைப்படத்திற்கான தமிழக அரசின் திரைப்பட விருது
பூந்தோட்டம்
1999 நிலவே முகம் காட்டு
2001 மிட்டா மிராசு
2019 முந்திரிக்காடு
நடிகராக
ஆண்டு படம் குறிப்புகள்
2011 கருங்கலி
2016 கதிரவனின் கோடை மழை
2017 களவு தொழிற்சாலை

குறிப்புகள்

தொகு

 

 1. "Kizhakkum Merkum: Movie Review". Webcache.googleusercontent.com. 2013-09-05. Archived from the original on 24 September 2015. பார்க்கப்பட்ட நாள் 2013-09-15.
 2. https://web.archive.org/web/20041023185237/http://www.dinakaran.com/cinema/english/gossip/second/story1.htm#story
 3. "PoonthOttam: Movie Review". Webcache.googleusercontent.com. 2013-09-05. Archived from the original on 13 March 2013. பார்க்கப்பட்ட நாள் 2013-09-15.
 4. http://www.thenisai.com/tamil/movies-cinema/nilave-mugam-kaattu-tamil-movies.htm
 5. http://www.geocities.ws/gokima/may2001.html
 6. https://web.archive.org/web/20050205133643/http://www.dinakaran.com/cinema/english/cinenews/9-07-98/murali.htm
 7. https://web.archive.org/web/20030805141512/http://www.chennaionline.com/entertainment/filmplus/ntlaunch.asp
 8. "Anjali signs handful - Tamil Movie News". Indiaglitz.com. 2010-07-27. Archived from the original on 2010-07-27. பார்க்கப்பட்ட நாள் 2013-09-15.
 9. "Tamil movies : Will luck favor 'Boys' fame Nakul this time?". Webcache.googleusercontent.com. 2013-09-02. Archived from the original on 18 September 2015. பார்க்கப்பட்ட நாள் 2013-09-15.
 10. "Movie Review : Karungali". Sify.com. Archived from the original on 2013-12-22. பார்க்கப்பட்ட நாள் 2013-09-15.
 11. "Karungali Tamil Movie Review - cinema preview stills gallery trailer video clips showtimes". Indiaglitz.com. 2011-07-29. Archived from the original on 2011-09-27. பார்க்கப்பட்ட நாள் 2013-09-15.
 12. "Name change for Kalanjiyam". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 2012-07-02. Archived from the original on 2013-01-31. பார்க்கப்பட்ட நாள் 2013-09-15.
 13. "Freak accident on the sets, Anjali suffers electric shock, Anjali, Kalanjiyam". Behindwoods.com. 2013-03-09. பார்க்கப்பட்ட நாள் 2013-09-15.
 14. "Anjali alleges harassment". Chennaivision.com. Archived from the original on 2014-01-26. பார்க்கப்பட்ட நாள் 2013-09-15.
 15. "Kalanjiyam: I will drag Anjali to court - KOLLY TALK". KOLLY TALK. Archived from the original on 9 செப்டம்பர் 2014. பார்க்கப்பட்ட நாள் 19 September 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
 16. "Director Kalanjiyam Meets With an Accident - Silverscreen.in". Silverscreen.in. பார்க்கப்பட்ட நாள் 19 September 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மு._களஞ்சியம்&oldid=3954150" இலிருந்து மீள்விக்கப்பட்டது