முந்திரிக்காடு

இந்தியத் தமிழ் மொழித் திரைப்படம்

முந்திரிக்காடு (ஆங்கிலத்தில்:Munthirikkaadu) என்பது ஏப்ரல் 07, 2023 அன்று வெளியானத் தமிழ் மொழி வரலாற்று நாடகக் குற்றவியல் திரைப்படம் ஆகும். இத்திரைப்படத்தை மு. களஞ்சியம் எழுதி இயக்கியுள்ளார். ஆதி திரைக்களம் நிறுவனம் தயாரித்துள்ளது. இத்திரைப்படத்தில் சீமான் மற்றும் புகழ் மகேந்திரன் சுபப்பிரியா மற்றும் செயராவ் ஆகியோர் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர் .[1] சீமான் காவல்துறை அதிகாரி வேடத்தில் நடித்தார்.[2] இப்படத்திர்க்கு ஏ. கே. பிரியன் இசையமைத்து, ஜி. ஏ. சிவசுந்தர் ஒளிப்பதிவு செய்துள்ளார். இத்திரைப்படம் எழுத்தாளர் இமையத்தின் பெத்தவன் என்கிற புதினத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது.[3]

முந்திரிக்காடு
Munthirikkaadu
Theatrical release poster
இயக்கம்மு. களஞ்சியம்
தயாரிப்புமு. களஞ்சியம்
கதை
இசைஏ. கே. பிரியன்
நடிப்பு
  • சீமான்
  • புகழ் மகேந்திரன்
  • சுபப்பிரியா
  • செயராவ்
ஒளிப்பதிவுஜி. ஏ. சிவசுந்தர்
படத்தொகுப்புஎல். வி. கே. தாசன்
கலையகம்ஆதி திரைக்களம்
விநியோகம்வி. வி. பிக்சர்சு
வெளியீடுஏப்ரல் 7, 2023 (2023-04-07)
ஓட்டம்2 மணி 59 நிமிடங்கள்
நாடு இந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள்

தொகு
  • சீமான்—காவல் ஆய்வாளர் அன்பரசன்
  • புகழ் மகேந்திரன்—செல்லா
  • சுபப்பிரியா மலர்—தெய்வம்
  • சி. கச். செயராவ்—முருகன்
  • கலை சேகரன்
  • பாலமேடு பார்த்திபன்
  • சக்திவேல்

ஒலிப்பதிவு

தொகு
முந்திரிக்காடு
ஒலிச்சுவடு
ஏ. கே. பிரியன்
வெளியீடுசூலை 27, 2019
ஒலிப்பதிவு2019 - 2023
இசைப் பாணிதிரைப்பட ஒலிப்பதிவு
நீளம்24:36
மொழிதமிழ்
இசைத்தட்டு நிறுவனம்சரிகம தமிழ்
  வெளி ஒலியூடகங்கள்
  யூடியூபில் முந்திரிக்காடு - Jukebox

இத்திரைப்படத்திற்க்கு இசையமைப்பாளரான ஏ. கே. பிரியன் இசை அமைத்துள்ளார். இத்திரைப்பட இசை உரிமையத்தை சரிகம தமிழ் என்னும் நிறுவனம் வாங்கியது .

பாடல் பட்டியல்
# பாடல்பாடகர்கள் நீளம்
1. "பைத்தியம்"  மாளவிகா சுந்தர் 5:16
2. "உயிரே உயிரே"  சிறிவர்தனி குச்சி 4:56
3. "காதலைக் கொல்லும்"  செயமூர்த்தி 4:52
4. "காதலைக் கொல்லும்- எழுச்சி"  முருகவேல் 5:26
5. "பெண்ணே என் கண்ணே"  சூராச் சந்தோஷ், வந்தனா சீனிவாசன் 4:45
மொத்த நீளம்:
24:36

மேற்கோள்கள்

தொகு
  1. "Munthirikkaadu CAST movie titles". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 21 March 2023. Archived from the original on 6 January 2024. பார்க்கப்பட்ட நாள் 10 April 2023. ... Munthirikkaadu Cast: Seeman, Pugazh Mahendran, Subapriya actress and Jaya Rao.
  2. மலர், மாலை (2018-02-05). "முந்திரிகாடு". www.maalaimalar.com. Archived from the original on 2023-04-15. பார்க்கப்பட்ட நாள் 2023-04-15.
  3. "திரையுலகமே கார்ப்பரேட் வலைக்குள் சிக்கிக்கிடக்கிறது!- ‘முந்திரிக்காடு’ இயக்குநர் மு.களஞ்சியம்'" (in தமிழ் மொழி). தமிழ் இந்து (தி இந்து காமதேனு). 10 Aug, 2019. https://kamadenu.hindutamil.in/cinema/510702-mundhirikaadu-director-interview. பார்த்த நாள்: 14 ஏப்ரல் 2023. 

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=முந்திரிக்காடு&oldid=4103450" இலிருந்து மீள்விக்கப்பட்டது