அழுகிய தக்காளிகள்


அழுகியத் தக்காளிகள் (Rotten Tomatoes) திரைப்பட மதிப்புரைகளுக்காகவும் செய்திகளுக்காகவும் ஆகத்து 1998இல் துவங்கப்பட்ட வலைத்தளம் ஆகும்; இது பரவலாக திரைப்பட மதிப்புரைத் திரட்டி என அறியப்படுகின்றது. இத்தளத்தில் தற்போது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும் இடம் பெறுகின்றன. மோசமான நாடகங்களை எதிர்த்து பார்வையாளர்கள் அழுகியத் தக்காளிகளை எறியும் வழக்கத்தை ஒட்டி இதன் பெயர் அமைந்துள்ளது. இதனை சென் டுயொங் துவக்கினார். இதன் உரிமை சனவரி 2010 முதல் பிக்ஸ்டெர் என்ற நிறுவனத்திற்கு மாறியது. 2011இல் இந்த நிறுவனத்தை வார்னர் புரோஸ். வாங்கியது.

அழுகியத் தக்காளிகள்
Rotten Tomatoes
Rotten Tomatoes logo.svg
உரலிrottentomatoes.com
வணிக நோக்கம்ஆம்
தளத்தின் வகைதிரைப்பட மதிப்புரை திரட்டி, பயனர் சமூகம்
பதிவு செய்தல்விருப்பத் தேர்வு
உரிமையாளர்என்பிசியுனிவர்சல் (காம்காஸ்ட்)
வார்னர் புரோஸ். (டைம் வார்னெர்)[1][2]
வெளியீடுஆகத்து 12, 1998; 22 ஆண்டுகள் முன்னர் (1998-08-12)
அலெக்சா நிலைRed Arrow Down.svg 552 (Dec 2015)[3]

2007இலிருந்து இந்த வலைத்தளத்தின் தலைமை ஆசிரியராக மாட் அட்சிட்டி இருந்து வருகின்றார்.[4] இந்த வலைத்தளத்தின் உள்ளூர் பதிப்புக்கள் ஐக்கிய இராச்சியம், இந்தியா மற்றும் ஆத்திரேலியாவில் வெளியாகின்றன. 2009இன் துவக்கத்திலிருந்து செப்டம்பர் 2010 வரை இந்த வலைத்தளத்தின் உள்ளடக்கத்தையும் நிகழ்ச்சி நடத்துபவர்களையும் கொண்டு கரண்ட் தொலைக்காட்சியில் வாரமொருமுறை தி ராட்டன் டொமட்டோசு ஷோ ஒளிபரப்பானது.

முதல் பத்து திரைப்படங்கள்தொகு

அழுகியத் தக்காளிகள் தளத்தின் "எக்காலத்தும் முதல் 100 திரைப்படங்களிலிருந்து" முதல் பத்து இடங்கள் [5]
எண் திரைப்படம் ஆண்டு தர மதிப்பீடு மதிப்புரைகளின்
எண்ணிக்கை
1 தி விசார்டு ஆப் ஆசு 1939 99% 108 [6]
2 தி தேர்ட் மேன் 1949 100% 76[7]
3 சிட்டிசன் கேன் 1941 100% 70[8]
4 தி கேபினட் ஆப் டாக்டர் கேலிகரி 1920 100% 48[9]
5 ஆல் அபவுட் ஈவ் 1950 100% 63[10]
6 மாடர்ன் டைம்சு 1936 100% 53[11]
7 தி காட்பாதர் 1972 99% 84[12]
8 ஈ.டி. த எக்ஸ்ரா டெரஸ்ரியல் 1982 98% 112[13]
9 மெட்ரோபொலிஸ் 1927 99% 115[14]
10 சிங்கிங் இன் தி ரைன் 1952 100% 48[15]

*தகுதிபெறும் திரைப்படங்கள் விமரிசகர்களிடமிருந்து குறைந்தது 40 மதிப்புரைகளைப் பெற்றிருக்க வேண்டும். தரமதிப்பீடு சரிக்கட்டப்பட்ட புள்ளிகளின் அடிப்படையிலானது.

மேற்சான்றுகள்தொகு

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=அழுகிய_தக்காளிகள்&oldid=2797858" இருந்து மீள்விக்கப்பட்டது