அறிவுமதி
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
அறிவுமதி, புகழ் பெற்ற தமிழ்க் கவிஞரும் பரவலாக அறியப்படும் தமிழ்த் திரைப்பட பாடலாசிரியரும் ஆவார். அறிவுமதியின் இயற்பெயர் 'மதியழகன்'. தனது நண்பர் 'அறிவழகன்' பெயரையும், தனது பெயரையும் சேர்த்து 'அறிவுமதி' என்று வைத்துக்கொண்டார். இவர் விருத்தாசலம் நகருக்கு அருகில் உள்ள சு.கீணணூரில் கேசவன்- சின்னப்பிள்ளை (சான்று இரெ.சுப்பிரமணியனின் 'அறிவுமதி கவிதைகள்- ஓர் ஆய்வு' என்னும் நூல்) இணையருக்கு மகனாகப் பிறந்தார். சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழகத்தில் முதுகலை பட்டம் பெற்றவர். இவரின் தமிழ் இலக்கியத்தின் மீது இருந்த விருப்பத்தைக் கண்டு கவிஞர் மீரா கவிஞர் அப்துல் ரகுமானிடம் அறிமுகப்படுத்தினார். மறைந்த திரைப்பட இயக்குநர் பாலுமகேந்திராவின் ஏழு படங்களுக்கு உதவி இயக்குநராக பணியாற்றியுள்ளார்.
அறிவுமதி | |
---|---|
பிறப்பு | மதியழகன் |
தொழில் | கவிஞர், திரைப்படப் பாடலாசிரியர் |
நாடு | ![]() |
கல்வி | திரு கொளஞ்சியப்பர் அரசு கலைக்கல்லூரி, விருத்தாசலம் |
குறிப்பிடத்தக்க படைப்பு(கள்) |
நட்புக்காலம் |
படைப்புகள்தொகு
கவிதைத் தொகுப்புதொகு
- அவிழரும்பு
- என் பிரிய வசந்தமே
- நிரந்தர மனிதர்கள்
- அன்பான இராட்சசி
- புல்லின் நுனியில் பனித்துளி
- அணுத்திமிர் அடக்கு
- ஆயுளின் அந்திவரை
- கடைசி மழைத்துளி
- நட்புக்காலம்
- மணிமுத்த ஆற்றங்கரையில்
- பாட்டறங் கவிதைகள்
- அறிவுமதி கவிதைகள்
- வலி
சிறுகதைத் தொகுப்புதொகு
- வெள்ளைத் தீ
குறும்படம்தொகு
- நீலம்
பாடல் எழுதிய படங்களின் வரிசை
பாடல்கள்தொகு
நட்புக்காலம்தொகு
அறிவுமதியின் மிகச்சிறந்த படைப்புகளில் இதுவும் ஒன்று. இந்த நூல் ஆண் பெண் நட்பை வைத்து எழுதப்பட்ட கவிதைகளின் தொகுப்பு.