சிறுத்தை (திரைப்படம்)
சிவா இயக்கத்தில் 2011 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
சிறுத்தை (Siruthai) கார்த்தி, தமன்னா மற்றும் சந்தானம் நடிப்பில் 2011ம் ஆண்டு பொங்கல் பண்டிகையன்று வெளியான ஒரு தமிழ்த் திரைப்படம். சிவா இப்படத்தை இயக்கியுள்ளார். ஞானவேல் ராஜா இப்படத்தை தயாரித்துள்ளார். இப்படத்தில் கார்த்தி முதன் முறையாக பிட்பாக்கெட் திருடன் மற்றும் போலீஸ் அதிகாரி என இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். வித்யாசாகர் இசையில் டிசம்பர் 30-இல் பாடல்கள் வெளியாகி உள்ளது. இப்படம் தெலுங்கில் ஏற்கனவே வெளிவந்த ”விக்ரமர்குடு” படத்தின் தழுவல் ஆகும். தெலுங்கில் ரவிதேஜா, அனுஷ்கா மற்றும் பிரேமானந்தம் நடித்திருந்தனர்.
சிறுத்தை | |
---|---|
![]() | |
இயக்கம் | சிவா |
தயாரிப்பு | K. E. ஞானவேல் ராஜா , S. R. பிரகாஷ் பாபு , S. R. பிரபு |
கதை | இராஜமௌலி |
இசை | வித்யாசாகர் |
நடிப்பு | |
ஒளிப்பதிவு | வேல்ராஜ் |
படத்தொகுப்பு | V. T. விஜயன் |
கலையகம் | ஸ்டுடியோ கிரீன் |
வெளியீடு | சனவரி 14, 2011 |
நாடு | ![]() |
மொழி | தமிழ் |
நடிப்பு தொகு
- கார்த்தி - ரத்னவேல் பாண்டியன் IPS மற்றும் ராக்கெட் ராஜா
- தமன்னா - ஸ்வேதா
- சந்தானம் - காட்டு பூச்சி
- பேபி ரக்ஷணா - திவ்யா
- அவினாஷ் - பாப்ஜி
- ராஜீவ் கனகல
- மேகனா நாயுடு (ஒரு ஐட்டம் நம்பர் பாடலில்)
- மனோபாலா
- மேகா நாயர்