திரு கொளஞ்சியப்பர் அரசு கலைக் கல்லூரி

திரு கொளஞ்சியப்பர் அரசு கலைக் கல்லூரியானது தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டத்தின் விருத்தாச்சலம் நகரில் அமைந்துள்ள ஒரு பாரம்பரியம் மிக்க புகழ்வாய்ந்த கல்லூரியாகும். இந்தக் கல்லூரி 2002 - 2003 ஆம் கல்வியாண்டு வரை தொன்மை வாய்ந்த சென்னை பல்கலைக்கழகத்தின் கீழ் இணைக்கப்பட்டு செயல்பட்டு வந்தது. தற்போது வேலூரில் உள்ள திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் கீழ் இணைக்கப்பட்டுள்ளது. 2007-ம் ஆண்டிலிருந்து காலை, மாலை என இரு வேளை முறைகளில் நடந்து வருகிறது.

திரு கொளஞ்சியப்பர் அரசு கலைக் கல்லூரி
அமைவிடம்
விருத்தாசலம், இந்தியா, தமிழ்நாடு, 606 001
தகவல்
வகைதிருவள்ளுவர் பல்கலைக்கழகத்துடன் இணைந்த இருபாலர் அரசு கல்லூரி
குறிக்கோள்உழைப்பே தெய்வம்
தொடக்கம்1966
அதிபர்இரா. இராசசேகரன் [1]
பால்இருபாலர்
கற்பித்தல் மொழிதமிழ், ஆங்கிலம்
AccreditationB+ (2005) (NAAC)
Alumniகி. தனவேல்,
அறிவுமதி,
பெ. கருணாகரன்
இணையம்
திரு கொளஞ்சியப்பர் அரசினர் கலைக்கல்லூரி நுழைவாயில்

கல்லூரி வரலாறு[2] தொகு

திரு கொளஞ்சியப்பர் அரசு கலைக்கல்லூரி 1966-ம் ஆண்டு விருத்தாசலம் நகரில் அறிமுக படிப்பு(Pre-University Course) கல்லூரியாக ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக் கட்டிடத்தில் ஆரம்பிக்கப்பட்டது. அதன் பிறகு, மணவாளநல்லூரில் உள்ள கொளஞ்சியப்பர் கோயில் நிர்வாகம் கொடுத்த ரூபாய் இரண்டு லட்சத்தை கொண்டு இளநிலை பி.ஏ(B.A) வரலாறும், தமிழிலக்கியமும் 1969-ம் ஆண்டு துவங்கப்பட்டது. தற்போது கல்லூரி இயங்கிவரும் நிரந்த கட்டிடம் இருக்கும் இடம் மற்றும் சுற்றியுள்ள இடம் உள்ளிட்ட சுமார் 42 ஏக்கர் நிலம் விருத்தாசலத்தில் உள்ள விருத்தகிரிஸ்வரர் கோயில் நிர்வாகத்தினரால் நன்கொடையாக வழங்கப்பட்டது. ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக் கட்டிடத்திலிருந்து, கல்லூரி தற்போது இயங்கிவரும் இடத்திற்கு 1971-ம் ஆண்டு மாற்றப்பட்டது. அதே ஆண்டில் இளநிலை வணிகவியலும்(B.Com), பின்னர் 1972-ல் கணிதமும், 1979-ல் விலங்கியலும், 1980-ல் இயற்பியலும் ஆரம்பிக்கப்பட்டது. முதுகலை தமிழிலக்கியம்(M.A) 1981-லும், தமிழில் முழுநேர முதுநிலை ஆய்வியல் நிறைஞர்(M.Phil) படிப்பு 1993-லிருந்தும், முழுநேர தமிழ் முனைவர்(Ph.D) ஆய்வு பட்டம் 2000-ம் ஆண்டிலிருந்தும் வழங்கப்படுகிறது. தற்போது பகுதிநேர தமிழ் ஆய்வியல் நிறைஞர் படிப்பும் வழங்கப்படுகிறது.

இளநிலை கணினியியல் 1997-லிருந்தும், இளநிலை ஆங்கில இலக்கியம், வேதியியல், முதுநிலை கணிதம், வணிகவியல் ஆகிய படிப்புகள் 2005-லிருந்தும் வழங்கப்படுகிறது. தேசிய தர நிர்ணயக்குழு (NAAC-National Assessment and Accreditation Council) 2005-ம் ஆண்டில் இக்கல்லூரிக்கு B+ தரத்தை வழங்கியது[2].

கற்பிக்கப்படும் துறைகள்[3] தொகு

இந்தக் கல்லூரியில் இளநிலை பட்டப்படிப்பில்

  1. தமிழ்
  2. இயற்பியல்
  3. வரலாறு
  4. கணிதம்
  5. வேதியியல்
  6. விலங்கியல்
  7. கணினி அறிவியல்
  8. வணிகவியல்
  9. ஆங்கிலம்
  10. தாவரவியல்

ஆகிய பிரிவுகளும் முதுநிலை பட்ட வகுப்புகளில் கணிதம், கணினி அறிவியல், ஆங்கிலம் ஆகியவையும் தொடங்கப்பட்டு மிகவும் சிறப்பாக இயங்கி வருகிறது. மேலும் தமிழில் முனைவர் பட்டம் வரையிலும் பயிலும் வகையில் வழிகாட்டி பேராசிரியர்களையும் கொண்டுள்ளது. 2013 ஆம் ஆண்டு புதிதாக இயற்பியல் துறையில் முதுகலைப் பட்டப்படிப்பு தொடங்கப்பட்டுள்ளது.

முன்னாள் மாணவர்கள் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "கல்லூரிப் பேராசிரியர்கள் விபரம்". Archived from the original on 2013-04-05. பார்க்கப்பட்ட நாள் 09 மார்ச்சு 2013. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. 2.0 2.1 "திரு கொளஞ்சியப்பர் அரசினர் கலைக்கல்லூரி". Archived from the original on 2013-04-05. பார்க்கப்பட்ட நாள் 08 மார்ச்சு 2013. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  3. "கற்பிக்கப்படும் படிப்புகள்". Archived from the original on 2013-04-05. பார்க்கப்பட்ட நாள் 08 மார்ச்சு 2013. {{cite web}}: Check date values in: |accessdate= (help)

வெளி இணைப்புகள் தொகு

திரு கொளஞ்சியப்பர் அரசினர் கலைக்கல்லூரியின் இணையதளம் பரணிடப்பட்டது 2014-01-10 at the வந்தவழி இயந்திரம்