என்றென்றும் காதல்

மனோஜ் கியான் இயக்கத்தில் 1999 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்


என்றென்றும் காதல் (Endrendrum Kadhal) 1999 ஆம் ஆண்டு தமிழில் வெளியான காதல் திரைப்படம். விஜய், ரம்பா, ரகுவரன், பானுப்ரியா மற்றும் எம். என். நம்பியார்ஆகியோர் நடித்துள்ளனர். கதை, திரைக்கதை எழுதி, இசையமைத்து, இயக்கியவர் மனோஜ் பட்னாகர். இவர் கே.டி.குஞ்சுமோன் உடன் இணைந்து இப்படத்தைத் தயாரித்துள்ளார்.

என்றென்றும் காதல்
இயக்கம்மனோஜ் பட்னாகர்
தயாரிப்புகே. டி. குஞ்சுமோன்
மனோஜ் பட்னாகர்
கதைகிரேசி மோகன் (வசனம்)
திரைக்கதைமனோஜ் பட்னாகர்
இசைமனோஜ் பட்னாகர்
நடிப்புவிஜய்
ரம்பா
எம். என். நம்பியார்
பானுப்ரியா
ரகுவரன்
ஒளிப்பதிவுகே. எஸ். சிவா
படத்தொகுப்புபி. எஸ் வாசு – சலீம்
கலையகம்சமீரா பிலிம்ஸ்
விநியோகம்ஜென்டில்மேன் பிலிம் இன்டர்நேஷனல்
வெளியீடு5 மார்ச் 1999
ஓட்டம்160 நிமிடங்கள்
நாடு இந்தியா
மொழிதமிழ்

கதைச்சுருக்கம்

தொகு

சேதுபதி (எம்.என்.நம்பியார்) யின் மூன்றாவது மகன் விஜய் (விஜய்). அவர்களுடையது கூட்டுக்குடும்பம். விஜய் தான் நிர்வகிக்கும் கப்பல் நிறுவனத்தின் தொழில் ஒப்பந்தத்திற்காக சுவிட்சர்லாந்து செல்கிறான். அங்கே தொழிலதிபர்களாக இருக்கும் சகோதரர்கள் நாகராஜ் (நிழல்கள் ரவி) மற்றும் சேகர் (ரகுவரன்). இவர்களின் சகோதரி மீனாட்சி (ரம்பா). விஜயும் மீனாட்சியும் காதலிப்பதை அறிந்து அவர்கள் திருமணத்திற்கு சம்மதிக்கும் நாகராஜ், விஜய் சுவிட்சர்லாந்திலேயே தங்க வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கிறான். அதை மறுத்துவிட்டு விஜய் இந்தியா திரும்புகிறான். தன் தவறை உணரும் நாகராஜ், சேகரையும் மீனாட்சியையும் இந்தியாவிற்கு அனுப்பி, விஜய்-மீனாட்சி திருமணத்திற்கு சம்மதிக்கிறான். விஜய் குடும்பத்தினரும் திருமணத்திற்கு சம்மதிக்க நிச்சயதார்த்தம் செய்ய முடிவாகிறது. அப்போது நாகராஜ், விஜயின் அக்கா பூஜாவைக் (பானுப்ரியா) காதலித்து ஏமாற்றிய விடயத்தை அறியும் சேகர், அதை பூஜாவிடம் கூறி நாகராஜ் வரும்போது பூஜாவை வீட்டைவிட்டு வெளியேறச் சொல்கிறான். இதை தற்செயலாகக் கேட்கும் விஜய் தன் அக்காவைக் காதலித்து ஏமாற்றிய நாகராஜின் தங்கையான மீனாட்சியைத் திருமணம் செய்ய மறுக்கிறான். சேகர் தான் பூஜாவைத் திருமணம் செய்துகொள்வதாகக் கூற பூஜாவும் அதற்கு சம்மதிக்கிறாள். விஜய் மகிழ்ச்சியடைகிறான். விஜய்-மீனாட்சி திருமணம் இனிதே நடக்கிறது.

நடிகர்கள்

தொகு

எசு. ஏ. ராஜ்குமார் இப்படத்திற்கு இசையமைத்தார். பிரமிடு நிறுவனம் பாடல்களை வெளியிட்டது.[1]

வ.எண் பாடல் பாடலாசிரியர் பாடகர்(கள்) கால நீளம்
1 ஓ தென்றலே பழனிபாரதி எஸ். பி. பாலசுப்பிரமணியம், அனுராதா ஸ்ரீராம் 4:57
2 கண்களா மின்னலா பழனிபாரதி எஸ். பி. பாலசுப்பிரமணியம், கே. எஸ். சித்ரா 5:05
3 உலகெல்லாம் ஒரு சொல் காதல் வைரமுத்து ஹரிஹரன் 5:07
4 மேகங்கள் எங்கே போனாலும் அறிவுமதி உன்னிகிருஷ்ணன், கே. எஸ். சித்ரா 5:22
5 ஜலக்கு பொன்னியின் செல்வன் சுஜாதா, எஸ். என். சுரேந்தர் 5:20
6 டேக் இட் ஈசி பிறைசூடன் அனுராதா ஸ்ரீராம் 5:46

மேற்கோள்கள்

தொகு
  1. "Endrendrum Kadhal". JioSaavn. 26 December 2016. Archived from the original on 6 April 2019. பார்க்கப்பட்ட நாள் 6 April 2019.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=என்றென்றும்_காதல்&oldid=4001382" இலிருந்து மீள்விக்கப்பட்டது