மனோஜ் கியான்

இரெட்டை இசையமைப்பாளர்கள்

மனோஜ் கியான் (Manoj Gyan) என்பது இசை இயக்குனர்களான மனோஜ் சரண் / மனோஜ் பட்நகர் மற்றும் கியான் வர்மா ஆகிய இருவரையும் குறிக்கப் பயன்படும் ஒரு பெயர் ஆகும். 1980 களில், இருவரும் இணைந்து ஒரு சில இந்தி, தமிழ் படங்களுக்கு இசையமைத்தனர். மனோஜ் உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர், கியான் பஞ்சாபைச் சேர்ந்தவர் .

மனோஜ் கியான்
பிற பெயர்கள்மனோஜ் கியான், மனோஜ் சரண் பட்நாகர் & கியான் வர்மா
இசை வடிவங்கள்திரைப்பட பின்னணி இசையமைப்பு, திரைப்பட பாடல் இசையமைப்பு
தொழில்(கள்)இசையமைப்பாளர், இசை இயக்குநர்

தொழில்

தொகு

1980 களில் இருவரும் ஊமை விழிகள், செந்தூரப்பூவே, இணைந்த கைகள் போன்ற படங்களுக்கு இசையமைத்தனர். இந்தத் திரைப்படங்களில் ரசிகர்களைக் கவர்ந்த பல பாடல்கள் இருந்தன.

குறிப்பாக ஊமை விழிகள் படத்தில், பி. பி. ஸ்ரீனிவாஸ் பாடிய "தோல்வி நிலையென நினைத்தால்" மிகப்பெரிய வெற்றி பெற்றது. இலங்கையில் விடுதலைப் புலிகளின் அதிகாரப்பூர்வமற்ற கீதமாக இந்தப் பாடல் ஏற்றுக்கொள்ளப்பட்டது. [1]

இருவரும் 1989 இல் பிரிந்தனர். பிரிந்ததைத் தொடர்ந்து கயன் வர்மா இணைந்த கைகள், சத்திய வாக்கு உள்ளிட்ட இரண்டு படங்களுக்கு சொந்தமாக இசை அமைத்தார். மனோஜ் பந்தய குதிரைகள் என்ற படத்திற்கு தனியாக இசையமைத்தார், ஆனால் படம் வெளியாகவில்லை.

பல ஆண்டுகளுக்குப் பிறகு, மனோஜ் ஒரு ஒலிப்பதிவுக் கூடத்தைக் கட்டினார். இறுதியில் மனோஜ் பட்நகர் என்ற பெயரோடு 1998 இல் தயாரிப்பாளர்-இசை இயக்குநராக திரும்பினார். "என்றென்றும் காதல்" (விஜய் நடிப்பில்), " குட்லக் " (பிரசாந்த் நடிப்பில்) ஆகிய இரண்டு படங்களையும் இயக்கி இசையமைத்தார். இரண்டு படங்களும் பார்வையாளர்களிடமும் விமர்சகர்களிடமும் நேர்மறையான விமர்சனத்தைப் பெற்றன. [2]

திரைப்படவியல்

தொகு

மனோஜ் - கியான்

தொகு
ஆண்டு படம் மொழி குறிப்புகள் மேற்கோள்கள்
1981 ரூஹி இந்தி [3]
1986 ஏக் மிசால் இந்தி [4]
1986 ஊமை விழிகள் தமிழ்
1987 மேகம் கறுத்திருக்கு தமிழ்
1987 உழவன் மகன் தமிழ்
1987 ஆனந்த ஆராதனை தமிழ்
1987 பரிசம் போட்டாச்சு தமிழ்
1987 வைராக்கியம் தமிழ்
1987 வெளிச்சம் தமிழ் [5]
1987 இவர்கள் இந்தியர்கள் தமிழ் [6]
1988 செந்தூரப்பூவே தமிழ் [7]
1988 உரிமை கீதம் தமிழ்
1988 ஓம் ஃபரிஷ்டே நஹின் இந்தி [8]
1988 பஹார் இந்தி [9]
1989 காதல் என்னும் நதியினிலே தமிழ்
1989 தாய் நாடு தமிழ்

கியான் வர்மா

தொகு
ஆண்டு படம் மொழி குறிப்புகள் மேற்கோள்
1990 இணைந்த கைகள் தமிழ்
1990 கல்யாண ராசி தமிழ்
1990 சத்ய வாக்கு தமிழ்
1992 அண்ணன் என்னடா தம்பி என்னடா தமிழ்

மனோஜ் சரண் / மனோஜ் பட்நாகர்

தொகு
ஆண்டு படம் மொழி குறிப்புகள் மேற்கோள்
1992 மிஸ்டர் பிரசாத் தமிழ்
1993 தாதி தெலுங்கு
1994 சிறகடிக்க ஆசை தமிழ்
1994 ஊழியன் தமிழ்
1994 பிரேமா ஷிகாரம் / அனோகா பிரேமியுத் தெலுங்கு / இந்தி
1997 சாம்ராட் தமிழ்
1999 என்றென்றும் காதல் தமிழ்
2000 குட்லக் தமிழ்

குறிப்புகள்

தொகு
  1. http://www.tamilguardian.com/article.asp?articleid=3140
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2017-07-18. பார்க்கப்பட்ட நாள் 2021-07-02.
  3. "Roohi-LP Records". பார்க்கப்பட்ட நாள் 2013-12-09.
  4. "Ek Misaal-LP Records". பார்க்கப்பட்ட நாள் 2013-12-15.
  5. "Velicham Vinyl LP Records". ebay. பார்க்கப்பட்ட நாள் 2014-02-08.
  6. "Evargal Indiyargal Vinyl LP Records". musicalaya. Archived from the original on 2014-02-01. பார்க்கப்பட்ட நாள் 2014-01-25.
  7. "Senthoora Poove". raaga.com. பார்க்கப்பட்ட நாள் 2011-12-10.
  8. "Hum Farishte Nahin-LP Records". பார்க்கப்பட்ட நாள் 2013-12-15.
  9. "Bahaar Vinyl LP Records". ebay. பார்க்கப்பட்ட நாள் 2014-02-06.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மனோஜ்_கியான்&oldid=3668935" இலிருந்து மீள்விக்கப்பட்டது