ஊழியன் (திரைப்படம்)

ஊழியன் (Uzhiyan) 1994 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். அருண் பாண்டியன் நடித்த இப்படத்தை சி. துரைபாண்டியன் இயக்கினார். வினிதா ,சரத் பாபு, மன்சூர் அலி கான், சனகராஜ், மோகன் நடராஜன், கீதா (நடிகை), விஜய சந்திரிகா மற்றும் தாக்‌ஷாயினி ஆகியோரும் உடன் நடித்திருந்தனர். இப்படத்தை லஷ்மிகரன் தயாரிக்க மனோஜ் சரண் இசைக்க 4 மார்ச் 1994இல் வெளிவந்தது. இது தெலுங்கு மொழியிலும் மறு ஆக்கம் செய்யப்பட்டது.[1][2][3]

ஊழியன் (1994 திரைப்படம்)
இயக்கம்சி. துரைபாண்டியன்
தயாரிப்புலட்சுமிகரன்
இசைமனோஜ் சரண்
நடிப்புஅருண் பாண்டியன்
வினிதா
சி. தினகரன்
கீதா (நடிகை)
மன்சூர் அலி கான்
விஜயசந்திரிகா
சரத்பாபு
மோகன் நடராஜன்
ஜனகராஜ்
வெளியீடு1994
நாடுஇந்தியா
மொழிதமிழ்

இந்தத் திரைப்படம் திலகன் (அருண் பாண்டியன்) இராணுவ வீரர்களால் துரத்தப்படுவதிலிருந்து தொடங்குகிறது. திலகன் அவரது உயர் இராணுவ அதிகாரிகளை தாக்கி ,ஆயுதங்களுடன் ஓடிவிட்டதாக சாட்சிகள் கூறுகிறது. திலகன் இராணுவத்தால் தேடப்படுகிறார். இராணுவ அதிகாரிகள் விசாரணையில், ​​அவரது சகோதரியும் காணாமல் போனது கண்டுபிடிக்கப்படுகிறது. இராணுவ உயர் அதிகாரி ஆனைக்கல் ராஜ் (சரத் பாபு) திலகனை ஒரு நேர்மையான மற்றும் துணிச்சலான வீரர் என்ற காரணத்தால் இவ்விசாரணை மேற்கொள்ள எண்ணுகிறார். பின்னர், அவரும் மற்றும் இராணுவ வீரர்களும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு, காட்டில் திலகனைக் கண்டுபிடிக்கின்றனர், ஆனால் ,கனகா (வினிதாவின்) உதவியுடன் திலகன் தப்பித்து விடுகிறார். விசாரணையில், ​​திலகனின் நடவடிக்கைக்குப் பின்னால் ஒரு காரணம் இருக்கிறதென தெரிகிறது. திலகன் எவ்வாறு இராணுவ வீரராகிறார் என்பதும், அங்கே அவருக்கு என்ன நேர்ந்தது என்பதும் மீதிக்கதை சொல்கிறது.

நடிப்பு

தொகு

அருண் பாண்டியன் - திலகனாக
வினிதா -கனகாவாக
சரத் பாபு ஆனைக்கல் ராஜூவாக
மன்சூர் அலி கான் - கோவிந்தராஜூ
சனகராஜ் - மாணிக்கமாக
மோகன் நடராஜன் - சுப்ரமணியாக
கீதா (நடிகை) - மாவட்ட ஆட்சியராக
விஜய சந்திரிகா - திலகனின் தாயாராக
தாக்‌ஷாயினி
ரகு பாபு
கிங்காங்க்
சிட்டி காவல் அதிகாரியாக
திருப்பூர் ராமசாமி
சிங்கமுத்து
வெங்கல் ராவ்

Uzhiyan
soundtrack
வெளியீடு1994
ஒலிப்பதிவு1994
இசைப் பாணிFeature film soundtrack
நீளம்23:59
இசைத் தயாரிப்பாளர்மனோஜ் சரண்

மனோஜ் சரண் இசையமைத்துள்ளார். 5 பாடல்கள் கொண்ட ஒலித்தொகுப்பு 1994இல் வெளிவந்தது, இப்படத்தின் பாடல்களை இயக்குநர் அரவிந்தராஜ் எழுதியுள்ளார்..[4][5]

எண் பாடல் பாடியோர் காலம்
1 "எல்லோருக்கும் நல்லவன்" எஸ். பி. பாலசுப்பிரமணியம், பி. எஸ். சசிரேகா மின்மினி 4:59
2 "சின்ன சின்ன சந்தங்களை" மனோ 4:59
3 "ஜில்லு ஜில்லு பாப்பா" எஸ். பி. பாலசுப்பிரமணியம் அருண் பாண்டியன், மின்மினி 5:08
4 "வா ராசா வா ராசா" சனகராஜ், மின்மினி 4:58
5 "கண்காக்கும் இமையும்" மனோ 3:55

மேற்கோள்கள்

தொகு
  1. "Oozhiyan (1994)". gomolo.com. Archived from the original on 2016-11-09. பார்க்கப்பட்ட நாள் 2016-11-08.
  2. "Oozhiyan (1994) Tamil Movie". spicyonion.com. பார்க்கப்பட்ட நாள் 2016-11-08.
  3. "Costume Designer turned to an actress!". entertainment.chennaipatrika.com. 2015-02-28. பார்க்கப்பட்ட நாள் 2016-11-08.
  4. "Uzhiyan (1994) - Manoj". mio.to. Archived from the original on 2016-11-09. பார்க்கப்பட்ட நாள் 2016-11-08.
  5. "Uzheyan Songs". saavn.com. பார்க்கப்பட்ட நாள் 2016-11-08.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஊழியன்_(திரைப்படம்)&oldid=4160966" இலிருந்து மீள்விக்கப்பட்டது