அருண் பாண்டியன்

தமிழ்த் திரைப்பட நடிகர்

அருண் பாண்டியன் (Arun Pandian) என்பவர் ஒரு தமிழ் திரைப்பட நடிகராவார். இவரின் தந்தை முன்னாள் இராணுவ வீரர்.[1] தமிழ் மொழியில் விகடன், போன்ற பல்வேறு திரைப்படங்களை இயக்கியுள்ளார். இவர் தற்போது ஐங்கரன் பட நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவர் 2011 ஆம் ஆண்டில் பேராவூரணி (சட்டமன்றத் தொகுதி)யின் உறுப்பினராக இருந்தார்.[2][3][4][5] இவர் தென்னிந்திய திரைப்பட நிதியாளர்கள் சங்கத்தின் (சிஃபா) செயலாளராகவும், தென்னிந்திய திரைப்பட ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் (சிஃபியா) தலைவராகவும் உள்ளார்.

அருண் பாண்டியன்
பிறப்புஅருண் பாண்டியன்
சூலை 13, 1958
ஆழ்வார் திருநகரி துத்துக்குடி மாவட்டம்
பணிநடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், அரசியல்வாதி
செயற்பாட்டுக்
காலம்
1983-தற்போது
வாழ்க்கைத்
துணை
விஜயா பாண்டியன்

அரசியல்

தொகு

இவர் 2011 இல் தமிழ்நாடு சட்டப் பேரவை தேர்தலில் தேசிய முற்போக்கு திராவிட கழகம் (தே.மு.தி.க) வேட்பாளராக பேராவூரணி தொகுதியில் போட்டியிட்டபின் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2016 பெப்ரவரி 21 அன்று அருண் பாண்டியன் மற்றும் ஒன்பது சட்டமன்ற உறுப்பினர்கள் மாநில சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னர் இராஜினாமா செய்தனர். 2016 பெப்ரவரி 25 அன்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கட்சியின் பொதுச் செயலாளர் தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா முன்னிலையில் (அஇஅதிமுக)வில் இணைந்தார் .

குடும்பம் மற்றும் கல்வி

தொகு

இவர் ஓய்வு பெற்ற லெப்டினன்ட் கேணல் டி.பி.செல்லையா என்பவரின் மகனாவார். இவர் திருநெல்வேலியில் வசிக்கிறார். இவரது மறைந்த சகோதரர் சி. துரை பாண்டியன் இயக்கிய ஊழியன் (1994) திரைப்படத்தில் அருண் பாண்டியன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்தார். இவருக்கு கவிதா பாண்டியன், கிரானா பாண்டியன் மற்றும் கீர்த்தி பாண்டியன் என்ற மூன்று மகள்கள் உள்ளனர். இவர் இளங்கலை பொருளாதாரத் துறையில் சென்னை பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றுள்ளார். இவரது மகள் கீர்த்தி பாண்டியன் மற்றும் இவரது மருமகள் ரம்யா பாண்டியன் ஆகியோர் நடிகைகளாக பணியாற்றி வருகின்றனர்.

சான்றுகள்

தொகு
  1. http://www.elections.tn.gov.in/Affidavits/177/C.ARUNPANDIAN.pdf[தொடர்பிழந்த இணைப்பு]
  2. http://www.jointscene.com/artists/Kollywood/Arun_Pandian/1643
  3. The Hindu : States / Tamil Nadu : Two more DMDK MLAs meet Jayalalithaa
  4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2014-01-14. பார்க்கப்பட்ட நாள் 2015-12-10.
  5. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2013-04-02. பார்க்கப்பட்ட நாள் 2015-12-10.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அருண்_பாண்டியன்&oldid=4123590" இலிருந்து மீள்விக்கப்பட்டது