சிங்கமுத்து

தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகர்

சிங்கமுத்து (Singamuthu, பிறப்பு: 08 திசம்பர், 1958) என்பவர் ஓர் இந்திய தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். இவர் தமிழ்த் திரைப்படங்களில் அதிகளவில் நகைச்சுவை வேடங்களிலே நடித்து வருகிறார். இவர் சூர்ய வம்சம் (1997), நீ வருவாய் என (1999) , ராஜா ராணி போன்ற முதன்மை திரைப்படங்களில் நடித்துள்ளார்.

சிங்கமுத்து
பிறப்புதிசம்பர் 8, 1958 (1958-12-08) (அகவை 65)
திருமங்கலம் (மதுரை), மதுரை, தமிழ்நாடு, இந்தியா
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
1987-தற்போது வரை

வாழ்க்கை வரலாறு

தொகு

இவர் திசம்பர் 08, 1958 ஆம் ஆண்டு மதுரை மாவட்டத்தில் உள்ள திருமங்கலத்தில் பிறந்தார்.[1] இவர் 1987 ஆம் ஆண்டு வெளியான நேரம் நல்லா இருக்கு என்னும் திரைப்படத்தில் நகைச்சுவை வேடங்களில் நடித்து திரைப்படத்துறைக்கு அறிமுகமானார். இவருக்கு வாசன் கார்த்திக் என்னும் மகன் உள்ளார்.[2] இவர் 2007 ஆம் ஆண்டு வெளியான மா மதுரை என்னும் திரைப்படத்தில் நடித்துள்ளார்.[3]

நில மோசடி வழக்கு

தொகு

இவரும் நகைச்சுவை நடிகரான வடிவேலும் பெரும்பாலான திரைப்படங்களில் ஒன்றாக நகைச்சுவை வேடங்களில் நடித்துள்ளனர். அதன் பின்பு இருவரும் நண்பர்களாகவே திரைப்படத்துறையில் வலம் வந்தனர். இந்நிலையில் நடிகர் வடிவேலு நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தாக்கல் செய்து இருந்தார். அதில், சென்னையை அடுத்துள்ள படப்பையில் தனக்கு சொந்தமான 3.52 ஏக்கர் நிலத்தை நல்ல விலைக்கு விற்றுத் தருவதாக கூறி, பவர் ஆஃப் அட்டார்னி வாங்கிக் கொண்டு, சிங்கமுத்து அதனை வேறு ஒருவருக்கு ரூ.1.93 கோடிக்கு விற்றுவிட்டு தன்னை ஏமாற்றிவிட்டதாக வடிவேலு குற்றம்சாட்டியிருந்தார். மேலும், இன்னொரு இடத்தை போலி ஆவணங்களை காட்டி தன்னிடம் ரூ.12 லட்சத்துக்கு விற்றதாகவும் குறிப்பிட்டிருந்தார்.[4]

கைது

தொகு

அதன் பிறகு நடிகர் வடிவேலுவின் மேலாளர் சிங்கமுத்து மீது காவல் நிலையத்தில் கொலை மிரட்டல் புகார் ஒன்றைக் கொடுத்தார். அதன் பெயரில் நடிகர் சிங்கமுத்து மே 16, 2010 அன்று திடீரென கைது செய்யப்பட்டு 13 நாள் சிறைக் காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

வழக்கில் சமரசம்

தொகு

இந்த வழக்கின் விசாரணையானது சூலை 26, 2018 அன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அதில் ஆஜரான வடிவேலு நிலப் பிரச்சினையில் தாங்களே பேசி சமரசம் செய்து கொண்டதாகவும், இருதரப்பும் வழக்கை வாபஸ் பெறுவதாகவும் தெரிவித்தனர். இதனால் வழக்கை முடித்து வைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது.[5]

மேற்கோள்கள்

தொகு
  1. "Singamithu". Times Of India
  2. "சிங்கமுத்து மகன் திருமண வரவேற்பு".தினமணி (ஆகத்து 24, 2016)
  3. "Singamuthu hopes son-shine - Malayalam Movie News". Indiaglitz.com. 2009-11-27. பார்க்கப்பட்ட நாள் 2014-03-01.
  4. "நில மோசடி வழக்கில் வடிவேலு, சிங்கமுத்து நேரில் ஆஜர்". Archived from the original on 2018-09-30. பார்க்கப்பட்ட நாள் 2022-01-09. தினமணி (ஏப்ரல் 21, 2017)
  5. "நில மோசடி வழக்கு : வடிவேலு, சிங்கமுத்து சமரசம்".தினமலர் (சூலை 27, 2018)
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிங்கமுத்து&oldid=3846575" இலிருந்து மீள்விக்கப்பட்டது