நீ வருவாய் என
இராஜகுமாரன் இயக்கத்தில் 1999 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
நீ வருவாய் என (Nee Varuvai Ena) 1999 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 14 ஆம் நாளன்று வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1] படத்தின் கதாநாயகனாக பார்த்திபனும், கதாநாயகியாக தேவயானியும் நடித்துள்ளனர். முக்கிய கதாப்பாத்திரத்தில் அஜித் குமாரும், ரமேஷ் கண்ணாவும் நடித்துள்ளனர். தமிழில் வெற்றியைத் தொடந்து இந்தப் படம் தெலுங்கில் மறுஆக்கம் செய்யப்பட்டது.
நீ வருவாய் என | |
---|---|
இயக்கம் | ராஜகுமாரன் |
தயாரிப்பு | ஆர். பி. சௌத்ரி |
கதை | ராஜகுமாரன் |
இசை | எஸ். ஏ. ராஜ்குமார் |
நடிப்பு | பார்த்திபன் அஜித் குமார் தேவயானி |
ஒளிப்பதிவு | அகிலன் |
படத்தொகுப்பு | வி. ஜெய்சங்கர் |
கலையகம் | சூப்பர் குட் பிலிம்ஸ் |
விநியோகம் | சூப்பர் குட் பிலிம்ஸ் |
வெளியீடு | ஆகஸ்டு 15, 1999 |
ஓட்டம் | 159 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நடிகர்கள்
தொகு- பார்த்திபன் - கணேஷ்
- அஜித் குமார் - சுப்பிரமணி
- தேவயானி - நந்தினி
- சுவலட்சுமி - பாக்கியலட்சுமி
- விஜயகுமார்
- ரமேஷ் கண்ணா
- வையாபுரி
- ஜெய்கணேஷ்
- சத்தியப்பிரியா
- சிங்கமுத்து
- சரண்யா நாக்
- சண்முக சுந்தரம்
பாடல்கள்
தொகுஇரசிகர்களால் விரும்பி கேட்கப்பட்ட பாடல்களைக் கொண்ட இப்படத்திற்கு இசையமைத்தவர் எஸ். ஏ. ராஜ்குமார் ஆவார். இப்படத்தின் பாடல் வரிகளை ரா. ரவிசங்கர், பா. விஜய், விவேகா, ரமேஷ் வைத்யா ஆகியோர் எழுதியுள்ளனர்.[2]
எண் | பாடல் | பாடகர்(கள்) | |
---|---|---|---|
1 | அதிகாலையில் சேவலை | சுஜாதா, பி. உன்னிகிருஷ்ணன் | |
2 | ஒரு தேவதை | சித்ரா | |
3 | பார்த்து பார்த்து | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | |
4 | பூங்குயில் பாட்டு | அருண்மொழி, ஹரிணி | |
5 | ஒரு தேவதை | ஹரிஹரன் | |
6 | பார்த்து பார்த்து | சித்ரா |
மேற்கோள்கள்
தொகு- ↑ ஆவுடையப்பன், பேச்சி (6 October 2022). "'தைரியம் இருந்தா அந்த கேரக்டரை விஜய்யை பண்ண சொல்லுங்க"...சவால் விட்ட அஜித்..என்ன படம் தெரியுமா?". ABP Live. Archived from the original on 6 October 2022. பார்க்கப்பட்ட நாள் 8 June 2023.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-09-08. பார்க்கப்பட்ட நாள் 2014-09-20.