பா.விஜய், தமிழ் திரைப்படப் பாடலாசிரியரும் கவிஞரும் ஆவார். 2004ஆம் ஆண்டுக்கான சிறந்த திரைப்படப் பாடலாசிரியருக்கான தேசிய விருதை தனது ஒவ்வொரு பூக்களுமே (திரைப்படம்:ஆட்டோகிராப்) என்ற பாடலுக்காக பெற்றுள்ளார்.

பா. விஜய்
பிறப்புபாலகிருஷ்ணன் விஜய்
அக்டோபர் 20, 1974 (1974-10-20) (அகவை 49)
ஜெயங்கொண்டம், தமிழ்நாடு, இந்தியா
புனைபெயர்வித்தகக் கவிஞர்
தொழில்நடிகர், பாடலாசிரியர்
குடியுரிமைஇந்தியா
கல்விமுதுகலைப் பட்டம்
கல்வி நிலையம்அண்ணாமலைப் பல்கலைக்கழகம்
காலம்1996 முதல் தற்போதுவரை
குறிப்பிடத்தக்க விருதுகள்சிறந்த வசனத்திற்கான தேசிய திரைப்பட விருது
2005 ஆட்டோகிராப்
துணைவர்லேனா
பிள்ளைகள்வி.விஸ்வா, வி.விஸ்னா
பெற்றோர்தந்தை : பாலகிருஷ்ணன்
தாயார் : சரஸ்வதி
இணையதளம்
http://www.pavijay.in

வாழ்க்கை குறிப்பு தொகு

கவிஞர் பா.விஜய் 1974 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 20ஆம் நாள் கோயமுத்தூரில் பிறந்தார். இவர் தந்தை வி. பாலகிருஷ்ணன் (கோவை தேசிய பஞ்சாலை நிறுவனத்தில் ஸ்பின்னிங் மாஸ்டராக பணியாற்றியவர்). தாயார் சரஸ்வதி மிகவும் கண்டிப்பான ஆசிரியர் (கோவை மாநகராட்சி பள்ளி ஆசிரியராக பணிபுரிந்துவந்தார்). இவரின் சொந்த ஊர் ஜெயங்கொண்டம் அருகில் உள்ள உட்கோட்டை ஆகும்.

இவர் 1978 முதல் 1980 வரை பாலர் பள்ளியிலும் 1980 முதல் 1985 வரை எம்.சி.ஆர்.ஆர். நாயுடு பள்ளியிலும், 1986 முதல் 1990 வரை சபர்பன் மேல்நிலைப்பள்ளியிலும் 1990 முதல் 1992 இராமலிங்கம் செட்டியார் மேல்நிலைப் பள்ளியிலும் கல்வி கற்றார். 1994 முதல் 1996 வரை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் அஞ்சல் வழியில் பி.லிட். பட்டம் பெற்றார். 2003 முதல் 2005 வரை தமிழில் முதுகலைப் பட்டம் பெற்றார்.

இயக்குனர் கே. பாக்யராஜின் ஞானப்பழம் படத்தில் முதலில் பாடலாசிரியராக அறிமுகமானார். இதுவரை சுமார் 600 படங்களுக்கு மேல் பணியாற்றி உள்ளார். இதுவரை 2000க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ளார்.

ஆட்டோகிராப் படத்துக்காக எழுதிய ஒவ்வொரு பூக்களுமே என்ற பாடலுக்காக 2004 ஆம் ஆண்டுக்கான சிறந்த பாடலாசிரியர் தேசிய விருதை பெற்றுள்ளார். முன்னாள் தமிழக முதல்வர் மு. கருணாநிதி வித்தகக் கவிஞர் என்ற பட்டம் வழங்கி பாராட்டியுள்ளார். கவிஞர் வாலி தமது கலையுலக வாரிசாக பா.விஜயை அறிவித்து பெருமையளித்துள்ளார். பாடலாசிரியராகத் திரைப்படத்துறைக்குள் நுழைந்த இவர் இரு தமிழ்த் திரைப்படங்களில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார்.

பா. விஜய் நடித்த படங்கள் தொகு

ஆண்டு திரைப்பபபடம்
2010 ஞாபகங்கள்
2011 இளைஞன்
2016 ஸ்டராபெரி

பா. விஜய் பெற்ற விருதுகள் தொகு

ஆண்டு பெற்ற விருதுகள்
2000 சினிமா எக்ஸ்பிரஸ் விருது
2001 தமிழ்நாடு திரைப்படச் சங்க விருது
2001 ராஜ் டி.வி. உழைப்பாளர் விருது
2001 வெரைட்டி விருது
2001 பாலர் ஜூனியர் சேம்பர் விருது
2002 லயன்ஸ் கிளப் கவிச்சிற்பி விருது
2002 தில்லி தமிழ் சங்க கலா குரூப் விருது
2003 சர்வதேச தமிழ் திரைப்பட மலேசிய விருது விழாவில் சிறந்த பாடலாசிரியருக்கான விருது
2003 வெற்றித் தன்னம்பிக்கையாளர் விருது
2003 சன் பீம் கல்வி நிறுவன விருது
2004 ட்ரைனிட்டி விருது
2004 சன் பீம் கல்வி நிறுவன விருது
2004 த.மு.எ.ச. துறைமுகம் விருது
2004 தேசிய விருது
2005 தில்லி தமிழ் சங்க கலா குரூப் விருது
2005 பாரத் அசோசியேஸன் விருது
2005 ஆலந்தூர் பைன் ஆர்ட்ஸ் விருது
2005 எம்.ஜி.ஆர்.-சிவாஜி விருது
2005 சென்னை நண்பர்கள் விருது
2005 வெரைட்டி விருது
2005 தினகரன் விருது
2005 பிலிம் டுடே விருது
2006 எம்.ஜி.ஆர். விருது
2006 மலேசிய ஜி.எம்.டி. விருது
2006 தஞ்சை செங்குந்தர் மகாசன விருது
2006 செம்பனார்கோயில் லயன்ஸ் கிளப் வழங்கிய இளம் சாதனையாளர் விருது
2006 கÏர் ரோட்டரி கிளம்ப்பின் மொழிக்காவலர் விருது
2007 கலைமாமணி விருது
2007 ராஜீவ்காந்தி – முப்பனார்விருது
2007 கலைவித்தகர் - கண்ணதாசன் விருது
2007 இளம் கவி அரசர் விருது - கனடா
2007 பாரத் சினி விருது
2008 எம்.ஜி.ஆர். - சிவாஜி விருது
2008 திரை இசை விருது
2008 ஆலந்தூர் பைன் ஆர்ட்ஸ் வழங்கிய சிறந்த தொலைக்காட்சி பாடலாசிரியருக்கான விருது
2008 ப்லீம்பேர் விருது
2009 ஆலந்தூர் பைன் ஆர்ட்ஸ்
2009 ப்லீம்பேர் விருது
2009 தமிழ்நாடு சினிமா கலை மன்ற விருது
2009 பாரத் சினி விருது
2010 தமிழ்நாடு சினிமா கலை மன்ற விருது சிறந்த பாடலாசிரியர் மற்றும் நடிகருக்கான விருது ஞாபகங்கள்
2010 சிறந்த திரைப்பட பாடலாசிரியருக்கான இசையருவி விருது சர்வம் திரைப்பட பாடல்
2011 சிறந்த பாடலாசிரியருக்கான எடிசன் விருது
2011 BIG FM சிறந்த வெற்றிப் பாடல் விருது
2011 தமிழ்நாடு திரைப்பட சங்க விருது
2011 சிறந்த தொலைக்காட்சி தொடர்ப்பாடல் விருது
2011 ஆலந்தூர் பைன் ஆர்ட்ஸ் விருது
2012 ராஜ் டிவி அகடவிடம் விருது
2012 லயன்ஸ் கிளப் சிறந்த கலைஞர் விருது
2012 ஆலந்தூர் பைன் ஆர்ட்ஸ் விருது
2012 நியூ பிலிம் இந்திய நிறுவன விருது
2012 BIG FM
2012 சிறந்த பாடலாசிரியருக்கான Mirchi Music விருது

பா விஜய்-ன் படைப்புகள் தொகு

எண் படைப்பு விளக்கம்
01 இந்தச் சிப்பிக்குள்
02 சுதியோடு வந்த நதி
03 நந்தவனத்து நட்சத்திரங்கள்
04 நிழலில் கிடைத்த நிம்மதி
05 போர்ப் புறா
06 ஒரு தூரிகை துப்பாக்கியாகிறது
07 உடைந்த நிலாக்கள் (பாகம் ஒன்று) வரலாற்றில் தோல்வியில் முடிந்த காதல்கள் பற்றிய கவிதைத் தொகுப்பு
08 உடைந்த நிலாக்கள்(பாகம் இரண்டு)
09 உடைந்த நிலாக்கள்(பாகம் மூன்று)
10 சில்மி~pயே முழுமையான காதல் கவிதை தொகுப்பு
11 வானவில் பூங்கா (துபாயில் வெளியிட்டது)
12 காற்சிலம்பு ஓசையிலே (பாகம் ஒன்று)
13 காற்சிலம்பு ஓசையிலே (பாகம் இரண்டு)
14 நம்பிக்கையுடன்
15 கண்ணாடி கல்வெட்டுகள் - கல்கி தொடர்
16 அரண்மனை இரகசியம் (நாவல்)
17 பா.விஜய் பாடல்கள் (பாகம் ஒன்று)
18 பா.விஜய் பாடல்கள் (பாகம் இரண்டு)
19 உடைந்த நிலாக்கள் பகுதி ஒன்று (ஒலிநாடா)
20 பா.விஜய் கவிதைகள் (ஒலிநாடா)
21 வினாயகர் சரஸ்வதி ஸ்துதி (ஒலிநாடா)
22 கடவுள் வருகிறான் ஜாக்கிரதை (கவிதை)
23 காதல்@காதலிகள்.காம் (கவிதை)
24 பெண்கள் பண்டிகை (கவிதை)
25 இரண்டடுக்கு ஆகாயம் (கவிதை)
26 ஐஸ்கட்டி அழகி (கவிதை)
27 காகித மரங்கள் (கவிதை)
28 கைதட்டல் ஞாபகங்கள் (கவிதை)
29 அடுத்த அக்னி பிரவேசம் (கவிதை)
30 இருநாவல்கள் (நாவல்)
31 போர்ப்புறா - வாழ்க்கைத்தேடி வானம்பாடிகள்
32 18 வயசுல - முழுமையான காதல் கவிதை தொகுப்பு
33 வள்ளுவர் தோட்டம்
34 மஞ்சள் பறவை
35 பேச்சுலர் ரூம்
36 கறுப்பு அழகி
37 ஆப்பில் மாதிரி உன்னை அப்படியே
38 இதழியல் கல்லூரி (முத்தாலஜி பிரிவு)
39 நண்பன் நண்பி
40 ஒரு கூடை நிலா
41 கண்ணே நீ கயாஸ் தியரி
42 நட்பின் நாட்கள்
43 செய்
44 சமர்
45 ஞாபகங்கள்
46 பா.விஜய் ஓர் பார்வை
47 மோது முன்னேறு
48 தோற்பது கடினம்
49 என் பாட்டுக்கரையில்
50 சௌபர்னிகா

பிரபலமான பாடல்களில் சில... தொகு

ஆண்டு திரைப்படம் பாடல்(கள்) வேறு குறிப்புகள்
1996 ஞானப்பழம் "மணிமாடக் குயிலே நீ"
1999 நீ வருவாய் என "பார்த்துப் பார்த்து"
2000 வானத்தைப் போல "காதல் வெண்ணிலா"
தெனாலி "சுவாசமே"
வெற்றிக் கொடி கட்டு "கருப்புதான் எனக்குப் பிடிச்ச கலரு"
சிநேகிதியே "தேவதை வம்சம் நீயே"
பார்வை ஒன்றே போதுமே "ஏ! அசைந்தாடும் காற்றுக்கும்"
2001 தில் "தில்.. தில்.."
துள்ளுவதோ இளமை "நெருப்பு கூத்தடிக்குது" All songs except "Kannmunne"
சமுத்திரம் "பைன் ஆப்பிள்"
உள்ளம் கொள்ளை போகுதே "கவிதைகள் சொல்லவா"
2002 சுந்தரா டிராவல்ஸ் "மல்லிகை பூவுக்கு மதுர விலாசம்"
சார்லி சாப்ளின் "முதலாம் சந்திப்பில்"
உன்னை நினைத்து "பொம்பளைங்க காதலத்தான்"
ரன் "இச்சுத்தா இச்சுத்தா"
2003 ஏப்ரல் மாதத்தில் "மனசே மனசே"
பாய்ஸ் "னக்கோரு கேர்ள்ப்ரண்ட் வேணுமடா"
2004 ஆட்டோகிராப் "ஒவ்வொரு பூக்களுமே" சிறந்த பாடலுக்கான தேசிய விருதை பெற்ற பாடல்
2005 அறிந்தும் அறியாமலும் அனைத்து பாடல்களும்
சந்திரமுகி "அத்திந்தோம்"
2006 பட்டியல் அனைத்து பாடல்களும்
போக்கிரி "டோலே டோலே", "நீ முத்தம் ஒன்று" & "என் செல்லம் பேரு"
2007 நான் அவனில்லை 4 பாடல்கள்
2007 உன்னாலே உன்னாலே "நான்கு பாடல்கள்" (Out of 6)
சிவாஜி "ஒரு கூடை சன் லைட்", "ஸ்டைல்"
அழகிய தமிழ் மகன் "மதுரைக்கு போகாதடி"
பில்லா அனைத்து பாடல்களும்
2008 பீமா "ஒரு முகமோ"
குருவி "பலானது" & "மொழ மொழன்னு"
சக்கரகட்டி "சின்னம்மா" & "நான் எப்போது"
குசேலன் "சொல்லு சொல்லு"
2009 வில்லு "நீ கோப பட்டால்"
அயன் "ஓயாயியே" & "ஹனி ஹனி"
சர்வம் அனைத்து பாடல்களும்
தோரணை "வா செல்லம்" & "மஞ்சசேல மந்தாகினி"
ஆதவன் ஹசிலி பிசிலி
முத்திரை "நைட் இஸ் ஸ்டில் யங்" & "நைட் இஸ் ஸ்டில் யங் (Remix"
2010 தீராத விளையாட்டு பிள்ளை "தீராத விளையாட்டு பிள்ளை" தவிர அனைத்து பாடல்களும்
எந்திரன் "கிளிமஞ்சாரோ"
2011 மாப்பிள்ளை "ஒன்னு ரெண்டு"
காவலன் "விண்ணை காப்பான்"
சிறுத்தை "தாலாட்டு"
2011 கோ "அக நக"
2012 7ஆம் அறிவு "ஒ ரிங்கா ரிங்கா" & "இன்னும் என்ன தோழா"
நண்பன் "இருக்கானா இல்லையண்ணா"
2012 கலகலப்பு "அனைத்து பாடல்களும்"
மிரட்டல் "முக மூடி போட நிலவி & ரேடியோ ரேடியோ"
2012 மாற்றான் "தீயே தீயே"
2022 லெஜன்ட்

"அந்த லெவல்" ||

மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பா._விஜய்&oldid=3866067" இலிருந்து மீள்விக்கப்பட்டது