தெனாலி

இந்தியாவின் ஆந்திர மாநிலத்தில் உள்ள ஒரு நகரம்

தெனாலி (Tenali) இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் குண்டூர் மாவட்டத்தில், தெனாலி வருவாய் வட்டத்தில் அமைந்த நகராட்சி மன்றத்துடன் கூடிய நகரம் ஆகும்.[3] தெனாலி நகரம் கலை, பண்பாடு, நாடகம் ஆகியவற்றிற்காக புகழ்பெற்றததால் இதனை ஆந்திராவின் பாரிஸ் என்ற புனைப்பெயருடன் குறிப்பிடப்படுகிறது. [4] ஆந்திரப் பிரதேசத் தலைநகர் வலயத்தில் தெனாலி நகரம் அமைந்துள்ள தெனாலி நகரத்தின் மக்கள்தொகை 1,64,937 ஆகும். விஜயநகரப் பேரரசர் அவையில் இருந்த பெரும்புலவர்களில் இந்நகரத்தின் தெனாலி இராமனும் ஒருவராவர்.

தெனாலி
நகரம்
தியாகிகள் நினைவுச் சின்னம், ரானாரங்கா சதுக்கம், தெனாலி
தியாகிகள் நினைவுச் சின்னம், ரானாரங்கா சதுக்கம், தெனாலி
அடைபெயர்(கள்): ஆந்திராவின் பாரீஸ்
தெனாலி is located in ஆந்திரப் பிரதேசம்
தெனாலி
தெனாலி
இந்தியா, ஆந்திரப் பிரதேசத்தில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 16°14′34″N 80°38′24″E / 16.2429°N 80.6400°E / 16.2429; 80.6400
நாடுஇந்தியா
மாநிலம்ஆந்திரப் பிரதேசம்
மாவட்டம்குண்டூர்
அரசு
 • வகைநகராட்சி மன்றம்
 • நிர்வாகம்தெனாலி நகராட்சி
ஆந்திரப் பிரதேசத் தலைநகர வளர்ச்சி பகுதி
பரப்பளவு[1]
 • மொத்தம்16.63 km2 (6.42 sq mi)
பரப்பளவு தரவரிசை21
ஏற்றம்15 m (49 ft)
மக்கள்தொகை (2011)[2]
 • மொத்தம்1,64,937
 • தரவரிசை17
 • அடர்த்தி9,950/km2 (25,800/sq mi)
மொழிகள்
 • அலுவல் மொழிதெலுங்கு
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் சுட்டு எண்522 201
வாகனப் பதிவுAP-07
மக்களவைத் தொகுதிதெனாலி
சட்டமன்றத் தொகுதிதெனாலி
இணையதளம்tenali.cdma.ap.gov.in/en
தெனாலி ராமன் சிலை, தெனாலி நகராட்சி மன்றம் அருகில்

புவியியல் தொகு

ஆந்திரப் பிரதேசத்தின் கடற்கரை பகுதியில் அமைந்த தெனாலி நகரம், குண்டூரிலிருந்து கிழக்கே 28 கிமீ தொலைவிலும், விஜயவாடாவிற்கு தெற்கே 37 கிமீ தொலைவிலும் உள்ளது.

மக்கள்தொகை பரம்பல் தொகு

2011ம் ஆண்டின் மக்கள்தொகை]] கணக்கெடுப்பின் படி, 43,604 வீடுகள் கொண்ட தெனாலி நகரத்தின் மொத்த மக்கள்தொகை 1,64,937 ஆகும். அ81,427 அதில் ஆண்கள் 81,427 ஆகவும்; பெண்கள் 83,510 ஆகவும் உள்ளனர். பாலின விகிதம்]] 1000 ஆண்களுக்கு 1026 பெண்கள் வீதம் உள்ளனர். ஆறு வயதிற்குட்பட்டோர் 14,340 ஆகவுள்ளனர். மக்கள்தொகை அடர்த்தி, ஒரு சதுர கிலோ மீட்டரில் 9,950 மக்கள் வாழ்கின்றனர். சராசரி எழுத்தறிவு 82.75 % ஆக உள்ளது. [5] தெனாலி மக்கள்தொகையில் இந்துக்கள் 1,38,156 (83.76%) ஆகவும், இசுலாமியர்கள் 21,619 (13.11 %) ஆகவும், பிறர் 3.12% ஆகவும் உள்ளனர்.

நிர்வாகம் தொகு

உள்ளாட்சி நிர்வாகம் தொகு

 
தெனாலி நகராட்சி அலுவலுகம்

1909ம் ஆண்டில் நிறுவப்பட்ட தெனாலி நகராட்சி மன்றம், சிறப்பு நிலை நகராட்சியாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. தெனாலி நகராட்சியின் பரப்பளவு 16.63 சதுர கிலோ மீட்டர் ஆகும். 40 நகராட்சி மன்ற உறுப்பினர்கள் கொண்ட தெனாலி நகராட்சி மன்றத்தில் 17 பொதுப்பிரிவு வார்டுகளும், 23 இடஒதுக்கீடு வார்டுகளில், 4 பட்டியல் சமூகத்தினருக்கும், 2 பட்டியல் பழங்குடி மக்களுக்கும், 14 பிற்படுத்தவர்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.[6] [7]

அரசியல் தொகு

தெனாலி நகரம் தெனாலி சட்டமன்றத் தொகுதிக்கும், குண்டூர் நாடாளுமன்றத் தொகுதிக்கும் உட்பட்டதாகும்.

போக்குவரத்து தொகு

 
தெனாலி தொடருந்து நிலையம்

தெனாலி சந்திப்பு தொடருந்து நிலையம் குண்டூர் மற்றும் விஜயவாடா நடுவில் உள்ளது. [8]

மேற்கோள்கள் தொகு

  1. "Municipality Profile | Tenali Municipality". tenali.cdma.ap.gov.in. Archived from the original on 4 நவம்பர் 2016. பார்க்கப்பட்ட நாள் 4 November 2016.
  2. "Census 2011". The Registrar General & Census Commissioner, India. பார்க்கப்பட்ட நாள் 1 August 2014.
  3. "About Tenali". VGTM Urban Development Authority. Archived from the original on 21 August 2015. பார்க்கப்பட்ட நாள் 26 February 2016.
  4. Samuel Jonathan, P (12 November 2008). "Big Cinema comes to Andhra Paris". The Indian Express. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-andhrapradesh/big-cinema-comes-to-andhra-paris/article1374347.ece. பார்த்த நாள்: 1 April 2016. 
  5. http://www.census2011.co.in/census/city/414-tenali.html Tenali City Census 2011 data]
  6. "Municipality wards" (PDF). Andhra PRadesh – State Election Commission. Archived from the original (PDF) on 6 செப்டம்பர் 2019. பார்க்கப்பட்ட நாள் 27 June 2016. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  7. "The Constitution (Seventy-Fourth Amendment) Act, 1992". India Code. Ministry of Law and Justice, Legislative Department. பார்க்கப்பட்ட நாள் 28 March 2016.
  8. Tenali Junction railway station

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=தெனாலி&oldid=3693673" இலிருந்து மீள்விக்கப்பட்டது