ஆட்டோகிராப் (திரைப்படம்)

சேரன் இயக்கத்தில் 2004 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
(ஆட்டோகிராப் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

ஆட்டோகிராஃப் (Autograph) 2004 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சேரன் இதனை எழுதி, இயக்கி, தயாரித்ததுடன் நடிக்கவும் நடித்தார். இப்படம் வணிக நோக்கில் பெருவெற்றி பெற்றதுடன் சிறந்த பொழுதுபோக்குத் திரைப்படத்துக்கான தேசிய விருது, சிறந்த திரைப்படத்துக்கான பிலிம்பேர் விருது உட்பட பல்வேறு விருதுகளை வென்றது.

ஆட்டோகிராப்
இயக்கம்சேரன்
தயாரிப்புசேரன்
கதைசேரன்
இசைபரத்வாஜ்
நடிப்புசேரன்
சினேகா
கோபிகா
மல்லிகா
கனிகா
விநியோகம்டிரீம் தியேட்டர்ஸ்
வெளியீடுபெப்ரவரி 2004
ஓட்டம்168 நிமிடங்கள்
நாடு இந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள்

தொகு
  • சேரன் - செந்தில்குமார்
    • சிவப்பிரகாசம் - செந்தில்குமார், (சிறுவயது)
  • சினேகா - திவ்யா (செந்திலின் நண்பி)
  • கோபிகா - லத்திகா (செந்தில் காதல் செய்யும் பெண்)
  • மல்லிகா - கமலா(செந்திலின் சிறு வயது காதலி)
  • கனிகா - தேன்மொழி(செந்தில் திருமணம் செய்யும் பெண்)
  • இளவரசு - நாராயணன் (ஆசிரியர்)
    • கருப்பையா பாரதி - நாராயணன் ஆசிரியர் (வயதானவர்)
  • கிருஷ்ணா - கமலக்கண்ணன்
  • பெஞ்சமின் - ஊளமூக்கன் சுப்பிரமணி
    • பாண்டி - ஊளமூக்கன் சுப்பிரமணி (சிறுவயது)
  • ராஜேஷ் - செந்தில்குமாரின் அப்பா
  • விஜயா சிங் - செந்தில்குமாரின் அம்மா

வென்ற விருதுகள்

தொகு

இத்திரைப்படம் வெளியான நாள்முதல் இப்படம் வென்ற விருதுகளை கீழே காணலாம்.

இந்திய தேசிய திரைப்பட விருதுகள்

  • தங்கத் தாமரை விருது - சிறந்த மனமகிழ்ச்சி தரும் பிரபல திரைப்படம் - சேரன்
  • வெள்ளித் தாமரை விருது - சிறந்த பின்னணிப் பாடகிக்கான இந்திய தேசிய விருது - சித்ரா
  • வெள்ளித் தாமரை விருது - சிறந்த பாடலாசிரியருக்கான இந்திய தேசிய விருது - பா. விஜய்

பிலிம்பேர் விருதுகள்

தமிழக அரசு திரைப்பட விருதுகள்

பாடல்கள்

தொகு

ரசிகர்களிடம் சிறப்பான வரவேற்பு பெற்ற பாடல்களைக் கொண்ட இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் பரத்வாஜ் ஆவார்.

எண் பாடல் பாடியவர்(கள்)
1 "ஞாபகம் வருதே" பரத்வாஜ்
2 "கிழக்கே பார்த்தேன்" யுகேந்திரன், போனி
3 "மனமே நலமா" பரத்வாஜ்
4 "மனசுக்குள்ளே தாகம்" ஹரிஷ் ராகவேந்திரா, ரேஷ்மி
5 "மீசை வச்ச பேராண்டி" கோவை கமலா, கார்த்திக்
6 "நினைவுகள் நெஞ்சினில்" உன்னிமேனன்
7 "ஒவ்வொரு பூக்களுமே" சித்ரா

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆட்டோகிராப்_(திரைப்படம்)&oldid=4163355" இலிருந்து மீள்விக்கப்பட்டது