ஸ்டராபெரி (திரைப்படம்)

பா. விஜய் இயக்கத்தில் 2015 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

ஸ்ட்ராபெரி என்பது 2015 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ் மொழி திகில் மற்றும் நகைச்சுவைத் திரைப்படமாகும். இதில் பா விஜய் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார், சமுத்திரக்கனி, யூவினா பார்த்தவி, தேவயானி ஆகியோர் இத்திரைப்படத்தில் நடித்துள்ளார்கள்.[1][2] ஒலிப்பதிவு மற்றும் பாடல்கள் இசையமைத்துள்ளார். இப்படம் 11 செப்டம்பர் 2015 அன்று திரையரங்குகளில் வெளியிடப்பட்டது.

ஸ்டராபெரி
இயக்கம்பா. விஜய்
தயாரிப்புபா விஜய்
கதைபா விஜய்
இசைதாஜ் நூர்
நடிப்புபா. விஜய்
அவனி மோடி
சமுத்திரக்கனி
யூவினா பார்த்தவி
தேவயானி
ஒளிப்பதிவுமாறவர்மன்
படத்தொகுப்புசான் லோகேஷ்
கலையகம்வில் மேக்கர்
விநியோகம்ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ்
வெளியீடுசெப்டம்பர் 11, 2015 (2015-09-11)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள்

தொகு

கதைக்களம்

தொகு

சில வருடங்களுக்கு முன் தமிழகத்தில் ஒரு பள்ளி வாகனத்தின் துவாரத்தின் வழியாக இறந்த குழந்தையின் உண்மைக் கதையை கற்பனையும் சோகமும் அமானுஷ்யமும் கலந்து கொடுக்கப்பட்ட கதைதான் ஸ்டராபெரி. தேவயானி மற்றும் சமுத்திரக்கனியின் மகள் யுவினா பார்த்தவி. அவரின் பிடித்தமான நண்பனாக பா விஜய் நடித்திருக்கிறார், ஒரு நாள் யுவினா பார்த்தவி தனது பள்ளி வாகனத்தில் பயணம் செய்கிறார், பேருந்து ஓட்டுனர் மது அருந்தி விட்டு தனது கவனக்குறைவால் வாகனத்தை வேகமாக நிறுத்த முற்படுகிறார், அப்போது யுவினா பார்த்தவி அமர்ந்திருக்கும் இருக்கைக்கு கீழ் உள்ள துவாரத்தின் வழியாக அவள் கீழே விழுகிறார், இந்த விபத்தில் அவள் உயிர் இழக்கிறாள். மகளை இழந்த துயரத்தில் தேவயானி மனநிலை சரி இல்லாத நிலைக்கு தள்ளப்படுகிறார். சமுத்திரக்கனி தன் குழந்தை இறந்ததற்கு காரணமான பள்ளி நிர்வாகத்திற்கு எதிராக சாட்சிகளைத் திரட்டுகிறார். பா விஜய் ஒரு வாடகை ஊர்தி ஓட்டுனர் ஆவார். அவனி மோடி ஆவிகளைப் பற்றியும் அமானுஷ்யங்களை பற்றியும் ஆராய்ச்சி செய்கிறார். தனது ஆராய்ச்சிக்கு உதவியாக வாடகை ஊர்தி ஓட்டுனராக பா விஜயை அழைக்கிறார். பா. விஜய் அவருடன் செல்கிறார். இதற்கிடையில் இறந்த குழந்தை யுவினா பார்த்தவி ஆவியாக பா விஜய்யின் உடலில் அவருக்குத் தெரியாமலேயே வருகிறார். அமானுஷ்ய சக்தியை அறியும் கருவி கொண்டு அவனி மோடி இதை தெரிந்து கொள்கிறார். பா விஜய் மூலம் இறந்த குழந்தை பார்த்தவி தன் இறப்பிற்கு காரணமான ஒவ்வொருவரையும் பழிவாங்குகிறார்,

விமர்சன வரவேற்பு

தொகு

தி இந்து தமிழ் பத்திரிக்கை பின்வருமாறு எழுதியது, " இயக்குநர் பா. விஜய் இத்திரைப்படத்தில் கல்வியை வணிகமாக செய்யும் பெரும்புள்ளிகளின் அயோக்கியத்தனத்தை காட்ட நினைத்து இந்தக் கதையைத் தொட்டிருப்பார். ஆனால், படம் கதையின் முக்கியப்புள்ளியைத் தொட இவ்வளவு நேரம் எடுக்கும் என்றும் படத்தில் சொல்ல வந்த கருத்தே பிந்தைய சிந்தனையோ என்று எண்ண வைக்கும் அளவிற்கு இருக்கிறது.[3] தி டைம்ஸ் ஆஃப் இந்தியா இத்திரைப்பபடத்திற்கு 5 நட்சத்திரங்களுக்கு 2 நட்சத்திரங்களை மட்டுமே கொடுத்தது. இந்தக் காலகட்டத்தில் தமிழ்த் திரைப்பட பார்வையாளர்கள் வெளிப்படுத்திய திகில் படங்களின் அளவைப் பொறுத்தவரை, படம் முற்றிலும் தேவையற்றதாக தோன்றுவதாகவும், திரைப்படத் தயாரிப்பும் சுவாரசியமாக இல்லை என்றும் கூறியுள்ளது.[4] சிஃபி இணையதள விமர்சனம் இத்திரைப்படத்தைப் பற்றி பின்ருமாறு எழுதியது, "வெளிப்படையாகச் சொல்வதானால், ஸ்ட்ராபெரியின் ஒரு வரிக்கதை நிச்சயமாக சுவாரசியமானது, ஆனால், ஒரு படத்தின் திரைக்கதை நகரவிடாத அளவிற்கு இறுக்கமான எழுத்து மற்றும் வலுவான பாத்திரப்படைப்புகள் ஆகியவை தேவைப்படுகிறது, இதை இயக்குநர் பா விஜய் தவற விட்டுள்ளார். படம் மிகவும் முதிர்ச்சியற்ற தனத்தைக் கொண்டுள்ளது." [5]

வெளியீடு

தொகு

படத்தின் செயற்கைக்கோள் உரிமைகள் சன் டிவி தொலைக்காட்சி நிறுவனத்திற்கு விற்கப்பட்டன.[6]

மேற்கோள்கள்

தொகு
  1. http://www.thehindu.com/features/cinema/lyricistactor-vijay-who-debuts- போன்ற-இயக்குநர் மற்றும்-strawberr தயாரிப்பாளர்-/ article7645798.ece
  2. http://www.newindianexpress.com/entertainment/tamil/The-Ghost-of-Strawberry/2015/09/12/[தொடர்பிழந்த இணைப்பு] article3022928.ece
  3. http://www.thehindu.com/features/cinema/cinema-reviews/strawberry-good -இனக்கங்கள்-மட்டும்-செய்ய வேண்டாம்-ஒரு நல்ல படம் / கட்டுரை 7645933.ece
  4. http: // timesof india.indiatimes.com/entertainment/tamil/movie-reviews/Strawberry/movie-review/48932417.cms
  5. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-09-14. பார்க்கப்பட்ட நாள் 2019-12-02.
  6. https://www.youtube.com/watch?v=OV-UQFaWaao
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஸ்டராபெரி_(திரைப்படம்)&oldid=4167781" இலிருந்து மீள்விக்கப்பட்டது