சனகராஜ்

தமிழ்த் திரைப்பட நடிகர்

ஜனகராஜ் (Janagaraj) தமிழ்த் திரைப்படங்களில் பெரும்பாலும் நகைச்சுவை வேடங்களில் நடித்த ஓர் திரைப்பட நடிகராவார். 100 திரைப்படங்களுக்கும் மேலாக நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகராக நடித்துள்ளார். நகைச்சுவை நடிகர்களான கவுண்டமணி செந்தில் சோடிக்கு போட்டியாக இருந்தார்.[1][2][3]

சனகராஜ்
பிறப்பு1955
சென்னை, தமிழ்நாடு, இந்தியா
பணிநகைச்சுவை நடிகர்
செயற்பாட்டுக்
காலம்
1978-2008, 2018
பெற்றோர்வடிவேலு
முத்துலட்சுமி

இளமை

தொகு

1955ஆம் ஆண்டு வடிவேலு, முத்துலெட்சுமி தம்பதிகளுக்கு மகனாகப் பிறந்தார். நடிப்பில் ஆர்வம் கொண்டு உள்ளூர் நாடகக்குழுக்களில் பங்கெடுத்து வந்தார்.

திரை வாழ்க்கை

தொகு

துவக்கம்

தொகு

1971 ஆண்டு முதலே திரைப்படங்களில் நடிக்க முயன்று வந்தார். 1972 - 1977 ஆண்டுகளில் இயக்குநர் கைலாசம் கே.பாலச்சந்தர் அவருக்கு தமது இரண்டாம் தர திரைப்படங்களில் பல சிறு வேடங்களை அளித்து வந்தார். 1977ஆம் ஆண்டில்தான் முதன்முறையாக வசனம் உள்ள வேடமொன்றில் "செவப்பு வில்லு" என்ற திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. 70கள் முழுவதுமே இத்தகைய சிறு வேடங்களில் நடித்து வந்தார்.

1980கள் அவருக்கு சிறப்பான ஆண்டுகளாக அமைந்தன. 1982ஆம் ஆண்டு வெளியான பார்வை (1982), பின் தொடர்ந்த அபூர்வ பேரர்கள் (1983), மீண்டும் கோகிலா (1983), சிந்து பைரவி (1985), ராஜாதி ராஜா (1989), அபூர்வ சகோதரர்கள் (1989), அக்னி நட்சத்திரம் (1989), மற்றும் புதுப் புது அர்த்தங்கள் (1989), அவரது வெற்றிக்குப் படிகளாக அமைந்தன.

பிந்தைய ஆண்டுகள்

தொகு

90களில் குணச்சித்திர வேடங்களில் நடிக்கத் தொடங்கினார். இந்தக் காலகட்டத்தில் அவர் நடித்த கிங் (2002), ஆயுத எழுத்து (2004), மற்றும் எம். குமரன் S/O மகாலட்சுமி (2004) ஆகியன குறிப்பிடத்தக்க திரைப்படங்களாகும்.

வெளியிணைப்புகள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "'I'm In A Reckless Mood, I Want To Showcase Something Different': A Conversation With Actor Janagaraj". 3 October 2018.
  2. "Janagaraj back to Tamil cinema with Vijay Sethupathi's '96'". Sify. Archived from the original on 8 August 2017.
  3. Vasudevan, K. V. (24 December 2016). "Back with a bang". The Hindu. https://www.thehindu.com/entertainment/movies/Back-with-a-bang/article16937502.ece. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சனகராஜ்&oldid=4168243" இலிருந்து மீள்விக்கப்பட்டது