ஊமை விழிகள் (1986 திரைப்படம்)
ஊமை விழிகள் (Oomai Vizhigal) 1986 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 15 ஆம் தேதியன்று வெளிவந்த தமிழ் திரைப்படம் ஆகும்.[1][2] இதை ஆபாவாணன் என்ற திரைப்படக் கல்லூரி மாணவர் தன் கல்லூரி மாணவர்களை கொண்டு எடுத்தார். இதில் விஜயகாந்த் முதன்மையான வேடத்தில் நடித்தார். அருண் பாண்டியன், கார்த்திக், ஜெய்சங்கர், சரிதா, இரவிச்சந்திரன், மலேசியா வாசுதேவன், சந்திர சேகர், விசு, கிஷ்மு, சச்சு, சிறீ வித்யா, டிஸ்கோ சாந்தி, இளவரசி, தேங்காய் சீனிவாசன், சசிகலா போன்றோர் இதில் நடித்தார்கள். இது திகில் கலந்த படமாக வந்தது.
ஊமை விழிகள் | |
---|---|
![]() | |
இயக்கம் | அரவிந்தராஜ் |
தயாரிப்பு | ஆபாவாணன் |
கதை | ஆபாவாணன் |
திரைக்கதை | ஆபாவாணன் |
இசை | மனோஜ்-கியான் |
நடிப்பு | |
ஒளிப்பதிவு | எ. ரமேஷ் குமார் |
வெளியீடு | 1986 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
கதை சுருக்கம்
தொகுசோழா பிக்னிக் வில்லேஜ் (இதன் உரிமையாளர் பி.ஆர்.கேயாக ரவிச்சந்திரன் நடித்துள்ளார்) என்ற இடத்திற்கு வரும் இளம்பெண்கள் பலர் மர்மமான முறையில் காணாமல் போகிறார்கள். அதை பற்றி விசாரிக்க வரும் செய்தியாளர் ராஜா அங்கு நிகழும் மர்மத்தை பற்றி துப்பு துலக்க ஆரம்பிக்கிறார். அவருக்கு துணை புரிகிறார்கள் 'தினமுரசு' செய்தி இதழின் உரிமையாளர் சந்திரனும் (ஜெய்சங்கர்), மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தீன தயாளனும் (விஜயகாந்த்).
நடிகர்கள்
தொகு- விஜயகாந்த் - தீனதயாளன் (காவல்துறை கண்காணிப்பாளர்)
- அருண் பாண்டியன் - விஜய்
- கார்த்திக் - ரமேஷ் (சிறப்புத் தோற்றம்)
- ஜெய்சங்கர் - சந்திரன்
- சரிதா -சுமதி
- இரவிச்சந்திரன் - பி. ஆர். கே.
- மலேசியா வாசுதேவன் - ராஜா
- சந்திரசேகர் - ராஜா
- விசு -ரத்தினசபாபதி
- சிறீ வித்யா
- டிஸ்கோ சாந்தி
- இளவரசி
- தேங்காய் சீனிவாசன்
- சசிகலா
பாடல்கள்
தொகுஇதில் பாடியிருப்பவர்கள் ஆபாவாணன், பி. பி. சீனிவாசு, ஜேசுதாசு, சசி ரேகா, எஸ். என். சுரேந்தர் [3]. இப்படத்தின் அனைத்து பாடல்களையும் ஆபாவாணன் இயற்றினார்.[4][5]
வ. ௭ண் | பாடல் | பாடகர்கள் | அளவு |
---|---|---|---|
1 | "கண்மணி நில்லு காரணம் சொல்லு" | எஸ். என். சுரேந்தர், பி. ௭ஸ். சசிரேகா | 4:46 |
2 | "மாமரத்து பூவெடுத்து மஞ்சம்" | எஸ். என். சுரேந்தர், பி. ௭ஸ். சசிரேகா | 4:30 |
3 | "ராத்திரி நேரத்து பூஜையில்" | பி. ௭ஸ். சசிரேகா | 4:35 |
4 | "தோல்வி நிலையென நினைத்தால்" | பி. பி. ஸ்ரீனிவாஸ், ஆபாவாணன் | 4:07 |
5 | "நிலைமாறும் உலகில்" | கே. ஜே. யேசுதாஸ் | 4:32 |
6 | "குடுகுடுத்த கிழவனுக்கு" | ஆபாவாணன், எஸ். என். சுரேந்தர் | 3:57 |
மேற்கோள்கள்
தொகு- ↑ Dhananjayan 2011, ப. 100.
- ↑ "நட்சத்திர படப் பட்டியல்" (in Ta). சினிமா எக்ஸ்பிரஸ்: pp. 41–43. 1 December 2002 இம் மூலத்தில் இருந்து 2 February 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240202064212/https://ibb.co/cTSgjhM.
- ↑ இன்பம் இங்கே/
- ↑ "Oomai Vizhigal (1986)". Raaga.com. Archived from the original on 27 December 2013. Retrieved 28 November 2011.
- ↑ "Oomai Vizhigal (1985) Tamil Super Hit Movie LP Vinyl Record by Manoj Giyan". Disco Music Center. Archived from the original on 23 February 2023. Retrieved 23 February 2023.
நூல் பட்டியல்
தொகு- Dhananjayan, G. (2011). The Best of Tamil Cinema, 1931 to 2010: 1977–2010. Galatta Media. OCLC 733724281.
வெளி இணைப்புகள்
தொகு- கட்டுரை.காம் பரணிடப்பட்டது 2012-03-05 at the வந்தவழி இயந்திரம்
- பிரசாத் வலைப்பதிவு
- நரேசு வலைப்பதிவு