பி. பி. ஸ்ரீனிவாஸ்
பி. பி. ஸ்ரீநிவாஸ் (Prativadi Bhayankara Sreenivas, செப்டம்பர் 22, 1930 - ஏப்ரல் 14, 2013)[1] தென்னிந்தியாவின் பழம்பெரும் திரைப்படப் பின்னணிப் பாடகர். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உட்படப் 12 இந்திய மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடியுள்ளார். இவர் இந்தியாவில், ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள காக்கிநாடா மாவட்டத்தில் பிறந்தார்.
பி. பி. ஸ்ரீநிவாஸ் | |
---|---|
பின்னணித் தகவல்கள் | |
பிறப்பு | செப்டம்பர் 22, 1930, காக்கிநாடா, ஆந்திரப் பிரதேசம் |
இறப்பு | ஏப்ரல் 14, 2013 | (அகவை 82)
இசை வடிவங்கள் | பின்னணிப் பாடகர் |
தொழில்(கள்) | பாடகர் |
இசைக்கருவி(கள்) | இசைக்கலைஞர் |
இசைத்துறையில் | 1951 - 2013 |
ஸ்ரீநிவாசின் முதல் பாடல் ஜெமினி தயாரித்து 1951 இல் வெளிவந்த மிஸ்டர் சம்பத் என்ற இந்திப் படத்தில் இடம்பெற்றது. கனஹிபரது என்ற பாடலை முதன் முதலில் பாடினார். இவரது முதல் தமிழ்ப் பாடல் சிந்தனை என் செல்வமே" என்ற பாடல், 1953 இல் வெளிவந்த ஜாதகம் படத்தில் இடம்பெற்றது.
ஆங்கிலம், உருது உட்பட எட்டு மொழிகளில் புலமை பெற்றவர். இவற்றில் பல பாடல்களையும் எழுதியுள்ளார். மதுவண்டு என்ற புனைப்பெயரில் தமிழ்க் கவிதைகளை எழுதினார். வறுமையின் நிறம் சிவப்பு, நண்டு ஆகிய திரைப்படங்களில் வரும் இந்திப்பாடல்களை இவரே இயற்றினார்.
தமிழ்த் திரையிசை உலகில் டி. எம். சௌந்தரராஜன் புகழுச்சியில் இருந்த காலத்தில் ஸ்ரீநிவாஸ் அவருக்கு அடுத்த இடத்தில் விளங்கினார். உச்சஸ்தாயியில் பாடிவந்தோர் காலகட்டத்தில், மென்மையான குரல் கொண்டு இனிமையைக் கூட்டி, பாடுவதில் ஒரு புதிய பாணியை கொண்டுவந்தவர். 'காலங்களில் அவள் வசந்தம்' எனும் பாடலைப் பாடி பெரும்புகழை ஈட்டினார். தமிழ்ப் படங்களில் ஜெமினி கணேசனுக்கும், கன்னடத்தில் ராஜ்குமாருக்கும் இவர் அநேகமாக அவர்களின் அனைத்துப் படங்களிலும் பின்னணி பாடியுள்ளார்.
விருதுகள்
தொகு- கர்நாடக மாநிலத்தின் இரண்டாவது மிக உயர்ந்த விருது, மாநில முதல்வர் வழங்கிய மதிப்புமிக்க கன்னட ராஜ்யோத்சவ விருது
- தமிழக மாநிலத்தின் கௌரவ கலைமாமணி விருது.
- சூப்பர் ஸ்டாரின் குடும்பத்தினர் வழங்கிய டாக்டர் ராஜ்குமார் ஹர்தா விருது.
- மதிப்புமிக்க கர்நாடக நாடோஜா விருது - கன்னட பல்கலைக்கழகம் , ஹம்பி , கர்நாடக ஆளுநரால் கர்நாடகா வழங்கியது.
- தமிழ்நாடு மாநில திரைப்பட கௌரவ விருது - 2002 இல் கலைவாணர் விருது
இறப்பு
தொகுஸ்ரீனிவாஸ் சென்னையில் 2013 ஏப்ரல் 14 அன்று தனது 82 வயதில் இறந்தார். மதிய உணவை சாப்பிடும்போது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. அடுத்த நாள் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது. இவருக்கு மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர்.
மேற்கோள்கள்
தொகு- ↑ http://timesofindia.indiatimes.com/entertainment/regional/telugu/news-interviews/Playback-singer-PB-Sreenivas-died/articleshow/19540833.cms Playback singer PB Sreenivas died The Times of India
வெளி இணைப்புகள்
தொகு- ஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் P.B. Sreenivas
- யூடியூபில் Srinivas with Lata Mangeshkar
- பிபிசி தமிழோசையில் ஸ்ரீநிவாசின் நேர்காணல்-1
- பிபிசி தமிழோசையில் ஸ்ரீநிவாசின் நேர்காணல்-2
- பி.பி.ஸ்ரீநிவாசின் இணையத்தளம் பரணிடப்பட்டது 2011-06-15 at the வந்தவழி இயந்திரம்
- http://pbsrinivas.24by7music.com (songs) பரணிடப்பட்டது 2015-10-18 at the வந்தவழி இயந்திரம்
- List of Malayalam Songs sung by PB Sreenivas
- List of Hindi Songs sung by PB Sreenivas