வறுமையின் நிறம் சிவப்பு
கைலாசம் பாலசந்தர் இயக்கத்தில் 1980 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
வறுமையின் நிறம் சிவப்பு (Varumayin Niram Sivappu) 1980 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1]கே. பாலச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கமல்ஹாசன்,ஸ்ரீதேவி மற்றும் பலர் நடித்திருந்தனர்.[2] புரட்சிகர சிந்தனை உள்ள வேலை கிடைக்காத வறுமையில் வாடும் இளைஞனாகக் கமல் இத்திரைப்படத்தில் நடித்திருந்தார்.
வறுமையின் நிறம் சிவப்பு | |
---|---|
இயக்கம் | கே. பாலச்சந்தர் |
தயாரிப்பு | ஆர். வெங்கட்ராமன் (பிரேமாலயா ஆர்ட்ஸ்) |
இசை | எம். எஸ். விஸ்வநாதன் |
நடிப்பு | |
ஒளிப்பதிவு | பி. எஸ். லோகநாத் |
படத்தொகுப்பு | என். ஆர். கிட்டு |
வெளியீடு | 6 நவம்பர் 1980 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
இத்திரைப்படம் தெலுங்கில் 'அகாலி ராஜ்யம்' எனும் பெயரில் மொழி மாற்றம் செய்து வெளியிடப்பட்டது. பின்னர் 1983 ஆண்டில் இயக்குநர் கே. பாலச்சந்தர் இந்தி மொழியில் நடிகர் கமல்ஹாசன், அனிதா ராஜ் ஆகியோரை வைத்து 'ஜாரா சீ ஜிண்டகி' எனும் பெயரில் மீண்டும் எடுத்தார்.
நடிகர்கள்
தொகு- கமல்ஹாசன் - சுந்தரம் ரங்கன் (தமிழ்), ஜெ. ரங்காராவ்-(தெலுங்கு)
- ஸ்ரீதேவி - தேவி
- எஸ். வி. சேகர் - தம்பு, ரங்கனின் நண்பன்.
- திலீப் - ரங்கனின் நண்பன்.
- பூர்ணம் விஸ்வநாதன் - சுந்தரம் பிள்ளை, ரங்கனின் தந்தை (தமிழ் மொழியில்)
- ஜெ. வி. ரமணமூர்த்தி - ஜொன்னலகட்ட வெங்கட ராமநய்யா பந்தலு, ரங்கனின் தந்தை (தெலுங்கு மொழியில்).
- பிரதாப் போத்தன் - பிரதாப், நாடக கம்பெனி இயக்குநர்
- ஒரு விரல் கிருஷ்ணா ராவ் - தேவியின் தந்தை
- தேங்காய் சீனிவாசன் (சிறப்புத் தோற்றம் )
பாடல்கள்
தொகுஇத்திரைப்படம் எம். எஸ். விஸ்வநாதன் இசையமைப்பில் வெளியான திரைப்படமாகும்.
எண் | பாடல் | பாடலாசிரியர் | பாாடகர்கள் |
1 | நல்லதோர் வீணை செய்தே | மகாகவி சுப்பிரமணிய பாரதியார் | எஸ். பி. பாலசுப்பிரமணியம் |
2 | தீர்த்தக் கரையினிலே | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | |
3 | சிப்பி இருக்குது | கண்ணதாசன் | எஸ். ஜானகி, எஸ். பி. பாலசுப்பிரமணியம் |
4 | பாட்டு ஒன்னு பாடு தம்பி | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | |
5 | ரங்கா ரங்கையா | வாலி | பி. சுசீலா |
6 | து கய் ராஜா | பி. பி. ஸ்ரீனிவாஸ் | எஸ். ஜானகி |
விருதுகள்
தொகு- 1980 ஆம் ஆண்டுக்கான சிறந்த திரைப்படத்துக்கான தமிழக அரசின் திரைப்பட விருது - முதல் பரிசு
மேற்கோள்கள்
தொகு- ↑ ஜூன் 01, பதிவு செய்த நாள்:; 2020. "மறக்க முடியுமா? வறுமையின் நிறம் சிவப்பு". Dinamalar. பார்க்கப்பட்ட நாள் 2021-12-13.
{{cite web}}
:|last2=
has numeric name (help)CS1 maint: extra punctuation (link) CS1 maint: numeric names: authors list (link) - ↑ "Varumayin Niram Sivappu". cinesouth. Archived from the original on 21 செப்தெம்பர் 2010. பார்க்கப்பட்ட நாள் 16 September 2013.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help)