ஆபாவாணன்
ஆபாவாணன் (Aabavanan) தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளராவார். கதையாசிரியர், வசன எழுத்தாளர், பாடலாசிரியர், பாடகர் எனப் பன்முகங்களில் இயங்கினார். குமாரபாளையத்திற்கு அருகிலுள்ள தேவூர் என்ற ஊரில் பிறந்தார். இவரின் தந்தை ஆறுமுகம், தாயார் பாவாயி என்பவர்களாவர். இயற்பெயர் மதிவாணன். தந்தை தாய் ஆகியோரின் முதல் எழுத்துக்களை எடுத்து ஆபாவாணன் என தன் பெயரை மாற்றிக்கொண்டார்.
ஆபாவாணன் Aabavanan | |
---|---|
பிறப்பு | குமாரபாளையம், நாமக்கல் மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா |
பணி | திரைப்பட இயக்குநர், திரைக்கதை ஆசிரியர் |
அறியப்படுவது | ஊமை விழிகள், செந்தூரப்பூவே |
திரை வாழ்க்கை
தொகுதிரைப்படக்கல்லூரியில் பயின்ற இவர் எடுத்த முதல் படம் ஊமை விழிகள். இதுவே திரைப்படக் கல்லூரி மாணவர்கள் எடுத்த முதல் படமுமாகும். உழவன் மகன், செந்தூரப்பூவே, தாய் நாடு, இணைந்த கைகள், காவியத் தலைவன், முற்றுகை, கருப்பு ரோஜா முதலான படங்களை தயாரித்திருக்கிறார். மனோஜ்-கியான் என்ற இரட்டையரை (இசையமைப்பாளர்களை) ஊமை விழிகள் படம் மூலம் தமிழுக்கு அறிமுகம் செய்தார்.
திரைப்பட விபரம்
தொகுபங்காற்றிய திரைப்படங்கள்
தொகு- ஊமை விழிகள் (1986 திரைப்படம்)[1][2]
- உழவன் மகன் (திரைப்படம்)
- செந்தூரப்பூவே
- இணைந்த கைகள்[3]
- அண்ணன் என்னடா தம்பி என்னடா
- காவியத் தலைவன் (1992 திரைப்படம்)
- முற்றுகை (திரைப்படம்)
- கருப்பு ரோஜா[4][5][6][7]
இதர பணிகள்
தொகுகங்கா-யமுனா-சரஸ்வதி என்ற நெடுந்தொடரை தொலைக்காட்சிக்காக எடுத்தார். இது ராஜ் தொலைக்காட்சியில் வந்தது.
துணுக்குகள்
தொகுராம்கி, அருண் பாண்டியன் ஆகியோர் இவருடன் திரைப்படக் கல்லூரியில் படித்தவர்கள். இவர்கள் நடிப்புத்துறையிலும், இவர் இயக்குநர் துறையிலும் பயின்றார்கள்.
ஊமை விழிகள் [1][8][9][10] படத்தில் "தோல்வி நிலையென நினைத்தால்" , "குடுகுடுத்த கிழவனுக்கு கல்யாண பேச்சு" ஆகிய பாடல்களையும் தம்பி அர்ஜூனா படத்தில் புலிகள் கொஞ்சம் பதுங்கும்போது என்ற பாடலையும் இரண்டு பேர் படத்தில் வரான் வரான் பூச்சாண்டி ரயிலு வண்டியிலே என்ற பாடலை எழுதி பாடியுள்ளார்.
தமிழ் திரையுலகுக்கு டி. டி. எசு என்னும் ஒலி வடிவத்தை தனது கருப்பு ரோஜா படம் மூலம் முதன் முதலாக அறிமுகப்படுத்தினார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "Filmography of oomai vizhigal". cinesouth.com. Archived from the original on 9 December 2012. பார்க்கப்பட்ட நாள் 2011-11-28.
- ↑ Kumar, S. R. Ashok (2003-03-19). "'Set' to make waves ?". தி இந்து. Archived from the original on 2004-05-30. பார்க்கப்பட்ட நாள் 2012-01-13.
- ↑ "Filmography of inaindha kaigal". cinesouth.com. Archived from the original on 20 April 2010. பார்க்கப்பட்ட நாள் 2012-01-19.
- ↑ "From piano to oboe, he has played it all". தி இந்து. 2007-02-11. Archived from the original on 13 February 2007. பார்க்கப்பட்ட நாள் 26 May 2016.
- ↑ "டோடோவின் ரஃப் நோட்டு". Archived from the original on 15 February 2006. பார்க்கப்பட்ட நாள் 26 May 2016.
- ↑ "Google Groups". பார்க்கப்பட்ட நாள் 26 May 2016.
- ↑ "Mahadevan\HTMLS\1996 cinema awards". Archived from the original on 1999-02-03. பார்க்கப்பட்ட நாள் 2009-08-11.
- ↑ "Find Tamil Movie Oomai Vizhigal". jointscene.com. Archived from the original on 2 January 2012. பார்க்கப்பட்ட நாள் 2011-11-28.
- ↑ S. R. Ashok Kumar (2003-03-19). "'Set' to make waves ?". தி இந்து. Archived from the original on 2004-05-30. பார்க்கப்பட்ட நாள் 2012-01-13.
- ↑ "Oomai Vizhigal Songs". Raaga.com. பார்க்கப்பட்ட நாள் 2011-11-28.