முற்றுகை (திரைப்படம்)

மனோபாலா இயக்கிய 2003 ஆண்டையத் திரைப்படம்

முற்றுகை (Mutrugai) 1993 ஆம் ஆண்டு வெளியான ஓர் இந்திய தமிழ் அதிரடித் திரைப்படமாகும். இப்படத்தில், அருண்பாண்டியன், பானுப்ரியா, ரஞ்சிதா, கீதா, ஆர். பி. விஸ்வம், வெண்ணீறாடை மூர்த்தி, காந்திமதி, சார்லி, பாண்டு,  விஜய கிருஷ்ணராஜ், சேது விநாயகம் மற்றும் பலர் நடித்துள்ளனர். சித்தார்த்தா இசை அமைத்து, 14 ஜனவரி 1993 ஆம் தேதி இப்படம் வெளிவந்தது. பின்னர், இந்தி மொழியில் ஜன்தா கி அதலாத் என்ற பெயரில் மறு ஆக்கம் செய்யப்பட்டது.[1][2][3]

முற்றுகை
இயக்கம்மனோபாலா
தயாரிப்புஜி. எம். வரலக்ஷ்மி
மோகன் ராவ்
கதைஆபாவாணன்
ஆர். பி. விஸ்வம் (வசனம்)
இசைசித்தார்த்தா
நடிப்புஅருண்பாண்டியன்
பானுப்ரியா
ரஞ்சிதா
கீதா
ஆர். பி. விஸ்வம்
வெண்ணீறாடை மூர்த்தி
காந்திமதி
சார்லி
பாண்டு
விஜய கிருஷ்ணராஜ்
சேது விநாயகம்
ஒளிப்பதிவுஎஸ். ஜெயச்சந்திரன்
படத்தொகுப்புகே. ஆர். கௌரி ஷங்கர்
கலையகம்ஸ்ரீ வரலக்ஷ்மி சினி புரொடக்ஷன்ஸ்
வெளியீடுசனவரி 14, 1993 (1993-01-14)
ஓட்டம்145 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள்தொகு

 • அருண்பாண்டியன் - பாலா
 • பானுப்ரியா - பவானி
 • ரஞ்சிதா - கௌரி
 • கீதா - சாரதா
 • ஆர். பி. விஸ்வம் - மாசிலாமணி
 • வெண்ணீறாடை மூர்த்தி
 • காந்திமதி
 • சார்லி - மணி
 • பாண்டு - பாண்டுரங்கன்
 • விஜய கிருஷ்ணராஜ் - மாவட்ட ஆட்சியர்
 • சேது விநாயகம் - டி. ஐ. ஜி
 • சாமிக்கண்ணு
 • இடிச்சபுளி செல்வராஜ் - வடிவேலு

கதைச்சுருக்கம்தொகு

கடந்த காலத்தில், 16 நபர்களை உயிருடன் எரித்த குற்றவாளி பாலகிருஷ்ணன் ( சி.அருண் பாண்டியன் ) தப்பிக்கும் காட்சியிலிந்து படம் தொடங்குகிறது. டி.எஸ்.பி பவானி ( பானுப்ரியா ) அவனை பிடிக்க விரும்பும் அதே வேளையில், அவனை கொலை செய்ய வேண்டும் என்று மசிலிமணி (ஆர்.பி.விஸ்) விரும்புகிறார். ஒரு கிராம விழாவில் பாலா மாசிலாமணியை கொல்ல முயற்சிக்கிறான். முயற்சி தோல்வியில் முடிகிறது. எனவே பாலா கிராமத்திற்கு திரும்ப, கிராமவாசிகள் அவனை ஆதரித்து, காப்பாற்ற முயற்சி செய்கிறார்கள். இதற்கிடையில், போலீசார் குற்றவாளியை பிடிக்க கிராமத்தைச் சுற்றி வளைத்தனர்.

கடந்த காலத்தில், பாலாவிற்கும் மாசிலாமணிக்கும் இடையே நடந்த சம்பவங்களையும், பகை எவ்வாறு இருவருக்கிடையே உண்டானது என்பதையும் மாசிலிமணியின் மனைவியான சாரதா (கீதா) பவானியிடம் வெளிப்படுத்துகிறாள். பாலா மாசிலாமணியை கொல்ல வேண்டும் என்று உறுதியாக இருக்கும் போது, மாசிலாமணிக்கு என்னவானது? பாலா விடுதலை செய்யப்பட்டானா? போன்ற கேள்விகளுக்கு விடைக் காணுதலே மீதிக் கதையாகும்.

இசைதொகு

சித்தார்தா இப்படத்திற்கு இசை அமைத்தார், இப்படத்தில் உள்ள 7 பாடல்களையும் எழுதியவர் ஆபாவாணன் ஆவார்.

ட்ராக் பாடல் காலம்
1 "ஆத்து குள்ள" 4:50
2 "பரிசம் பொடா வரலமா" 5:00
3 "கூத்து" 4:34
4 "கன்னி மயில்" (1) 0:54
5 "கன்னி மயில்" (2) 1:35
6 ஆறும் இல்லை நீரும் இல்லை 0:42
7 நீரோடும் 2:08

விமர்சனம்தொகு

இத்திரைப்படம் "ஒரு சராசரி பொழுதுபோக்குப் படம்" என்று விமர்சிக்கப்பட்டது.[4]

மேற்கோள்கள்தொகு

 1. "spicyonion.com".
 2. "www.cinesouth.com".
 3. "www.jointscene.com".
 4. Malini Mannath (1993-01-17). Average Entertainer. p. 7. https://news.google.com/newspapers?id=-4llAAAAIBAJ&sjid=nJ4NAAAAIBAJ&pg=1634,1465197. பார்த்த நாள்: 2016-05-27. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=முற்றுகை_(திரைப்படம்)&oldid=3271538" இருந்து மீள்விக்கப்பட்டது