டிஸ்கோ சாந்தி
டிஸ்கோ சாந்தி என்று அறியப்படும் சாந்தக் குமாரி என்பவர் தென்னிந்தியத் திரைப்பட நடிகையாவார். இவர் குணச்சித்திரக் கதாப்பாத்திரங்கள் மற்றும், ஒரு பாடலுக்கு ஆடுகின்ற நடன மங்கையாக திரைப்படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம் உள்ளிட்ட தென்னிந்திய திரைப்படங்களிலும் பாலிவுட்டிலும் நடித்துள்ளார்.
டிஸ்கோ சாந்தி (எ) சாந்த குமாரி | |
---|---|
பிறப்பு | 28 ஆகத்து 1965[1] சென்னை, தமிழ்நாடு |
தேசியம் | இந்தியன் |
குடியுரிமை | இந்தியா |
பணி | நடிகை |
செயற்பாட்டுக் காலம் | 1985–1996 |
பெற்றோர் | சி. எல். ஆனந்தன்) |
வாழ்க்கைத் துணை | சிறீஹரி [2](1996 - 2013இல் இவர் மறைந்தார்)[3] |
பிள்ளைகள் | 2 மகன்கள், 1 மகள் (இறந்து விட்டார்) |
இவர் நடிகர் சி. எல். ஆனந்தனின் மகளும், நடிகை லலிதா குமாரியின் சகோதரியும் ஆவார். மலையாள திரைப்பட நடிகரான மோகன்லாலுடன் கதாநாயகியாக நடித்த படம் பாதியில் நின்றதால், ஒரு பாடலுக்கு ஆடுவதற்கு வந்தாக தெரிவித்துள்ளார். இவர் ஊமை விழிகள் திரைப்படத்தில் நடனமாடிய இராத்திரி நேரத்து பூஜையில் என்ற பாடல் பிரபலம் ஆனதால், அதன் பின் நிறைய படங்களுக்கு ஒரு பாடலில் ஆடும் வாய்ப்பினைப் பெற்றார்.[4]
திரைப்படத்துறை
தொகுஆதாரங்கள்
தொகு- ↑ dinakaran. Web.archive.org. Retrieved on 10 June 2014.
- ↑ "Personal life & Info". Behind Woods. http://www.behindwoods.com/tamil-movie-news/dec-06-02/13-12-06-actress.html.
- ↑ "Personal life & Info". The Hindu. http://www.thehindu.com/features/cinema/actor-srihari-dies-in-mumbai/article5218575.ece. பார்த்த நாள்: 10 October 2013.
- ↑ [``அப்போ டான்ஸர், இப்போ என் பசங்களுக்காக வாழ்றேன்!" - டிஸ்கோ சாந்தி : 'அப்போ இப்போ' பகுதி 15 சினிமா விகடன்- நாள் 19/06/2018]