காவல் கீதம்

எஸ். பி. முத்துராமன் இயக்கத்தில் 1992 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

காவல் கீதம் (Kaaval Geetham) என்பது 1992 ஆம் ஆண்டய தமிழ் அதிரடி, காதல் திரைப்படமாகும். இதை எஸ். பி. முத்துராமன் இயக்க, விக்ரம், சித்தாரா ஆகியோர் முன்னணி பாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார்.

காவல் கீதம்
இயக்கம்எஸ். பி. முத்துராமன்
தயாரிப்புகே. எஸ். சீனிவாசன்
சிவராமன்
கதைவேதம் புதிது கண்ணன்
இசைஇளையராஜா
நடிப்புவிக்ரம்
சித்தாரா
சார்லி
சின்னி ஜெயந்த்
ஜி. சீனிவாசன்
சசிகுமார்
ஒளிப்பதிவுடி. எஸ். விநாயகம்
படத்தொகுப்புஆர். விட்டல்
கலையகம்வாசன் பிரதர்ஸ்
விநியோகம்வாசன் பிரதர்ஸ்
வெளியீடுபெப்ரவரி 14, 1992 (1992-02-14)
ஓட்டம்124 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கதை தொகு

பிரியா (சித்தாரா) ஒரு குற்றப் பலணாய்வு பத்திரிகையாளர். ஆமில வீச்சால் முகம் சிதைக்கப்பட்ட ஒரு பெண்ணின் கற்பழிப்பு மற்றும் கொலை குறித்து அவர் விசாரித்து வருகிறார். காவல் ஆய்வாளர் அசோக் (விக்ரம்) அதே பகுதிக்கு பணிக்கு நியமிக்கப்படுகிறார். ஒரு சமயம் அவர் பிரியாவை கொலைகாரனின் அடியாளிடமிருந்து காப்பாற்றுகிறார். கொலைகாரனைக் கைதுசெய்து, பிரியாவுடன் காதல் தொடங்குகிறார். ஒரு நாள், அர்த்தநாரி (சின்னி ஜெயந்த்); என்ற ஒரு நபர் அசோக்கிடம் தனது பக்கத்து வீட்டுக்காரரும் நடனக் கலைஞருமான ரமேஷ் (சாய்குமார்) என்பவர் தனது மனைவியுடன் கத்தி சண்டையிட்டப் பிறகு கொலை செய்திருக்கலாம் என சந்தேகிப்பதாகவும் குறிப்பிடுகிறார்;.

ரமேஷின் மகளான சிறுமியை பிரியாவும் அசோக்கும் தற்செயலாக சந்திக்கின்றனர். சிறுமியின் தாய் தங்கம் ரமேஷால் கிராமத்தில் ஏமாற்றப்பட்டதாக விசாரணையில் தெரிய வருகிறது. ரமேசும் அவரது காதலி ரத்னாவும் (டிஸ்கோ சாந்தி) தங்கத்தை கொன்று, சிறுமியையும் கொல்ல செய்ய முயற்சிக்கிறார்கள். ஆனால் அசோக்கால் சிறுமி காப்பாற்றப்படுகிறார்கள். குற்றவியல் விசாரணை தொடரும்போது, ரமேஷ் மெதுவாக சாட்சிகளை பல்வேறு நேர்மையற்ற வழிகளில் கலைக்கிறார்.

பின்னர் என்ன ஆகிறது என்பது கதையின் முக்கிய அம்சமாக அமைகிறது.

நடிகர்கள் தொகு

தயாரிப்பு தொகு

பெஹிண்ட்வுட்சுக்கு அளித்த செவ்வியில் விக்ரம் தனக்கு வாய்ப்பு அளித்த இயக்குநருக்கு நன்றி தெரிவித்தார்.[1]

இசைப்பதிவு தொகு

இப்படத்தில் இளையராஜா இசையமைத்த ஆறு பாடல்கள் இருந்தன. பாடல்களை பிறைசூடன் மற்றும் வாலி எழுதியுள்ளனர்.[2]

பாடல் தலைப்பு பாடகர்கள் நீளம்
(நிமிடங்கள்)
"எனது திட்ட" எஸ். ஜானகி, எஸ். பி. பாலசுப்பிரமணியம் 4:48
"எத்தன்னை பேர" சித்ரா 4:29
"குற்றால காற்று" எஸ். ஜானகி, எஸ். பி. பாலசுப்ரமண்யம் 4:45
"சொக்கனுக்கு வாச்ச" எஸ். ஜானகி, எஸ். பி. பாலசுப்ரமண்யம் 4:49
"தம்மர தம்மரோ" சித்ரா, எஸ். பி. பாலசுப்பிரமண்யம் 4:37
"தென் பொதிகை" சித்ரா, மனோ 4:45

குறிப்புகள் தொகு

  1. https://www.behindwoods.com/tamil-movies-cinema-news-16/vikram-sings-malare-from-premam-in-behindwoods-gold-medal-2015.html
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2019-08-05. பார்க்கப்பட்ட நாள் 2021-01-11.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=காவல்_கீதம்&oldid=3659824" இலிருந்து மீள்விக்கப்பட்டது