எம். எசு. பாசுகர்

தமிழ்த் திரைப்பட நடிகர்

எம். எஸ். பாஸ்கர் அதாவது முத்துப்பேட்டை சோமையா தேவர் பாசுகர் (M. S. Bhaskar) என்பவர் ஒரு தமிழ் நடிகரும் பின்னணிக் குரல் கொடுப்பவரும் ஆவார். இவரது பெற்றோர் சோமையா தேவர்–சத்யபாமா ஆவர். இவரது தந்தை முத்துப்பேட்டையில் பெரும் நிலக்கிழார் அதாவது ஜமீன்தாராக வாழந்துவந்தார். இவருக்கு இரண்டு மூத்த சகோதரிகள் உள்ளனர். முதலாமவர் ஹேமாமாலினி சென்னையில் பின்னணிக் குரல் கொடுப்பவராகவும் இரண்டாமவர் தாரா வட இந்திய திரையில் மும்பையில் பின்னணிக் குரல் கொடுப்பவராகவும் உள்ளனர். இவருக்கு கிரிதரன் என்ற தம்பி ஒருவர் உள்ளார். 1987 ஆம் ஆண்டு கதாசிரியரும், நடிகருமான விசுவின் திருமதி ஒரு வெகுமதி என்ற படத்தின் மூலம் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் அறிமுகமானார்.[1][2]

எம். எஸ். பாஸ்கர்
தர்மதுரையில் பாஸ்கர்
பிறப்புமுத்துப்பேட்டை சோமையா பாஸ்கர்
13 செப்டம்பர் 1957 (1957-09-13) (அகவை 67)
நாகப்பட்டினம், மதராசு மாநிலம் (தற்போது தமிழ்நாடு), இந்தியா
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
1987– நடப்பு
வாழ்க்கைத்
துணை
சீலா
பிள்ளைகள்2

இவரது தந்தை முத்துப்பேட்டையைச் சேர்ந்தவராக இருந்தாலும், இவர் பிறந்து வளர்ந்தது நாகப்பட்டினம். நாகப்பட்டினத்திலும் சென்னையிலும் பள்ளிப் படிப்பை முடித்த இவர் சென்னை பச்சையப்பா கல்லூரியில் கல்லூரிப் படிப்பை முடித்தார். இவர் தொலைக்காட்சித் தொடர்களான சின்னப் பாப்பா பெரியப் பாப்பா, செல்வி, திரைப்படங்கள் சிவகாசி, மொழி போன்றவற்றால் பெரிதும் அறியப்பட்டார். இவர் மொழி திரைப்படத்திற்காக தமிழக அரசின் சிறந்த குணச்சித்திர நடிகர் விருது பெற்றார்.[3] இவர் 75 படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.

இவர் பற்பசை நிறுவனத்தில் விற்பனையாளராகவும் ஆயுள் காப்பீட்டுக் கழகத்தில் முகவராகவும் பணி செய்துள்ளார். காமராஜ் படத்தில் காமராஜ் பாத்திரத்துக்கும் சேது படத்தில் நாயர் இராமன் பாத்திரத்துக்கும் பின்னணிக் குரல் கொடுத்துள்ளார்.

மேற்கோள்கள்

தொகு
  1. "Talent bides its time". The Hindu. 13 November 2009. https://www.thehindu.com/todays-paper/tp-features/tp-cinemaplus/talent-bides-its-time/article3022151.ece. 
  2. Suganth, M.. "There's no spontaneity in acting; every actor needs to do homework". https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/Theres-no-spontaneity-in-acting-every-actor-needs-to-do-homework/articleshow/48508566.cms. 
  3. "The Hindu : Cinema Plus / Cinema : Talent bides its time". web.archive.org. 2009-12-03. Archived from the original on 2009-12-03. பார்க்கப்பட்ட நாள் 2022-09-22.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எம்._எசு._பாசுகர்&oldid=4117528" இலிருந்து மீள்விக்கப்பட்டது