டிமான்ட்டி காலனி (திரைப்படம்)

டிமான்ட்டி காலனி 2015 ஆவது ஆண்டில் வெளியான ஒரு இந்தியத் தமிழ் திகில் திரைப்படமாகும். அசய் ஞானமுத்து எழுதி இயக்கிய இப்படத்தில் அருள்நிதி, ரமேஷ் திலக், சனந்த், அபிசேக் ஜோசப் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.[2][2][3] அரவிந்த் சிங் ஒளிப்பதிவு செய்த இத்திரைப்படத்தின் பாடல்களுக்கு கேபா ஜெர்மியா இசையமைத்திருந்தார்.[4] பின்னணி இசையை எசு. சின்னா உருவாக்கியிருந்தார்.

டிமான்ட்டி காலனி
சுவரிதழ்
இயக்கம்அசய் ஞானமுத்து
தயாரிப்புமு. க. தமிழரசு
கதைஅசய் ஞானமுத்து
இசைகேபா ஜெர்மியா (பாடல்கள்)
எசு. சின்னா (பின்னணி இசை)[1]
நடிப்புஅருள்நிதி
ரமேஷ் திலக்
சனந்த்
அபிசேக் ஜோசப்
ஒளிப்பதிவுஅரவிந்த் சிங்
படத்தொகுப்புபுவன் சீனிவாசன்
கலையகம்மோகனா மூவிசு
விநியோகம்சிறீ தேனாண்டாள் பிலிம்சு
வெளியீடுமே 22, 2015 (2015-05-22)
ஓட்டம்113 நிமிடங்கள்
நாடு இந்தியா
மொழிதமிழ்
ஆக்கச்செலவு2 கோடி
(US$2,62,200)
மொத்த வருவாய்27 கோடி
(US$3.54 மில்லியன்)

மேற்கோள்கள்தொகு