சனந்த்

இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் உள்ள ஒரு நகரம்

சனந்த் (Sanand) இந்தியாவின் குஜராத் மாநிலத்தின் அகமதாபாத் மாவட்டத்தின் சனந்த வட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரமும், நகராட்சியும் ஆகும். சனந்த் நகரத்தில் இந்திய மற்றும் பன்னாட்டு அளவிலான பெரிய நிறுவனங்களின் தொழிற்சாலைகள் அமைந்துள்ளது. அவைகளில் குறிப்பிடத்தக்கவைகள்: டாடா மோட்டார்ஸ், போர்டு மோட்டார்ஸ், நெஸ்லே இந்தியா, ஜெனரல் எலக்ட்ரிக், கோகோ-கோலா, கால்கேட்-பால்மோலிவ், மேக்சிஸ் முதலியவைகள்.[1]அகமதாபாத்திற்கு மேற்கே 22 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சனந்த் நகரம், அகமதாபாத் நகரத்தின் செயற்கைக்கோள் நகரமாக உள்ளது.

சனந்த்
நகரம்
சனந்த் is located in குசராத்து
சனந்த்
சனந்த்
இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் சனந்த் நகரத்தின் அமைவிடம்
சனந்த் is located in இந்தியா
சனந்த்
சனந்த்
சனந்த் (இந்தியா)
ஆள்கூறுகள்: 22°59′N 72°23′E / 22.98°N 72.38°E / 22.98; 72.38
நாடு இந்தியா
மாநிலம்குஜராத்
மாவட்டம்அகமதாபாத்
தோற்றுவித்தவர்India
ஏற்றம்
38 m (125 ft)
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்95,890
மொழிகள்
 • அலுவல் மொழிகள்குஜராத்தி, இந்தி
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் சுட்டு எண்
382 110
வாகனப் பதிவுGJ38
இணையதளம்gujaratindia.com
பிரித்தானிய இந்தியாவில் 1877-ஆம் ஆண்டில் அகதாபாத் மாவட்டத்தில் சனந்த் நகரத்தின் வரைபடம்

புவியியல்

தொகு

22°59′N 72°23′E / 22.98°N 72.38°E / 22.98; 72.38 பாகையில் சனந்த் நகரம் அமைந்துள்ளது. [2] இது கடல் மட்டத்திலிருந்து 38 மீட்டர் (124 அடி) உயரத்தில் உள்ளது.

மக்கள் தொகை பரம்பல்

தொகு

2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, 157.71 ஹெக்டேர் பரப்பளவும், 19,999 குடியிருப்புகளும், 23 வார்டுகளும் கொண்ட சனந்த் நகராட்சியின் மொத்த மக்கள் தொகை 95,890 ஆகும். இதில் ஆண்கள் மற்றும் பெண்கள் முறையே 53% மற்றும் 47% அகவுள்ளது. 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் எண்ணிக்கை 12,828 ஆகவுள்ளது. பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 897 பெண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு 82.36% ஆகவுள்ளது. மக்கள்தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 608 வீதம் வாழ்கின்றனர். பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் முறையே 12783 மற்றும் 1,169 வீதம் உள்ளனர். மக்கள் தொகையில் இந்துக்கள் 89,526, இசுலாமியர்கள் 5,599, சமணர்கள் 442, கிறித்தவர்கள் 195, மற்றவர்கள் 128 பேர் வீதம் உள்ளனர்.[3]

மேற்கோள்கள்

தொகு
  1. "Gujarat 2011 – Special Investment Regions" (PDF). Government of Gujarat, India. January 2011. Archived from the original (PDF) on 2011-11-25.
  2. Falling Rain Genomics, Inc – Sanand. Fallingrain.com. Retrieved on 2012-07-11.
  3. Sanand City Population Census 2011

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சனந்த்&oldid=3284210" இலிருந்து மீள்விக்கப்பட்டது